Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
|
June 25 மேதகு அவர்களுக்கு...அஞ்சி அஞ்சி அமர்ந்தனர் வீதியில்
ஆர்ப்பாட்டங்களும் செய்தனர் பூமியில் ஊனுறக்க முயிருந்துறந்தனர் மேனியில் உடையதும் இழந்தனர் இறுதியில் சின்னஞ்சிறு இழப்பிலும் தேசத்தைப்புகழ்ந்தனர்
தேசியத்தலைவர் மறைந்தார் என்று சேதியை மறைத்தனர் சாவில்லாச்சிரஞ்சீவியென்று சருகுகள் கூறினர் சல்லாபித்த சரித்திர வாதிகள் பேசாமலே இருந்தனர். உயிருடன் இருந்தால் உடனே தெரிவான்
இறந்தவர் பெயரில் அர்ச்சனைபுரிவான் மேய்ப்பனில்லா ஆடுகளென்பதை மந்தைக்கூட்டங்கள் மதியில்லா மறந்தனர் ஓருடல் எரிந்ததுகண்டு ஒப்பாரியிட்டவன்
பாருடல் அழிந்தது கண்டு எப்பாரில் இருப்பான் இப்பாரில் ஒப்பாரில்லா தலைவன் இறந்தால் எப்பாரும் வியக்கும்படி பெருவெள்ளம் தோன்றாதோ??? துயிலுமில்லம் துணையிழந்தது ஏனோ!
தரையில் வெள்ளம் நிலைகுலைந்ததேனோ! புயலும் அலையும் நிலையழிந்ததேனோ பூமிக்குள் விதையாய் நிற்க நிரை மறந்ததேனே!!! எதிரிக்கு ஏழனம் எமக்கு ஏக்கம்
இதுகூட எம்மிடம் இல்லாது எதுக்கிந்த வீரம் கூக்குரலிட்டு கூடிக் கூடித் திரிந்தாலும் கேட்கும் விடயத்தில் திடம் நமக்கு வேண்டும் அமைதியான மனங்களினி ஆணித்தனமாய் எழட்டும் அதிதிக்கு மதிப்பளித்து ஆர்ப்பரித்துப்பாடட்டும் வீரஞ்செறிந்த இதயோனில் வீழ்ந்த வடுமாறட்டும் வணக்கத்திற்குரிய வல்லோனில் வரிப்பாடல் பாடட்டும் April 30 Kanneer inri nam - Thamilarkalகாற்றின் ஓலங்கள்… |
| ||
| Patdu Amma unthan pillai naan-un
Anpit engum mullai naan Thesam viddu thesam vanthu Paasaththitku thavikkum naan Amma unthan pillai naan-un Anpit engum mullai naan Vethanayill naan irukka Aaruthalaa yaar varuvar Pauthanaikal pauthmaa-en Vethanaikal vattuvathatku Amma unthan pillai naan-un Anpit engum mullai naan Anpill unnaaithaan Nitham nitham theduveyn Ennam enrum unnaithaan Sutti sutti oduthey Paththu maatham karuvaai Ennai kaatha annaiyay-un Privu ennai vaadduthu amma Anniya naadin aravanaippu Aattavillai en avasthaiyai Soththu sukam onrum venndaam-un Sontham onru maddum pauthum thaayay Amma unthan pillai naan-un Anpit engum mullai naan | ||
மாவீரர்களுக்காய் மண்டியிடுகின்றோம்
வெட்கப்படுகிறோம் வீரர்களே
நீங்கள் ஆடிச்சென்ற வேட்டைகளுக்கு
உடைக்கப்படாத விலங்கினை நினைத்து
வேதனைப்படுகிறோம் தீரர்களே!
ஆண்டாண்டு உமக்காய் அடுக்கப்பட்ட கவிதைகளோடு
மீண்டும் மீண்டும் மாண்டு போகும் உங்கள் உயிரை ஒப்பிடுகிறேன்
மலர்கள்பறிக்கப்பட்டும் மரங்கள் சலிக்காமல் பூப்பதுபோல்
உயிர்கள் பறிக்கப்பறிக்க போராடும் புனிதப்பூக்கள் நீர்
உண்டு உண்டு உடல் பசிப்பதுபோல் -குருதி
கண்டு கண்டு மனம் வலிக்கிதையா
எங்கள் கண்ணீருக்காய் நீர் விட்ட -செந்நீர்
எம்மைப்பார்த்துப் பழிக்குதையா
போதுமையா போதும்
எமக்காய்ப் போன உயிர்கள்!
“கண்ணீரோடே எங்கள் காலத்தைச் செலுத்துகிறோம்”
அதில் கரையட்டும் உமது செந்நீர்ச் சுவடுகள்
உங்கள் கரங்களால் மிஞ்சியுள்ள எங்கள் தோழர்களின்
தோல்களையும் தோழ்களையும் காத்துக்கொள்ளும்
போர்க்களத்தால் போன உங்கள் பூவுடலை நினைக்கும் போது
சாக்களத்தில் வாழ்வதாய் எண்ணுதெங்கள் சிந்தையையா
நகங்களை வெட்டுவதாய் விரல்கள் வேட்டையாடும் வேதனை
நரகத்தில் நடுவிலும் வேதனையை கூட்டுதையா
உமக்காய் இனித் தோண்டப்படும் துயிலகங்களை
தடைக்காய் இனிக் கோசம் போடச்சொல்லுதையா
போன உங்கள் உயிர் வளர்பிறையா?
வாழும் எங்கள் உயிர் தேய்பிறையா?
விருட்சத்தின் வாழ்விற்காய் ஒரு விழுதினை வீழ்த்தலாம்
விழுதுகளை வீழ்த்தலாமோ?
பழுதற்ற விழுதாய் பளிச்சிட்ட நீர்
பார்விட்டுப் போக பதைக்குதையா பாவி நெஞ்சம்.
கடைசியில் நாம் செலுத்தும் அஞ்சலியில்கூட
கறைபடிந்ததாய்க்கலக்கம் தோன்றுதையா
சரியோ தவறோ சாவின் சாலைகளை சாய்த்துவிடுங்கள்
சமாதானமாய்ச் சாமரங்களை வீசிவிடுங்கள்
Citazione
26 மார்கழி 2005
26 மார்கழி 2005
அலை அலை அலை அலை அலை அலை அலையே
நுரை இரை நுரை இரை நுரை இரையேபுரிந்தது, இரைச்சலுக்குக் காரணம் தெரிந்தது
இரையாய் நீ உண்டு கொண்ட உயிரெங்கள் ஓசையே
தெரிந்தது, நுரைச்சலுக்குக்காரணம் புரிந்தது
சிறயான சின்னப்பிஞ்சின் உதட்டருகின் உமிழ்நீரே
ஓ… ஓ... ஓ… ஒஓ போதும் உன்புன்னகை அலை அலையேசுனாமி வந்ததென்று என்னிதயம் வெம்பியதால்
ஒருமுறை பதறிவிட்டேன்
அநாதை என்று வந்து ஆதரவுகேட்டுநின்ற
ஆருயிர்கள் பெருகக்கண்டேன்
கடல் ஆழங்கண்டுவிட்டோம்
பெருங்கோபங் கண்டுகொண்டோம்
காட்டிவிட்ட கோபத்திலே ஏற்றிவிட்ட பெருஞ்சேதம்
மூட்டிவிட்டதே சிதை தொகை தொகையாய் எரிகிறNது
மனங்களிலும் மயாணங்கள் தெரிகிறதே...அலையலையே!கண்ணாலே கண்டதெல்லாம் கற்பனையில் வந்ததல்ல
நெஞ்சுருகி அழுதுவிட்டேன்
புண்ணான காயத்திலே அம்பாகித் துன்பமலை
மீண்டும் வந்து மோதக்கண்டேன்
மச்ச உணவுதந்து விட்டாய்
கச்ச உப்புச்சுவையுந்தந்தாய்
என்ன பிழை நாங்கள் செய்தோம் சேதத்தோடு சோகந்தந்தாய்
புரியவில்லையே புவிஎன்னும் பூவின்மேடை புனிதமில்லையோ
புதுமணமாய் மாறிக்கொள்ள மனிதரில்லையோ...அலையலையே!
புனிதமாய்ப் பிறக்கட்டும்
மலரும் புதுமலரில் சுவையாய்த் தேனருந்த
மனக்கவலைகளை புதைகுழியில் புதைத்திடுவோம்!
மழலை மனுமானாம் மண்ணில் தவந்து வந்த
மாபெரும் திருநாளை மகிழ்வாய்க் களித்திடுவோம்
பழையன கழியட்டும் ஏட்டில்மட்டும் பதியட்டும்
புதியன புலரட்டும் புதுவுலகாய் விடியட்டும்
மனதெல்லாம் சிரிக்கட்டும் சிரிப்பின் சத்தம் நித்தம்
மழையெனப்பொழியட்டும் மகிழ்ச்சிமட்டும் நிறையட்டும்
போருலகம் புசுங்கி புது பொலிவாய் விளங்கட்டும்
ஆணவங்கள் அழியட்டும் அடக்கு முறை ஒழியட்டும்
ஆயுதத்தின் அதிகாரம் அடைபட்டுச் சிறையில் கிடக்கட்டும்
ஆயள் தண்டனை குறைந்த பட்ஷம் அதற்கு வழங்கட்டும்
பூக்களுக்குப்போட்டியாக புன்னகைப் பூக்கள் மலரட்டும்
பூவுலகம் என்றும் காணா புதுநிலமாய் மாறட்டும்
உதட்டின் மூலம் உண்மைகளை உள்ளம் என்றும் பேசட்டும்
அதட்டி வாழும் ஆர்ப்பாட்டம் அதோகெதியாய் ஆகட்டும்
காசைக்கண்டு வேசம்போடும் காலம் இனி மாறட்டும்
ஆசைகளை ஆண்டு கொள்ளும் ஓசைமட்டும் கேக்கட்டும்
நஞ்சைக்கூடத் தின்னக்கேட்கும் பஞ்சம் பஞ்சாய்ப் பறக்கட்டும்
உள்ளதெல்லாம் உலகுக்கென்று ஒன்றுபட்டே இருக்கட்டும்
“இல்லை” இல்லை என்ற சொல் இல்லாமலே மறையட்டும்
“உண்டு” மட்டும் உண்மை என்றும் ஊருலகம் அறியட்டும்
ஓதும் வேதம் ஒன்றுமட்டும் ஒருகுரலாய்க் கேக்கட்டும்
ஓயாமல் மனிதநேயம் ஓடிக்கொண்டே இருக்கட்டும்
அருகன் (இத்தாலி)
24-12-2003
26 மார்கழி 2005
அலை அலை அலை அலை அலை அலை அலையே
நுரை இரை நுரை இரை நுரை இரையே
புரிந்தது, இரைச்சலுக்குக் காரணம் தெரிந்தது
இரையாய் நீ உண்டு கொண்ட உயிரெங்கள் ஓசையே
தெரிந்தது, நுரைச்சலுக்குக்காரணம் புரிந்தது
சிறயான சின்னப்பிஞ்சின் உதட்டருகின் உமிழ்நீரே
ஓ… ஓ... ஓ… ஒஓ போதும் உன்புன்னகை அலை அலையே
சுனாமி வந்ததென்று என்னிதயம் வெம்பியதால்
ஒருமுறை பதறிவிட்டேன்
அநாதை என்று வந்து ஆதரவுகேட்டுநின்ற
ஆருயிர்கள் பெருகக்கண்டேன்
கடல் ஆழங்கண்டுவிட்டோம்
பெருங்கோபங் கண்டுகொண்டோம்
காட்டிவிட்ட கோபத்திலே ஏற்றிவிட்ட பெருஞ்சேதம்
மூட்டிவிட்டதே சிதை தொகை தொகையாய் எரிகிறNது
மனங்களிலும் மயாணங்கள் தெரிகிறதே...அலையலையே!
கண்ணாலே கண்டதெல்லாம் கற்பனையில் வந்ததல்ல
நெஞ்சுருகி அழுதுவிட்டேன்
புண்ணான காயத்திலே அம்பாகித் துன்பமலை
மீண்டும் வந்து மோதக்கண்டேன்
மச்ச உணவுதந்து விட்டாய்
கச்ச உப்புச்சுவையுந்தந்தாய்
என்ன பிழை நாங்கள் செய்தோம் சேதத்தோடு சோகந்தந்தாய்
புரியவில்லையே புவிஎன்னும் பூவின்மேடை புனிதமில்லையோ
புதுமணமாய் மாறிக்கொள்ள மனிதரில்லையோ...அலையலையே!
அன்பே உன்னில் சாய்ந்து தூக்கம்
போனதே இன்று -அட
தூக்கம் போனதே இன்று
கண்ணே உன்னைக்காண
காதல் தோன்றுதே இன்று -அட
காதல் தோன்றுதே இன்று
தீயா தீயா
நீயா நீயா
மெய்யா மெய்யா
அது
மெய்யா மெய்யா
காதல் காதல் காதல் காதல் கண்களில் மோதல் -இரு
உள்ளங்கண்டதே ஊடல்
மேகம் மேகம் மோதும் சில மேளச் சத்தங்கள் கேட்கும் (-உடன்
மேகம் பொய்கையில் சேரும் )
பூக்கள் பூக்கும்
காதல் பார்க்கும்
நாளும் நாளும்
தானே வாழும்
நானும் நீயும் நீயும் நானும்.
பெண்ணே உன்னைத் தேடி
நெஞ்சம் நோகுதே வாடி - என்
மஞ்சம் நோகுதே வாடி
பூவை வண்டு தேடும்
கண்டு கொள்ள நீ வாடி - தேனை
உண்டு கொள்ள நீ வாடி
பூவா நீயா
பூவா நீயா
தேனா நீயா
தேனா நீயா
நீதான் தேனா
வாழ்ந்து பார் வாழ்க்கையை
பல்லவி
அதோ தெரியுது
அழிகிய மேகம்
இதோ தெரியுது
இதயத்தின் தாகம்
அனுவல்லவி
சிகப்பு வானம் வெளுக்குது
சின்ன மனசு சிரிக்குது
செஞ்ச தவத்துக் கெல்லாம்
சிவ லோகம் தெரியுது
சரணம்-01
புயலடித்த இதயத்திலே புது வாழ்பு தெரியுது
போதும் போதும் என்ற புலம்பல் இன்று இங்கே விடியுது
புதினோராம் வயதிலே பச்சமனம் சிறையிலே
பாவம் என்ன செஞ்சது பாரமெல்லாம் தலையில
வாழ்க்கை என்ன புரியுது வாழச்சொல்லித் தருகுது
வசந்தம் வசந்தம் என்று வன்ன மலரும் இங்கே விடியுது... ... ...
சிகப்பு வானம் வெளுக்குது
சின்ன மனசு சிரிக்குது
செஞ்ச தவத்துக் கெல்லாம்
சிவ லோகம் தெரியுது
சரணம்-02
பூங்காற்று வீசுது புது வாழ்வு மலருது
பூவின் வாசனை போலே எந்தன் வாழ்வு கொஞ்சந் தெரியுது.
மூங்கில் கோலின் துனையிலே மூச்சு வரும் வளியிலே
தாங்கி வரும் துக்கங் கூட தங்காமலே தாண்டிச்செல்ல
எல்லாம் இங்கே புரியுது இன்பம் என்ன புரியுது
வந்து பூமியில் தங்கிச் செல்ல வாடகை என்ன தெரியுது . . . . . .
சிகப்பு வானம் வெளுக்குது
சின்ன மனசு சிரிக்குது
செஞ்ச தவத்துக் கெல்லாம்
சிவ லோகம் தெரியுது
பிறந்தநாள் பாடல்
நல்ல நாள் இன்று நல்ல நாள்
நல்ல நாள் இன்று நல்ல நாள் -(2)
பூவுலகில் (பெயர்) வந்து பிறந்ததால்
பூவுலகம் உன்னைக் கண்டு மகிழ்ந்த நாள்
நல்ல நாள் இன்று நல்ல நாள்
நல்ல நாள் இன்று நல்ல நாள்
நீயாரென்று சொல்ல விதி ஆட்டத்தை வெல்ல-(2)
நல்ல நாள் இன்று நல்ல நாள்
நல்ல நாள் இன்று நல்ல நாள்
(1)
போனது போகட்டும் -அதை
பெட்டியில் போட்டு பூட்டு
தடையாகும் பாதைகள் -அதை
வெட்டியே போட்டு காட்டு -(2)
இல்லை இல்லை என்பதை
தொல்லை என்று விட்டுவிடு
இறைவனின் படைப்பென்ன
இயற்கையில் கண்டுவிடு
முடிவொன்று எடு
முடிவெது தொடு
முடியாதென்பது உனக்கில்லை. . . . . . . .!
விட்டு விடு
நீயாரென்று சொல்ல விதி ஆட்டத்தை வெல்ல-(2)
நல்ல நாள் இன்று நல்ல நாள்
நல்ல நாள் இன்று நல்ல நாள்
14-02-03
சரித்திரத்தின் சந்தியில் எனது குரல் ... !
அவதாரம் முடிந்ததென்று யார் சொன்னார் -தே
வாலையங்கள் போது மென்று யார் சொன்னார்,
வேதனைகள் தீர்த்துக் கொள்ள வேதங்கள் வந்ததென்றால்-பெருஞ்
சோதனைக் காலத்தில் சாதனை சாதித்தவரே தேவர்கள்!
காவியங்கள் போது மென்று யார் சொன்னார் -சில
கல்லறைகள் போலியென்று யார் சொன்னார் ,
சோகப் பெருமூச்சுக்குள் சுகந்தம் வீசுவதற்காய் -வீர
யாகப்புரட்சி செய்த யதார்த்த நாயகர்கள் எங்கள் தேவதைகள்!
அதிகாரப் போட்டிக்குள்ளும் சதிகாரக் கூட்டுக்குள்ளும் -தின
மகதிப்பூக்களுக்காய் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்டவர் நீர்,
அன்னைமடி மறந்து, கன்னி மடி துறந்தெம் கண்ணீருக்த் தடை -போடு
மணைக்கட்டின் படிக்கட்டுக்கள் உங்கள் பாதப்படிகள்!
மோட்ச வீட்டுக்கு முகாமிட்ட முனிவர்கள் நீவீர் –அதில்
நாசச் செய்கைக்கு நரகவாசல் காட்டிய நாயகர்நீர் ,
பூக்கள் பூக்கின்றன உங்கள் பூசைக்குக் காணிக்கை யாவதற்கு -தொடர்
பாக்கள் இசைக்கின்றன உங்கள் பாரங்களைக் குறைப்பதற்கு !
ப10ஜிக்கப்பட வேண்டிய உங்கள் வீரத்திற்கும் -நீர்
தாயகமீது கொண்ட தாகத்திற்கும் அடித்தளமிட்டவர் யார்...!
அற்பமா பூச்சிகளை ஆண்டவர் ஆக்கியகி – இன்று
சொற்மமான மக்களுக்கு நாளை சொற்கத்தைத் தேடியவர் யார்...!
புதைந்து புதைந்து கிடந்த தாமரை வேர்களுக்கும் -மனம்
புலம்பிப் புலம்பி த்திரிந்த கண்ணீர்ப் பூக்களுக்கும்,
போராடப் புது வழிகாட்டிப் புத்துணரூட்டிய புதுமைத் தலைவனை -பார்
பாராட்டிப் பாட்டிசைக்க பாவலருக்கினிப் பஞ்சந்தான் நேருமோ!
பல களங்கண்ட சிங்களக்காளையரும் -பெரும்
பலங்கொண்ட பிரபாவின் படைக்கஞ்சி,
பதுங்கிய காலம் இன்னும் பழமையாகவில்லை –திகிலாற்
பதறிய கால்கள் இன்னும் சரிநிலைக்கு வரவில்லை
உலகக் கண்களுக்கு உணர்வினைப் புரியவைத்து –முழு
அகிலம் வியக்கும் உன்னதப்போருக்கு வித்திட்டான்
அவன் தலைமையில் நடப்பது யுத்தமல்ல-இறை
ஆணையிட்டதால் நடாத்தும் தியாகத்தின் யாகமது!
அதோ, விடிவை நோக்கி ஒரு பெரும் வீதி தெரிகிறது -அங்கே
கார்மேகம் இரைத்துவிடும் புனலால் வீதியின்குருதிச் சாயம்,
கண்படாமல் கரைந்து புதைகுழிக்குள் போய்ச் சேரும் -அப்போது
பார் வியக்கும், போர் ஓயும் , புத்தொழி வீசும் ,நறுமணங்கமழும்!
அப்போது, அப்பேர் புகழ் யாவும்
யதார்த்த நாயகரின் காலடிக்கும்,
“பிரகிருதி!”எனத் தலைவனின் கிரீடத்திலும்,
புதுமலர் தெளிக்கக் காத்திருப்போம்-காலங்காலமாய் !!
அருகன்
இத்தாலி
குறிப்பு- “பிரகிருதி”அரசாட்சிக்குரிய உறுப்பேழு உடையவன், படைப்புக்கு முதலானவன்...
இனியும்காதலித்துப்பார்!
அருகன்
பலெர்மோ- இத்தாலி
இளைஞனே!
நீ காதலித்ததுண்டா - உன்
காதலுக்குக் காயங்கள் உண்டா
காயங்களில் குருதி வடிந்ததுண்டா-அந்தக்
குருதியிலும் கண்ணீருண்டா
இப்போது நீ எழுதும் எழுத்துக்களில் கவிதை இருக்கும்
அந்தக் கவிதையிலும் கண்ணீர்த்துளி கசிந்திருக்கும்
காலங்கடந்தும் ஞாலத்தில் நிஜமாய் நிலைத்திருக்கும்
காற்றுள்ள இடமெல்லாம் அது கலகஞ்செய்திருக்கும்
வானில் இருந்து வீழ்ந்த துளி உனக்கு வார்த்தை தரவில்லையா
மண்ணில் இருந்து மீண்ட பனி உனக்கு மீதந் தரவில்லையா
மரஞ்செடிகள் கவரி வீசி உனக்கு மங்கலந் தரவில்லையா
பனிமலையும் பாலைநிலமும் உனக்கு புதுவழி தரவில்லையா
உன் காதலின் வலி காவியங்களை உருவாக்கும்
உன் கண்ணீரின் துளி கற்பனைகளைச் சிலையாக்கும்
உன் எண்ணத்தின் விம்பங்கள் இளைஞரைச் சரிபார்க்கும்
உன் கற்பனையோ காலாவதியாகாத கணக்கீடுகளைச் சீர்செய்யும்
நீ உலகத்திற்காய் கவிதையை நிர்மானித்தாய்
உன் தாக்கம் அழகுபடுத்தும் மட்டும் அது நிர்வாணமாய்
காதலால் நீ பெற்றுக்கொண்டாய் கவிதையை நிவாரணமாய்
கவிதை பெற்றுக்கொண்டது கருத்தரித்த நிஜங்களாய்
கவிஞனே!
இப்போது உன் காதலில் - ஒரு
கண்ணியமிருக்கும்
இனியும் காதலிக்கத்தயாராய் -இரு
இனி எப்போதும் நீ
உனக்குச் சொந்தமில்லை -இந்த
உலகிற்கே!
கடந்தது 2005
தொடர்புச்சாதனங்கள்
கடந்த வருடவார்த்தைகள் கருவாடாய்ப் போனது
காய்ந்து போன வார்த்தைகள் சருகாகிப்போனது
எடுத்துவைத்த முடிகள் சாம்பலாகிப்போனது
தடுத்துவைத்த அடிகள் எல்லாம் சிறையாகிப்போனது
அமைப்புக்கள்
அநுதாப செய்தியைத்தான் அத்திவாரமாக்கினர்
பரிதாப வார்த்தையைத்தான் படிக்கற்கள் ஆக்கினர்
பணத்தாலே பெரும் பிணச்சோர்வை கூட்டினர்
பயத்தாலே பாவச் செயல் தன்னை மூடினர்
சுயநலவாதிகள்
புத்தம்புது அமைப்புக்களாய்ப் புத்தொளியூட்டினர்
தத்ததமது செயல்களுக்குத் தாய்ப்பாலையூட்டினர்
வருடம் ஒன்றாய்க்கழிந்ததை வாய்ப்பாடக்கினர்
வார்த்தைக்கு வார்த்தை வருத்;தத்தையூட்டினர்
மதவாதிகள்
வெந்தபுண்ணின் வேதனையில் கண்ணீரைக்காட்டினர்
வேகாத நெஞ்சங்களில் கண்ணீரை கூட்டினர்
ஆனபெரும் சேதத்துக்கு அடிக்கற்களை நாட்டினர்
ஆடிக்கல்லை மட்டும்காட்டி ஆறுதலைய10ட்டினர்
பொதுமக்கள்
நன்கொடையின் பேரினிலே பிச்சையிட்டுப் பிச்சையிட்டு
பிறரின்நடையில் பின்வாங்கை ஏற்படுத்தி
யவரவர் முயற்சியை மறக்கச்செய்தீர்
மண்டியிட்டுக்கையேந்தப் பழக்கச்செய்தீர்
பாதிக்கப்பட்டோர்கள்
கையேந்தும் கீழ்த்தனத்தை கைவிட மாட்டீரோ
பிறநம்பிக்கையை மறந்துவிட்டு தன்னம்பிக்கைகூட்டீரோ
அணுகுண்டால் அவலப்பட்ட யப்பானுக்கு ஆறுதலாய் யாரிருந்தார்
முயற்சியாலே முதலிடத்தில் முளைத்துவர யார்தடுத்தார்
காட்டுமரத்திற்கு காவல்காத்து நீர்வி;டவர்யாரவர்
முட்டுக்கொடுத்து முழைப்பதற்கு ஊக்கம்காட்டீயவர்யாரவர்
காட்டுத்தீக்கும் கடும்புயலுக்கும் முகங்கொடுக்கவில்லையா
மாமனிதர்நீர் தழர்ந்து தத்தளிப்பதா??
திரும்பிப்பார் திறந்துகிடக்கு திசைகள்!!
தோழனே!
இழக்கப்பட்ட இளமைக்காக ஏங்குகிறாய்
விதைக்கப்பட்ட கண்ணீரில் ஈரத்தைக் காணுகிறாய்
கிறுக்கப்பட்டு எழுத்துக்களிலெல்லாம் கவிதைகளைத் தேடுகிறாய் களைத்துப்போன காயங்களோடே காலங்கடத்துகிறாய்.
வாலிபம் வயதில் என்று யார் சொன்னது?
அது வலிமையான உன் எண்ணத்திலல்லவா உள்ளது!
வறுமை வருமானத்தில் என்று யார் சொன்னது?
அது நீ செய்யும் செலவினத்திலல்லவா உள்ளது!
“பர்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட எமக்கெல்லாம்
பகுத்தறிவு எப்படி வேலை செய்யும் ”
உன்னால் தாக்கப்பட்ட காயத்துக்கு
கற்களைக்குற்றஞ் சாட்டுகிறாய்.
உன்னால் வெட்டப்பட்ட வடுக்களுக்கெல்லாம்
கத்தியினைக் குற்றஞ் சாட்டுகிறாய்
நீயாய்க் கண்களை மூடிக்கொண்டு
உறக்கத்தைக் குற்றஞ் சாட்டகிறாய்
பொருத்தமற்ற பாதங்களுக்குப் பங்கம் வரும் போது
பாதரட்சை காரணம் என்று பாசாங்கு செய்கிறாய்
தீயில் விரலை வைத்துக்கொண்டு
சுட்டுவிட்டது சனியன் என்று தீயினைச் சாடிக்கொள்கிறாய்
உன்னால் ஏற்படுத்துப்பட்ட விபத்துக்கொல்லாம்
விதியைக் குற்றஞ் சாட்டுகிறாய்
உன் தவறுகளுக்கெல்லாம் உனக்குள்ளே
பவுடர் போட்டே பழகிவிட்ட பைத்தியக்காரன் நீ…
என் வார்த்தைகள் உனக்குச் சற்றுக் கசக்கத்தான் செய்யும்.
மதுவைப்போல
பழக்கப்படுத்திக் கொண்டாயானால் அதுவே இனிக்கவுஞ்
செய்யும் அமிர்தம்போல்
நான் யார் என்று எண்ணிப்பார்க்க விரும்பாதே
அதற்கு நீ செலவிடும் நேரத்தை
நீ யார் என்று எண்ணிப்பார்க்க பயன்படுத்திப்பார்
நிரந்தரமற்ற இன்றைக்கும் , என்றுமே இல்லாத நாளைக்கும்
நேற்றைய சம்பவங்கள் உனக்குச் சாட்சி தரட்டும்.
நெஞ்சுருக்கம்
ஏழ்பத்து ஆண்டுகள் எழுந்து நின்ற ஆலயஞ்
செல்பட்டுப் பட்டுப் போனதோ
தோள் பட்டுச் சுமைதீர்த்த சுமைதாங்கி
சோர்வுற்று விட்டுப் போனதோ!
துகள்பட்டுத்தான் சொரியும் நீர்கண்டு வுந்தன்
தூயமனம் வாரிமழை தான் சொரியும்
துடித்து இன்று நான் சரிய எந்தன் தூயவளே
துயர் ஒன்றை வாரித் தந்தாயே தாயே
நான் தூங்கத் தான்பார்த்த இருவிழிகள்
தான் தூங்கி ஆனதம்மா சடலமாய் !
தான் தாங்கி எனைவளர்த்த இருகரங்கள்
நான் தாங்கப் போனதம்மா சடலமாய் !
மார் தாங்கித் தான் தந்த பஞ்சணைகள்
மண் தங்கி வாழ்வதென்ன நிந்தனைகள்
மண்மீது தானிருந்து மடிமீது எனைவைத்து
மதிகாட்டும் நிலாச்சோறு நெஞ்சுக்குள்ளே. . . .
தலைகோதும் விரல்கண்டு திடங்கொண்ட என்னிதையம்
தரைமீது உணைக்காண அலைபோல இரையுதம்மா!
கடல் மீது அலையாக நான் வந்தால் தடைபோட
கரைமீது அணையாக நீ நின்றாய் - இனி. .. . . ??
காலம் வந்ததென்று கைகாட்டிச் சென்றாயோ? - இல்லை
காலன் வந்தான்னென்று கைவிட்டுச் சென்றாயோ?
கண்ணீர் விட்டுச் சொல்லுகிறேன் - நீ
காணவேண்டும் கடவுளடிச் சந்நிதி!!
சாந்தி சாந்தி சாந்தி.
அழுகின்றோம்
அம்மா உடல் கிடக்குது சும்மா சும்மா -இந்தப்
பிள்ளை மனம் பதைக்குது அம்மா அம்மா
ஆண்டவன் தந்த அற்புத ஆலயம் அம்மா -அந்த
அம்மா உடல் கிடக்குது சும்மா
உதிரந் தந்து உருவந் தந்து
அதரத்தில் எமை வைத்து ஆளாக்கிய
எம் இதயத்தாமரை வாடியதோ வழிமறந்து
நாம் செய்த தவமென்ன வோசொல் ?
உன்னிடத்தில் தனையனாய் தரணியில் பிறந்தனவே!
நாம் செய்த தவறென்ன வோசொல் ?
எம்மிடத்தில் உடல்விட்டு உயிர்மட்டும் பிரிந்தனவே!
உந்தன் அன்பின் அணைப்பிற்காய்
ஆயிரந்தடவை பிறப்புக் கேட்டேன்
ஓருதடவை யுந்தன் இறப்பையல்லோ மறந்து விட்டேன்
வாழ்வு தந்த வள்ளலம்மா நீ என்கண்ணாய்
வாடிவிட்டாய் நோகுதம்மா நெஞ்சம் புண்ணாய்
கூடுவிட்டு ஆவிபோனாய் எந்தன் முன்னால்
கூடுமட்டும் ஆகப்போகும் எல்லாம் மண்ணாய்
வார்த்தை வந்து தொண்டைக்குள்ளே தொக்கி நிக்க
வாரிவந்து விழிநீரும் முட்டிநிற்க
வேரறுந்த விருட்ஷம்போல மக்கி நிற்க
வேடிக்கை காட்டிச் சென்றாயோ நெஞ்சம் சொக்க
விழிவிட்டு நாமூற்றும் துளிநீரில்
தளிர்விட்ட தாமரை மலர் தூவி
தாரை முழங்கித் தலை தாழ்த்தி
விடைகொடுத்தோம் வேதனையில்!
அடையவேண்டும் அமைதியம்மா
அது ஆத்மாவின் நிலையிலம்மா
அமைதி ஆண்டவனின் சந்நிதி!!!
|
|