ஆண்மீகமும் ஆரோக்கிய வாழ்வும்
mEg+jp E}hypy; ,Ue;J...
உறங்காத கடமை
விம்பமாக வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.
இது சரி, இது தவறு, என்பதைச் சிந்திப்பதற்காக நேரம் விரயம் செய்வதிலும் பார்க்க, எது தேவை- எதுதேவையற்றது, என்பதைச் சிந்திக்கச் செய்தல் நலமாகத்தோன்றுகிறது.
இது தேவை என்பதை நான் நிர்ணயித்துக்கொண்டேன் எனக்குள். அது சாத்தியமாவதற்குஎவற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துகொள்ள முனைந்து விட்டேன்.
இலக்கியப்பணியில் தமிழ் மொழியாம் தாய்மொழிக்கும், பரந்துள்ள எம் முறவுகளின் கலாசார விம்பங்களை நினைவுறுத்துவதிலும், அடியேனால் இயன்றளவு முயன்றுகொண்டிருப்பேன்.
இது என் கடமை.!
மொழியால். . . . ? நான் இந்து !
மதத்தால். . . . . ? நான் கிறீஸ்தவன்!
என்ன ? . . . . குழப்பமாக இருக்கிறதா?
இந்துமதத்தை ஒரு மதமாகக் கருதுவதிலும் பார்க்க, தமிழ் மொழியின் பிறப்பிடமாகக்கருதுவதே சாலச்சிறப்பாக இருக்கிறது. குறுமுனிஅகத்தியர், முருகக்கடவுள், இவர்களின் பிறப்பிடமாகக் கருதுகிறேன்.
அவர்கள் பாண்டித்துவ மேதைகள். தேவ பாசையாக தமிழ் மொழியைக் கருதுகிறேன்.
புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!
அது தேவ பாசையே,!!
எனது கருத்துக்களில் இந்து மதச்சாரல் அடிப்படையோ, கிறீஸ்துவின் மதத்து}றல் சொரிவதையோ, பௌத்த மதத்தருவி வழிவதையோ, கண்டு மதவாதியாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக்கூறி விவரிக்க வேண்டியதாயிருந்தது.
நான் நடந்த பாதைகள் மிகவும் சிறியதே. ஆனால் ஆங்காங்கே பல சந்திகள் இருந்தன. அதனால் பலதரப்பட்டோரைச் சந்திக்க நேர்ந்தது இனிக்கடக்கப்போகும் பாதையின் து}ரம் எவ்வளவோ?
நானறியேன்.
வேதங்களோடு வாழ்க்கைக்கு என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றியதன் விளைவே உங்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நட்பு.
உறவுகள் என்பது மனிதனுடைய இஸ்டத்தின் நிமித்தமன்றி கடவுளுடைய திட்டத்தில் உதயமாகிறது, இல்லையா?
தாய் தந்தை, கணவன் மனைவி, உடன் பிறப்புக்கள் ......... இது போன்றே, ஒரு எழுத்தாளனுக்கும் ஏராளமான வாசகர்களுக்கும் இடையிலான மாபெரும் நட்பு. அதாவது, எனக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு.
ஆக, நாங்கள் மிக நெருங்கி விட்டோம். இனி உறவுகள் என்று உங்களை அழைப்பதில் தடையில்லைதானே!
ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பிடுகின்றது.
கடவுள் என்பது கிடைப்பதற்கு, பார்ப்பதற்கு, தொட்டு உணருவதற்கு, ...... ....... இப்படிப்பட்ட அரிதான, ஆனால் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.
நடைமுறையுடன் பார்க்கின் பஞ்சப10தங்களின் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டும், பஞ்சப10தங்களைக் கட்டுப்படுத்தியும் இயங்கும் ஒரு மாபெரும் சக்தி என்றும் சொல்லிக்கொள்ளலாம்.
இதுபற்றி “பிரபஞ்சம்” என்னுங் கட்டுரை ஒன்றைப் பல வருடங்களுக்கு முன் அதாவது, பாடசாலைக் காலங்களில் எழுதினேன். அது பலத்த வரவேற்பிற்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அதன் பிரதி உங்களிடங் கிடைக்கச் செய்யாதது உங்கள் துர்ரதிஸ்டமே! என்று எண்ணத் தோன்றுகிறது.
“மனிதன் பஞ்சப10தங்களுக்குக் கட்டுப்பட்டவனும் அந்தப் பஞ்சபூதங்களால் ஆனவன் என்றும், பஞ்சப10தங்களின் ஒன்றிணைந்த செயற்பாடே மனிதன் என்றும், மனிதனுடைய மரணத்தின் போது அவை மீண்டும் பிரிகையடைந்து பஞ்சப10தங்களுடனே இணைந்துவிடுகிறது, இது ஒரு சுற்றோட்டச் செயற்பாடு” என்பன பற்றியே அந்தத்தொடர் அமைந்தது.
இத்தகைய ஆழமான சிந்தனைகளை இப்போது அலசுவதிலும் பார்க்க, இன்று எத்தகைய சிந்தனை மனிதனை மேம்படுத்துகிறது என்பதையும், மதத்தின் வழியில் மனிதனின் வாழ்க்கை எப்படி இணைகின்றது என்பதை முன்னோக்கிப் பார்ப்போமா?!
காரணகாரியமுண்டு
இன்று வானோங்கி ஏராளமான இந்து, கிறீஸ்தவ ஆலயங்கள்.
அவற்றின் வேலைப்பாடுகள் ஆகா,!. . . சொல்லில் அடக்கிவிட முடியாது. அவற்றின் பெறுமதி அளவிட முடியாது. அவற்றின் கால அளவு வரலாற்றுப் பின்னணி என்பன சிறப்புடன் விளங்குகின்றது.
இவை ஒரு புறம் இருக்க, இன்னும் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருப்பிட வசதியின்றி, அதோ..... அந்தப் பிள்ளை அலைகிறது.
ஆதரவுக்காக அது கையை நீட்டினால் அதன் கையில் ஒரு செப்பு, அல்லது வெள்ளி நாணயம் (காசு).
அது அவனுடைய எந்தத் தேவையினைப் பூர்த்தி செய்யப் போதுமானது?
ஆலயங்களில் நாளாந்தம் ஏற்படும் மொத்த செலவினைக் கணக்கிட்டால்,! அவற்றால் பல்லாயிரம் அபலங்களைப் போக்கி விடலாம்.
அதற்காக ஆலயங்களையும், அவற்றின் செயற்பாட்டையும் குறை கூறவில்லை. வானளாவிய ஆலயங்கள், அதன் நோக்கம், அவை அவ்வளவு பிரமாண்டமாக அன்று கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்று என்றாவது சிந்தித்ததுண்டா?
அன்று அதன் தேவை அவசியமானது: சரியா தவறா என்பதல்ல சிந்திக்க வேண்டியவை தேவையா தேவையற்றவையா என்பதே இப்போது வேண்டியவை. இன்று அதன் தேவை எத்தகையது என்பதே இன்றைய நிலையில் அவசியமானது.
அவற்றை எத்தகைய முறையில் கையாளலாம் என்பதே அவசியமானவை!.
இன்று அதிகளவான சுமைகளைப் பக்குவமாக, சாதாரணமாகத் து}க்கக் கூடிய இயந்திரங்கள் உண்டு. கட்டிடங்களை அப்படியே பெயர்த்து இருக்கும் இடத்தில் இருந்து இன்னோர் இடதிற்கு இடம் நகர்த்தக் கூடிய தொழில் நுட்பமும் உண்டு.
இதில் எந்தச் சேதமும் கட்டிடத்திற்கு ஏற்படாத வகையில், மேலும் நினைத்த மாத்திரத்தில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்களை நிமிடத்தில் தரை மட்டமாகத் தகர்த்து விடும் வல்லமையும் உண்டு,
குறைந்த நாட்களில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட பெரும் கட்டிடங்களைத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் கட்டி முடிக்கக்கூடிய வசதியும் உண்டு.
இவைகள் எல்லாம் இன்று சிறப்பாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு விடயமாக எனக்குத் தோன்றவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.
அன்றைய காலங்களில் பல நு}று வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பிரமாண்டமாக நிற்கும் கோவில்களை இன்று உற்று நோக்கும் போது, பார்ப்பவர்கள் மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது. வாயைப் பிளந்து அடிக்கடி விழிகளைப் பிதுக்கியும் புருவங்களை மேலும் கீழுமாக அசைத்தும், ஆச்சரியப்படத் தோன்றுகிறது. இல்லையா?
அந்தக் காலத்தில் கணக்கிடக் கணணி இல்லை, சுமைகளை இலாவகமாகத் து}க்குவதற்கு கிறைன் (சுமை து}க்கி) இல்லை இப்படிப் பிரமாண்டமான கலையம்சம் பொருந்திய கட்டிடக் கலையினை எப்படிச் சாமர்த்தியமாகக் கட்டி முடித்தார்கள்.?
அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று: கடந்த காலங்களில் நான் இந்தியா சென்ற போது தஞ்சாவூர் (தமிழ் நாட்டில்) பிரதேசத்தில் உள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்த்துப் பிரமித்தேன். ராஜராஜசோழ மன்னன் கட்டுவித்த ஆலயமது. அதில் கலையம்சம் ஏராளமாக இருந்தது.
இப்படிப்பட்ட பிரமாண்டமான கட்டிடங்கள் கடவுளுக்காகக் கட்டப் பட்டதா?
“ வானம் எனக்குச் சிங்காசனம்
பூமி எனக்குப் பாதப்படி ” இது வேதாகம வாசகம்.
இப்படி இருக்க, கடவுளுக்கு எப்படி அதனைக் கட்ட முடியும். மாறாக கடவுளுடைய பேரைச் சொல்லி மக்கள் ஒருமனப்பட்டு ஒன்று கூடவும், அவர்கள் உடல் நலன்களைப் பாதுகாக்கவும், மனித நேய செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், குற்றமுள்ள இதயங்களைக் கழுவிச் சுத்திகரிக்கவும், முக்கியமாக பாது காப்புக்காகவுமே அவைகள் கட்டப் பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையா?!
ஆம், அப்போதும் போர்ச் சூழல் தான். ஆலயங்களில் தஞ்சம் புகுவோரை விரோதிகள் தாக்க மாட்டார்கள். அப்படித் தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவைகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும்.
மேலும் மனங்கள் சங்கடப்படும் போது மனமகிழ்ச்சி தரும் சிற்பக் கலைகள், ஓவியக் கலைகள், கவிதைகள் போன்றனவும் அந்த ஆலயப் பகுதிகளில் காணப்படும்.
அது ஒரு கலைஞர் ஒன்றுகூடும் இடமாகவும் அக்காலங்களில் அமைந்திருந்தது.
இன்று மட்டுமல்ல, அன்றும் மக்கள் போர்ச் சூழலால் புண்பட்டகாலமே. அன்று மட்டுமல்ல என்றும் இதுவே நிலை என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உள்ளது இன்றைய நிலை!
அன்றைய சூழலில் அபயந்தரும் இடமாகவும், அபாயத்தில் இருந்து விடுவிக்க ஆறுதல் தரும் தளமாகவும், மக்கள் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி ஒருமனப் பட்டு ஒன்று கூடும் நிலமாகவும் . . . இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அன்று அவை அவசியமாக இருந்தது.
ஆக, ஆரம்ப காலம் ஒரு காரணத்தோடே காணப்பட்டது. அண்மைக் காலமோ அலங்கோலமாகக் கிடக்கிறது.
சில ஆலயங்களுக்குப் போனால் இனம் புரியாத நிம்மதி. யாருடனும் பேசத் தோன்றுவதில்லை. ஏதும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை சற்று நேரம் அப்படியே இருந்து விடத் தோன்றும். சரி போகலாம் என்று எழும்பும் போது தான் நீண்ட நேரம் விரயமானது விளங்கும். “நேரம் போனதே தெரியவில்லை” என்று புறப்படத் தோன்றும். ஆனால் மனதுக்குள் ஒரு நிம்மதி . . . . ! ஒரு அமைதி . . . . ! ஒரு ஆறுதல்.
எனக்குத் தெரிந்த, என்னால் உணர்ந்த அந்தப் பாஷையூர் அந்தோனியார் ஆலயமும், ஆச்சிரமம் ஆலயமும், நினைவில் நீங்காதவை! இரண்டு ஆலயங்களுக்கும் நான் தனிமையில் போவேன். திருப்பலி இல்லாத நேரங்களில் அமைதியாக இருந்து விட்டு வருவேன் - பெரும் திருப்தியோடு!
மனதில் சஞ்சலம் இருக்கும் போது அங்கே போனால் அன்னையின் மடியில் படுத்து உறங்க அன்னையின் விரல்கள் தலை கோதி விடுவது போல், இடையிடையே வந்து தீண்டும் கடல் காற்று அந்த அந்தோனியார் கோவிலில் எனக்குக் கிடைக்கும். அது ஒரு தனிச் சுகம். அப்படியே நீண்ட நேரம் கழித்து விடுவேன். அங்கு இருக்கும் போது சுரூபங்களை ரசிப்பதில்லை, வந்து போகும் மனிதர்களைப் பார்ப்பதில்லை அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் அமர்ந்து விடுவேன். அதில் ஒரு பெரும் நிம்மதி.
இதுதான் ரிசிகளும், மகான்களும் செய்யும் தியானம் என்று எண்ணத் தோன்றும்.
நோய்வாய்ப்பட்டவன் வைத்தியனைத் தேடுவதுபோல் எனது மனவருத்தத்திற்கு, துன்பம், சஞ்சலம் வரும்போது எனக்கு அது ஒரு நல்ல வைத்தியசாலை.
அமைதியாய் இருப்பதே நல்ல மருத்துவம்.
இத்தகைய ஆலயங்களைக் கொண்ட மதங்களின் செயற்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்திற்குச் சொல்லும் வழிகளை அலசுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.
“நோயற்ற வாழ்வே, குறையற்ற செல்வம்” இல்லையா!
காரணம் புரிந்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது உள்ளக் கிளறல்.
யாரும் ஏதாவது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். அதை அறிந்துதான் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று மொழி உண்டு. அதன் காரணத்தை அறியாமல் போனதனால் இன்றைய இளஞ் சமுதாயம் இப்படியும் சொல்கிறது.
“ஆலயம் தொழுவது
வேலை மினக்கேடு” என்று சொல்வது சிரிப்பாக உள்ளது!
இன்றில் இருந்து ஒவ்வொரு மதவழிபாட்டிலும் என்ன காரணம் உண்டு, அவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு வழங்கும் பங்களிப்பு என்ன என்பதனை அலசுவீர்களா?
மதவழிபாடுகளை மேற்கொள்ளும்போது பலவகையான செயற்பாடுகளை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பற்றிய விடயத்தை அடுத்த பகுதியில் ஒவ்வொரு பகுதியாக ஆராய்வோம்.
njhlUk;...