Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
|
November 23 நிலத்தில் விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை!!! என்று சிங்களவர் கேலி செய்யாரோ?
சர்வதேச அரசியலை தமிழ்ச் சிறுவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வரவிருக்கும் மதிப்பிற்குரிய நாளினை எவ்வாறு நாம் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே அவசியம். எமக்கு விடுதலையும், சுபீட்ஷமும், எம்மை நாம் ஆழக்கூடிய அதிகாரமுமே எமக்கு வேண்டியது… சிங்களவனை அடிமைப்படுத்துவதோ அல்லது கேவலப்படுத்துவதோ அவசியமற்றது. குhரணம் தமிழீழம் அமையுமாயின் சிறீலங்க எமது விரோதியோ நண்பனோ எதுவாக இருந்தாலும் அது அயல்நாடு. சர்வதேச விஸ்தரிப்பிற்கு அது அவசியம் என்ற அடிப்படை நியமணங்களை இப்போதிருந்தே தமிழர்களின் சிறு பிள்ளைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்
பின்னுள்ள இந்த பகுதி தமிழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது...
இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்21 November, 2009 by admin தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார். November 20 புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எப்போது பார்த்தாலும் கிழக்கின் பக்கமே தனது ஒழியை வீசுகின்றாரே வடக்கின் பக்கமோ அல்லது ஏனைய பக்கமோ அவரின் பார்வை குருடாக இருக்கின்றதோ!!! தேசிய நல்லிணக்க அமைச்சராக இருந்து, கிழக்கின் நல்லிணக்க அமைச்சராகப்பணியாற்றுகின்றாரோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சின் பதவியைவிட விசேடமாக எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெரும் சந்தர்ப்பம் அவருக்குக்கிடைத்துள்ளது. புலிகள் அமைப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு, இலங்கை அரசியல் கட்சியிலும் மிகப்பெரிய பொறுப்பு… பழைய புலி பதுங்குவது… மீண்டும் பாய்வதற்கோ? அல்லது, தன்னைப் பக்குவப்படுத்துவதற்கோ!!! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதே வேளையில் மகிந்தவின் அசைவுகளும் சும்மாயில்லை… ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அடிகளை எடுத்துவைப்பதற்குள் அடுத்த தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது, கானல் நீராகும் என்றிருந்த தேர்தலே கண்ணுக்கெட்டியது என்றால், நிலையில்லாத பதவி எத்தனைதூரம் நிலைக்கப்போகின்றது என்ற வினாவும் எழாமலில்லை… புலத்தில் புலிகளின் அசைவுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருனாவை உதார்சீனப்படுத்துவதாகவும் அவரைப் பெருமைப்படுத்துவதில் இருந்தும் விலகியே வந்தவர்கள் தற்போது, என்ன செய்வதென்று அறியாது திண்டாடுகின்றார்கள். நோர்வே தேர்தல் அவ்வளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதனைக்கூட மூடி மறைக்கப்பார்க்கின்றனர். அதாவது, வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்த வாக்குகள் தற்போது நடைபெற்ற தேர்தலில் வந்து விளவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், நோர்வே தனது போக்கை ஒருபுறம் செலுத்துவதாகவும் உருத்திர குமார் சார்ந்தோர் இன்னொருபுறம் நகர்த்துவதுபோன்றும் காணப்படுகின்றது. எது எப்படியாயினும். கருணாவின் போக்கில் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் தாமும் கால்பதிக்க முனைகின்றமை தாம் தமிழர்கள் பிரதிநிதியாகாவிட்டாலும், கருணாவை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெரிகின்றது.
அவ்வாறு கருணாவால் காட்டப்படுகின்ற விடயங்களும் புலத்தில் ஒழுங்காக வந்து சேர்வதில் புலிகளின் ஆதரவாளர்கள் தடுத்துசுவர்கட்டியிருக்கின்றார்கள். பல வருடங்களாக தலைக்கணமின்றி தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதனை அடித்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காககத்தான் போனது. எனினும் இப்போது, செவிடாக இருந்தாலும் பராவாயில்லை குருடர்கள் போல் பேச்சுக்களை நடத்திப்பார்ப்போம் என்று கங்கணம் கட்டுகின்றனர். அப்போதே தந்தை செல்வா சென்ன வார்த்தை இன்றும் நிலைத்து நிற்கின்றது. தமிழர்களை இனி கடவுளாலும் காக்க முடியாது… November 19 50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும்… |
| முரளிதரனின் வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்பதில் சிக்கல் நிலை உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹபராதுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இராணுவ வெற்றிகளை ஈட்டுவதற்கு முரளிதரன் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதென அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| ஈழத் தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் நடிகர் விஜய் |
| பிரசுரித்த திகதி : 29 Aug 2009 |
|
இந்தியாவில் தயாராகும் பல தமிழ்ப் படங்கள் ஜரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆபிரிக்க நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம், மேலதிகமாகச் சம்பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் விஜயின் சம்பளமும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டது. தற்போது தமிழ் நாட்டில் 10 கோடிக்கு எடுக்கப்படும் படத்தை தயாரிப்பாளர்கள் 20 கோடி கூடச் செலவழித்து எடுக்கத் தயாராக உள்ளனர், காரணம் புலம்பெயர் தமிழர்கள் மூலம் பணம் கிடைக்கும் என்ற காரணம். இப்படி இளிச்சவாய் கூட்டமாக தமிழன் இருக்க, தமிழன் தலையிலேயே தமிழன் முளகாய் அரைக்கு நிலைதோன்றியுள்ளது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கலாம், தேர்தலில் நிற்கலாம், முதலமைச்சர் கூட ஆகலாம். ஆனால் அதற்காக தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் காலடியில் ஏன் விழவேண்டும் ? இவருக்கு என்ன வேறு எந்தக் கட்சியும் கிடைக்கவில்லையா ? ஈழ விடுதலையை ஆதரிக்கும் பல கட்சிகள் ஏலவே தமிழ் நாட்டில் பல இருக்கின்றன, அவற்றுடன் இணையாவிட்டாலும் பரவாயில்லை தமிழனைக் காட்டிக்கொடுத்த சோணியாவுடன் ஏன் கூட்டுச் சேரவேண்டும். மானமுள்ள எந்தத் தமிழனும் இவரை மன்னிக்கமாட்டான். குறிப்பாக வேதனையில் மிதந்துகொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் இவரை மன்னிக்கவே மாட்டார்கள். இது குறித்து இதுவரை நடிகர் விஜய் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விழக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். |
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய கேள்வி பதில் |
|
பிரசுரித்த திகதி : 31 Aug 2009
|
|
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக சட்டவல்லுனர் உருத்திரகுமார் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன் முழு வடிவமும் PDF வடிவில் இங்கே அழுத்தவும் Naukadantha thamileela Arasu.pdf |
இங்கு காட்டப்பட்டுள்ள வீடியோவானது பிரித்தானியாவில் வெளியாகும் தொலைக்காட்சியில் (பிரசுரித்த திகதி : 25 Aug 2009) காட்டப்பட்டுள்ளது. இதனை மனபலம் இல்லாதவர்களும், கற்பிணி, மற்றும் பலவீனமுள்ளவர்களும் பார்ப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கும் தகவல்களுக்கான பதிலினை இலங்கை அரசு வெளியிட்டே ஆகவேண்டும். இது உண்மையாயில் இதற்கு பதிலினை தருவதாகின் தமிழீழப் போராட்டத்திற்கான முடிவினை தமிழர்களுக்கு தனியொரு தேசத்தைக் கொடுப்பதிலும் வேறு எவ்வழியினையும் மதிப்பின் மகிந்த அவர்கள் வழங்கமுடியாது.
இலங்கையின் தனி உரிமையுடைய ஆரம்ப இனமான தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தேசத்தை கொடுக்கவேண்டும். எத்தகைய இராணுவக் காரணத்தைக்காட்டியும் தடைபோடுவது தகாதது. இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசு எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் சமஉரிமைஉண்டு.
தகாதமுறையில் இன அழிப்பினை கொடுராமாக மனிதநேயத்தை தாக்கியதற்கு இலங்கை அரசு தீர்வை முன்வைத்தே ஆகவேண்டும்.
புலிகளை அழிப்பது என்பது ஒருவகை, அவர்கள் தமிழர்களின் உரிமைக்காகப்போராடியவர்கள் அவர்களின் போராட்ட முறை ஜனநாயக இறைமையுடைய அரசிற்குப் தவறாகஇருக்கலாம் அதனைச்சீர்செய்யவேண்டியது அரசின் கடன். ஆனால் அதனை அரசு கையாளும் முறை இனி இவ்வாறான தவறான பாதைக்கு மக்களை கொண்டுசெல்லாததாக அமையவேண்டும். அவர்களை தகாதமுறையில் தீர்ப்புவழங்கியமை இனப்படுகொலைக்கான காரணமாக மாறுகின்றது எனவே, இலங்கை அரசு இதற்கான பதிலை யாப்புமாற்றத்தின் மூலம் தமிழர்களுக்கு தனி உரிமையினை வழங்கியாகவேண்டும்.
இப்போது இலங்கையில் ஜனநாயகஆட்சி நடைபெறுகின்றமையால் தமிழர்களுக்கான முடிவினைத் தமிழர்களிடம் சர்வதேச வாக்கெடுப்பின்மூலம் அவர்களின் முடிவினை அறியவேண்டும். அவர்களின் முடிவின்பால் இதற்குத்தீர்வு காணப்படல் வேண்டும்.
இலங்கைத்தாயின் தேசப்பற்றும் தமிழ் இனப்பற்றுமுடைய தமிழன்- அருகன்.
புலிகளின் இரண்டாம் புதிய தலைவர்- திரு நெடியவன் அவர்களுக்கு … தங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ செயற்கு ழுவிற்கும் தொடர்பென்ன??? மேலும் திரு உருத்திரகுமார் அவர்களின் அறிக்கைக்காக எனது வினாவினை சர்வதேச ரீதியில் இருந்து வினாவுகின்றேன்
அறிக்கை - நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன்
[ஜ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 01:15.23 PM GMT +1005:30 ]
மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறிஇ கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.
தமிழர்களின் வினா - சட்டத்திற்குப்புறம்பாக விமானங்கள், கப்பல்கள், கனரக ஆயுதங்களை வைத்திருந்ததும், சட்டத்திற்குப்புறம்பாக மக்களுக்குத் தண்டனை வழங்கியதும் நாட்டின் சொத்துக்களை நாசமாக்கியதும், நாட்டின்தலைவர்களை கொலை செய்ததும், மற்றும் வெளிப்படையாக தங்களுக்கான யாப்பினை (உட்கட்டுமானம் வெளிக்கட்டுமானம்) ஜனநாயகரீதியில் மேற்கொள்ளாமை, நாட்டின் இறைமைக்கு மாறாக தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டமை… இவைபோன்ற அனைத்தும் தங்கள் அமைப்பின் செயற்பாடே!!! -
அறிக்கை - வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.
தமிழர்களின் வினா - தவறான கருத்து, முழுஉலகமுமே தீவிரவாதத்தை ஒழித்த இலங்கை அரசு என்று பாராட்டுகின்றதோடு, தத்தம் நாட்டில் இருக்கும் போராட்ட அமைப்புக்களையும் முடிவுக்குக்கொண்டுவர கங்கணம் கட்டுவதற்கு தயாராகியுள்ளது… (22-08-2009ல் நைஜேரியாவில் போராட்ட அமைப்பு ஆயதங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது) மக்கள் அழிக்கப்பட்டது உண்மையே! அம்மக்கள் அழிவிற்கு புலிகள் மக்களை கேடயமாகப்பயன்படுத்தியதன் காரணத்தாலே அவ்வழிவு ஏற்பட்டது என்று அனைத்து அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. அழிக்கப்பட்ட மக்கள் மக்களாகக்கருதப்படாமல் புலிகளாகவே கருதப்படுகின்றமை இன்னொரு வகை, அதாவது, இராணுவம் காலக்கேடுகொடுத்தும் மக்களை அரசகட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்காததும் புலிகளின் தவறாக பல மக்கள்மத்தியிலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. கிட்லரிக் காலத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகின்றேன்… கிட்லர் போரினை நடாத்தும் போது போராளியாக நடாத்தவில்லை இறைமையுள்ள நாட்டின் பெயரிலே நடாத்தியதும் மேலும் உள்ளாட்டில்மட்டுமல்ல வெளிநாடுகளுடனும் போரின்மூலம் அழிவினை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் புலிகளின் ஆதிக்கம் போராட்டஅமைப்பாக இல்லாது, அரசின் ஆதிக்கத்தில் பங்காளராக இப்போர் ஏற்பட்டிருந்தால் இதன்பாதிப்பு உலக நாடுகளுக்குப் புரிந்திருக்கும். நீதியும் கிடைத்திருக்கும்.
அறிக்கை - குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.
தமிழர்களின் வினா - எப்போது, சாதாரண ஆயுதங்களால் ஒரு போராட்ட அமைப்பை தோற்கடிக்க அரசால் முடியாது போகின்றபோது, ஒரு அரசு எவ்வழியால் அவ்வமைப்பை ஒடுக்கமுடியுமோ அவ்வழியைப்பயன்படுத்தியாகும். உதாரணம் அமேரிக்கா ஜப்பான் மீது பிரயோகிக்கப்பட்ட அணுகுண்டுப்பிரயோகம். அது போன்று பல நாடுகளில் இவ்வாறான போக்குக் காணப்பட்டாலும், இது ஒன்றே உதாரணத்திற்குப் போதுமானது. இது நாட்டுடன் நாடுமோதும் போது நிகழ்ந்தவை. ஆனால் உள்நாட்டில் சட்டத்திற்குப்புறம்பாக ஆயுத நடவடிக்கையில், குழு ஒன்று ஈடுபட்டிருக்கும்போது, அரசிலும்பார்க்க பலத்த ஆயுதங்களை அப் போராட்ட அமைப்புக் கொண்டிருந்தால்?.... தன்னால் முடியாவிட்டால் மற்றைய அரசுகளுடன் இணைந்து அதனை எதிர்ப்பதற்கு அல்லது அழிப்பதற்கு இடமுண்டு. மற்றைய அரசுகளும் தம்முடைய எல்லை நலன்களைக்கருத்தில் கொண்டும் தனது இறைமைக்கு பங்கம் வரக்கூடும் என்ற ரீதியிலும் இவ்வாறான செயற்பாட்டிற்கு உதவ இடமுண்டு. பயங்கரவாத அழிப்பு என்று ஆரம்பித்தபின்னர் போரை இடைவெளிவிட்டு எதிரியை பலமடையச்செய்ய எந்த முட்டாள் இடங்கொடுப்பான்… விளையாட்டுத்தனமாக “அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும்” என்ற வார்த்தை சிரிப்பை ஏற்படுத்துகின்றது.
அறிக்கை - இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும்இ பன்னாட்டு அரச நிறுவனங்களும்இ செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.
தமிழர்களின் வினா - நாம் நமக்குத் தேவையானவற்றை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு மற்றவைகளைக் கோட்டைவிடுகின்றோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுகின்றோம். கிழக்குமாகானத்தில் இராணுவ ஆட்சி என்று வெளியில் நீங்கள் சொல்லுவது பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது… அங்கு ஒரு முதல் அமைச்சர் இருக்கிறார், அமைச்சின் விஸ்தரிப்புக்கள் இடம்பெறுகின்றது. மக்கள் மகிழ்ச்சியாக விழாக்களில் பங்குபெறுகின்றனர் இனமொழிவேறுபாடின்றி அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன… முன்புபோல் அரசியல் படுகொலைகள் இல்லை, இனங்களுக்குள் பிளவுகள் இல்லை, மக்கள் தமது தேவைகளை அமைச்சின் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் 20ஆயிரத்திற்கும் மேல் புலிகள் கைதாக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது, இதற்கிடையில் வன்னடைப்பு என்றபதம் வண்செயல் செய்தவர்களை மென்சிறையில் வைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் பாதுகாப்புக்கருதி வாராமல்இல்லை… புலத்தில் வீதிப்போராட்டங்களில் இறங்கிய தமிழர்களுக்கே காவலதிகாரிகள் தடியடி மேற்கொண்டனர் மட்டுமல்லாது, மறியலிலும் வைத்தனர் என்றால், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை இனங்காணும்நடவடிக்கையில் ஒரு அரசு எத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ளும்??? நிரந்தரமாக ஜனநாயகத்திற்குத்திரும்பும் வரை அதில் தெளிவுதெரியும்வரை அரசு இரணுவ ஆக்கிரமிப்பை விலக்காது என்பது வரலாறு காட்டிய பாடம். ஜேர்மனில் அமேரிக்க இராணுவம் 2ம் உலக யுத்தத்தின் பின்னும் அங்கு தனது கண்காணிப்பைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அமேரிக்க, இத்தாலிய, பிரித்தானிய இராணுவம் பலநாடுகளில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றமை தெரிந்தவிடயமே!!!
அறிக்கை - ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.
இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.
தமிழர்களின் வினா - இலங்கையில் தென்பகுதியில் பல சிங்கள அரச அதிகாரிகள் தற்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள், இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், காரணம் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியமைக்காக என்றால் சந்தேகப்படக்கூடிய தமிழர்களை எப்படி நம்புவார்கள்??? கொலனாவ குண்டுவெடிப்பு எங்கு நடந்தது, விமானநிலய குண்டுவெடிப்பு எங்குநடந்தது, அரச தலைவர்களின் அரசியல் படுகொலைகள் எங்குநடந்தது… இதற்கு சிங்களவர்களா அடிப்படைக்காரணம்??? சிங்களவர்களும் காரணமாக அத்திவாரமிட்டவர்கள் யார்??? இப்படியிருக்க நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்க எப்படி இறைமை பொறுத்துப் போகும். உரிமைகளைக் கேட்பது நியாயமானது, அதற்கு அரசில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளைப்பலப்படுத்தி சட்டத்தின்மூலம் ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்.தமிழர்களின் அழிவில் அதிகரிக்கும் முஸ்லீம் இனத்தவர் இலகுவாக தமது தேவைகளை எப்படி பூர்த்திசெய்கின்றனர்… மலையகத்தமிழர்கள் தங்கள் அரசியல் பலத்தை அதிகரிக்கவில்லையா???...
அறிக்கை - மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.
தமிழர்களின் வினா - அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் யார்??? துரையப்பாவின் படுகொலையில் ஆரம்பித்ததே இந்த கொலைகள்… இப்போதும் ஜனாதிபதிக்கான அரசியல் படுகொலைகளுக்கு புலிகளால் திட்டமிடப்பட்டனர் என்று கைதுகள், போர் முடிவின்போது நடந்ததை மறக்கமுடியாது…
அறிக்கை - இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புஇ தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும்இ புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமைஇ மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமானஇ பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.
தமிழர்களின் வினா - ஆரம்பத்தில் இருந்தே தேர்தலை புறக்கணித்த புலிகள் மக்களையும் அதில் பங்குபெறுவதை தடுத்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை, மேலும் இலங்கை அரசில் தமிழர்கள் இல்லையென்றால் தங்களின் விவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே! ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்… அமைச்சர்கள் இருக்கின்றனர்… மற்றும் அனைத்து அதிகாரிகளும் இருக்கின்றனர். தற்போது நடந்த தேர்தல் ஜனநாயகத்தை பிரதிபலித்துள்ளது. இப்படியிருக்க தமிழ் அரசியல் கட்சிகளை அணுகாது தான்தோன்றித்தனமாக முன்புபோலவே சர்வாதிகாரப்போக்கில் முடிவுகளை எடுத்து, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச அங்கத்தினருக்கு மதிப்பளிக்காமை மக்களையே அவமதிப்பதாகக் கருதமுடிகின்றது.
அறிக்கை - ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Pசழஎளைழையெட வுசயளெயெவழையெட புழஎநசnஅநவெ ழக வுயஅடை நுநடயஅ) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.
தமிழர்களின் வினா - அப்படியென்றால் ஏற்கனவே தமிழீழ மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் அமைச்சர்களையும், முதலமைச்சரையும் என்ன செய்வது? தமிழர்களின் வாக்குரிமைக்கு விடையென்ன? அவர்களால் தெரியப்பட்டவர்கள் என்ன செய்வது,? நாடுகடந்த தமிழீழத்திற்காக ஏன் சர்வதேச ரீதியில் தமிழர்களிடம் ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பினை நடாத்தி இத்திட்டத்தை மக்கள் ஏற்கின்றார்களா என்ற வினா எழுப்பப்படவில்லை. ஒரு நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கின்ற செயலாக சர்வதேசம் இதனைப்பார்க்காதா? 1945 வரை நாடே அற்ற நிலையில் இருந்தவர்கள், இஸ்ரேல் தேசத்தை உருவாக்கினர் … அவர்கள்நிலைவேறு நம்முடைய நிலைவேறு… இங்கு நமக்கென்று நாடு உண்டு, நமக்கென்று உரிமைகள் உண்டு அவ்வுரிமைகளில் நிறைவு இல்லை அதனால் அதற்காகப் போராடுகின்றோம் என்பது பொருத்தமானது… வரவேற்கக்கூடியதும். ஆனால் ஒரு நாட்டின் தேசிய கடவுச்சீட்டினை வைத்துக்கொண்டு, பிறிதொரு தேசியத்திற்காக தகாதமுறையில் சிரமிப்பது முறையானதோ???
அறிக்கை - சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும்இ சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ரைள உழபநளெ அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.
தமிழர்களின் வினா - இதே தமிழீழ கொள்கைக்காகப் பல போராட்டக் குழுக்கள் அப்போதிருந்து இயங்கிவந்தது , அவர்களை ஒழித்து அழித்து, மேற்குறிப்பிட்ட ஆயுத பலத்தைப்பிரயோகித்து, சித்திரவதை, மக்களைக்கடத்தல், சிறுவர்களை கடத்தல், அரசியற்தலைவர்களை கொலைசெய்தல் போன்ற பலசெயற்பாட்டால் தம்மை நிலைநிறுத்தியதற்கு இன்னும் எந்தவித பதிலும் புலிகளால் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜனநாயகரீதியில் தம்மை ஈடுபடுத்த முனைகின்றன தமிழ் குழுக்களையும் கட்சிகளையும் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் யாவரையும் விலக்கி எப்படி ஒரு தனியமைப்பாக, நாடுகடந்த தமிழீழத்தை கட்டமைக்க உருத்திரகுமார் தலைமையில் நடவடிக்கை எடுக்கமுடியும்.? அனைத்து போராட்ட அமைப்பின் அல்லது தமிழ் ஜனநாயக அமைப்புக்களின் ஒப்புதலில் இச்செயற்பாடு இடம்பெற்றாலாவது ஓரளவிற்கு இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாடு, ஒதுக்கிவைக்கப்பட்ட பணத்தை மேலதிக செலவினைக்காட்டவும், இத்தனைகாலமும் வேறு உழைப்பின்றி வாழ்ந்தோரால் தொழில் புரிவதில் ஏற்படவிருக்கும் சிரமத்தை நிறுத்தவும், மக்கள்மத்தியில் இன்னமும் தம்முடைய செயற்பாடு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தவும் இரு மாறுபட்ட கருத்தில், புலிகளின் புலனாய்வு ஒருபுறமும், கேபியை சார்ந்தோர் ஒருபுறமும், நெடியவன் தலைமையில் இன்னொரு புறமுமாக பிளவுகள் ஏற்பட்டதோடு, ஆங்காங்கே நிதிகளைத்திரட்டியோர் நிதி முடக்கத்தில் ஈடுபட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. புலிகள் திருப்பிக் கொடுக்கப்படும் அடிப்படையில் கூட நிதிகளைத்திரட்டினார்கள் அவற்றிற்கு இப்போது ஆப்புத்தான்….
அறிக்கை - இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களைஇ பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வினா- ஏற்கனவே அரசிற்கும் புலிகளுக்கும் பல பேச்சுவார்த்தைகளும் முடிவுகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டும் அதை புலிகள் மீறியதும் கைவிட்டு மீண்டும் சர்வாதிகாரப் போக்கிற்குச் சென்று, இத்தனை இழப்பிற்குப்பின் ஜனநாயகத்திற்குப் போகின்றோம் என்றால், ஏன்இந்த முப்பது வருட இழப்பு? மேலும் ஜனநாயக கொள்கையில் புலிகளிடம் இருந்து பிரிந்த கருணாவை ஏன் துரொகி என்று புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது? அப்படிப்பார்க்கும் போது தற்போது புலிகள் தேசத் துரோகிகளாகவும், மக்களை வைத்துப் பந்தாடிய நாசதாரிகளாகவும் அல்லவா இருக்கின்றனர். தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைக்கு வரும்போது கள்ளக்கடவுச்சீட்டிலா, தமிழீழக்கடவுச்சீட்டிலா அல்லது இலங்கைக்கடவுச்சீட்டிலா பிரயாணஞ்செய்தார்?... அப்படியென்றால் எமது தேசியம் எது??? … எனவே தேசியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பார்க்க எமக்கு இலங்கை அரசிடம் இருந்து சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவே முக்கியம் தேசியத்தைப்பற்றி பிறகுபார்ப்போம். முதலில் எமக்கு அரசிடம் இருந்து உரிமைகள் சிங்களவர்களைப்போல் கிடைக்க ஜனநாயக ரீதியில் போராடுகின்ற அமைப்புக்களுக்கு புலிகள் ஆதரவு வழங்கட்டும். தற்போதைய ஆளுங்கட்சியில் எதிர்க்கட்சியினர் இணையும் செயற்பாடு, ஜனநாயகப்போக்கிற்குச் செல்ல எத்தணிக்கும் புலிகளுக்கு ஒருபாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
அறிக்கை - 1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும்இ 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும்இ பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும்இ 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய
தமிழர் ஓர் தேசிய இனம்
வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை
போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது
தமிழர்களின் வினா - மக்களை ஒன்றிணைப்பது இருக்கட்டும், முதலில் தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் தலைவர்களையும் தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணையுங்கள். மக்கள் தானாகவே இணைவார்கள். அப்போது மேற்குறிப்பிட்ட உரிமைகளில் குறைபாடு எங்கிருக்கின்றதோ அங்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
அறிக்கை - 2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.
தமிழர்களின் வினா - தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏன் உருவாகவேண்டும்? அப்படி ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகியபின்னும் வேறு கட்சிகள் காணப்படுவதற்குக்காரணம்??? அதே கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ செயற்பாட்டின் தலைமை செயற்படாது, உருத்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது ஏன்??? பிரபாகரனுக்கடுத்த தலைமைக்குத் தகுதியுடைய அம்மானின் கருத்துக்குச்செவிசாய்க்காதது ஏன்? மீண்டும் மீண்டும் தவறின்மேல் தவறுசெய்து மக்களுக்கு அழிவினை ஏற்படுத்துவதற்குப்பதிலாக அரசுடன் ஒத்துபோய் மக்களைக்காக்கும் அம்மானுடன் ஒரு சமரசம் மேற்கொள்ளாதது ஏன்??? தன்னுடைய பிரிவின்போது, புலிகள் அவருக்கு எதிராக போர்தொடுத்த போது கூட, மோதலுக்கு இடங்கொடுத்து தனது போராளிகளையும், புலிகளின் போராளிகளையும் இழக்காது விலகிக்கொண்டதிலிருந்து பலவிடயங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதே!!! இதைக்கூட ஊகிக்காத தாங்கள் எப்படி எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றீர்கள்???
அறிக்கை - 3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.
தமிழர்களின் வினா - இதில் உங்களை நிறுத்தி, வரலாற்றைப்புகுத்த விரும்புகின்றேன்… சிங்கள தேசம் என்ற வார்த்தை தவறானது… சிங்களதேசம் என்ற ஒன்று இல்லவே இல்லை… இலங்கை தமிழர்களுக்குச் சொந்தம் அது முழுதும் அவர்களுடைய தேசம்… தமிழர்களாகிய நாம்தான் விஜயனுக்கு தங்க இடமும் கொடுத்து அரசாட்சியையும் கொடுத்தோம்… நீங்களே வெளியுலகிற்கு தவறான வரலாற்கைக் கொடுக்காதீர்கள்.! ஜனநாயகத்தின்பின் ஏற்படுத்தப்பட்ட தவறினால்தான் எமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையில் குறைவைஏற்படுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதன்விலைவே இலங்கையின் யாப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளது அவற்றைத்திருத்தினால் மட்டும் போதும், தமிழீழம் தானாகவே கிடைத்துவிடும்.
அறிக்கை - 4. உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.
தமிழர்களின் வினா - பிரித்தானிய அரசபரம்பரைக்கே கல்விகற்பித்த தமிழர்கள்பரம்பரைநாம், எம்மிடம் இல்லாத அறிவா பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனத்திடம் இருக்கப்போகின்றது? நோர்வே ஆதரவு வழங்கியும் சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளாத தலைவனைக் கொண்ட தாங்களா இன்னொருவனை நம்பி தமிழீழத்தை அமைக்கப்போகின்றீர்கள்… வெளிநாட்டு அரசுகளுக்கே அரசியல் கற்பிக்கும் தமிழர்களை விட்டு புதிதாக எங்கு போகின்றீர்கள் தமிழீழத்தை அமைப்பதற்கு???... 30 வருட தமிழீழத்திற்கு போராட்ட முறையினை மாற்றச்சொல்லி கருணா அறிவித்தும் செவிசாய்க்காத தாங்கள் இன்னொருவரை நம்புவீர்கள்!!!...
அறிக்கை - 5. ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும்இ நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.
தமிழர்களின் வினா - உலகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் என்கின்றீர்கள் அதில் தங்கள் அமைப்பின் பாகங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன… வேறு பொதுத் தமிழ் அமைப்புக்களின் பெயர்கள் எங்கே??? இங்கே நெடுமாறன் எதற்கு??? வைகோ எதற்கு??? அவர்கள் இந்திய மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளட்டும் எமக்கு ஆதரவுதரட்டும் அது போதும்…
அறிக்கை - 6. அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
தமிழர்களின் வினா - இத்தனைகாலமும் ஒரு தனி அரசாட்சிபுரியும் இலங்கை அரசுடனே ஒத்துப்போக முடியாதவர்கள், பல் அரசு சார்ந்த நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதமுடியும் என்பதனை நாம் எப்படி நம்பமுடியும்???
அறிக்கை - 7. உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூகஇ பொருண்மியஇ பண்பாட்டு மேம்பாடுகளைத்
துரிதப்படுத்தல்.
தமிழர்களின் வினா - இத்தனைகாலமும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் இல்லாமல் இல்லை, திடீரென துரிதப்படுத்த எத்தணிப்பதிலும் பார்க்க ஏற்கனவே கலை கலாசார நிகழ்வுகள் தங்கள் அமைப்பையுந்தாண்டி நடந்துகொண்டுதான் இருக்கின்றது அவற்றிற்கு ஆதரவுகொடுங்கள் அது தானாகவே வழரும்… தங்களையும் மீறி பிற அமைப்புக்களில் இருக்கும் தமிழர்களையும் பாராட்டுங்கள் பரிசு வழங்குங்கள் கௌரவியுங்கள் தமிழர்களின் பொருண்மிய மேம்பாட்டு தானாக உயரும்.
அறிக்கை - தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.
தமிழர்களின் வினா- தமிழீழப் பகுதியில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை இன்னமும் முஸ்லீம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது, அமைச்சர் முரளிதரன் அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு தகுந்த அதிகாரங்களை வழங்கி வருகின்றார்… நீங்கள் திட்டம் போடுகின்றீர்கள்… எது சாத்தியமானது? திட்டமா அல்லது செயலா???
அறிக்கை - 9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.
தமிழர்களின் வினா - உள்நாட்டில் வெளிநாட்டில் அரசு அரசாசார்பற்ற அமைப்புக்களுடன் நேரடித்தொடர்பு முதலில் பலப்படவேண்டும்.
அறிக்கை - இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.
தமிழர்களின் வினா - புலிகளுக்கு ஆதரவானவர்களைத்தவிர முன்னைய புலிகள் உறுப்பினர்களும் மற்றைய தமிழர்களும் இலங்கையில் தற்போது நலன்களை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்… விரைவில் அனைத்து இடத்திலும் பதுங்கியிருக்கும் புலிகள் செயலிழக்கும்வரை தமிழர்களை அரசு மீழக்குடியேற்றுவதை மேற்கொள்ளாது என்பது சாதாரண மக்களாலே உணரமுடியும்போது மீண்டும் மீண்டும் மேற்குறிப்பிடுவது போல், சிங்கள அரசு என்று இனிசுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது…காரணம் அரசில் இருக்கும் தமிழர்கள் சிங்களவர்கள் அல்லவே!!! மேலும் பல அமைச்சர்கள் எமது தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும். அதிகாரமுடைய அமைச்சுக்கள் தமிழர்களின் கரங்களில் வரவேண்டும் அதற்காக புலிகளின் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.
அறிக்கை - தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.
இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.
தமிழர்களின் வினா - படித்தவர்கள் மட்டும் அறிவாளிகள் என்றால்!, முன்னைய தமிழரசுக்கட்சியில் இருந்தவர்களும், தற்போதுதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களும் யார்? இதற்கும்மேலாக பிரபாகரனின் கல்வி தரம் என்ன???
அறிக்கை - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.
இக்குழு 2009ம் ஆணடு மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
தமிழர்களின் வினா - இந்த மின்னஞ்சல் செயலுடையாதா இதனை நிர்வகிப்பதற்கு யாரும் நியமிக்கப்பட்டுள்ளனரா? இம்மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பப்படுமா???
அறிக்கை - விசுவநாதன் உருத்திரகுமாரன் – இணைப்பாளர் - 16.06.2009
தமிழர்களின் வினா - இவை அனைத்திற்கும் தாங்கள் தக்க பதிலைத் தரும் பட்சத்தில் சர்வதேசம் திரும்பிப் பார்க்கக்கூடிய வேறு அறிவுடைய, சட்டத்திற்குட்பட்ட, ஏற்றுக்கொள்ளக்கூடிய பல நடவடிக்கைகளை தங்களுக்கு அறிவிக்கத்தயாராக இருக்கின்றோம். – 10 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கான அபிவிருத்தி நோக்கில் இயங்கிவரும்; “புதிய தலைமுறை ஒன்றியம்” 23-08-2009
காலத்திற்குக்காலம் எமது செயற்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்செய்யவேண்டும் என்பதனை அரசியல் நீரோமட்டத்தில் நன்கு புரிந்துவைத்திருக்கின்றனர் சிறீ தமிழீழவிடுதலை இயக்கம். இந்த அடிப்படையில் கடந்த 10ம் திகதியில் இருந்து தமது தமிழ் மக்களின் சமகால அரசியல் திசைவழி என்னும்கணிப்பில் அமைப்பின் பெயரை “புதிய தாயகம்” எனப்பெயர்மாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் சில விடயங்களை உடும்புப்பிடியாகப்பிடித்துவைத்திருந்த எமக்கு இவர்கள் தக்கபாடத்தினைக்கற்றுத்தருகின்றார்கள். எனினும் இவர்கள் மக்களின் அபிலாசைகளை தீர்க்கும் செயற்பாட்டில் எத்தகைய பங்களிப்பினை இனிச்செய்யப்போகின்றார்கள் என்பதனைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இத்தனைகாலமும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஈடுபட்டவர்கள், மேற்கொண்ட பொதுச் சேவைகளில் பொதுச் சேவை இருந்ததோ இல்லையோ பொது வருமானம் இருந்தது. அதாவது, பொது ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வருமானச் செயற்பாடு நின்றபாடில்லை. மதத்தின் பெயரில் தொலைக்காட்சி சேவைகளை நடாத்துவோர்களே அச்சேவையினை இலவசமாக மேற்கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பல்வேறு
உண்மைத் தகவல்களை வழங்கினேன். அதற்கு ஆதாரங்கள்கூட சமர்ப்பித்தேன் ஆனால் அது வெளிவரவில்லை. பின்பு அவர்களுக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன். அது என்னவென்றால், தங்களுடைய தொலைக் காட்சிச் சேவையினை பல தமிழர்கள் புலத்தில் இருந்து பார்க்கின்றமையால் தங்கள் தொலைக் காட்சியினை மக்களுக்கு இலவசமாக வழங்குமாறும், தங்களுக்குத் தேவையான நிதியினை வேறுவழியால் திரட்டிக்கொள்வதற்கு வழிசமைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது என்பதனையும் தெளிவு படுத்தினேன்.
இவ்வாறு தாங்கள் இலவசமாக தொலைக்காட்சிச் சேவையினை நடாத்துவதால், இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்காத சர்வதேச தமிழ்ச் சேவையினைத் தாங்கள் வழங்குவீர்களேயானால், அச்சேவை அடிமட்டத் தமிழர்களுக்கும் போய்ச்சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்காத உரிமைகளை எடுத்துக்காட்டி இப்போராட்டத்திற்கான நடவடிக்கைகளின் இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்பதனையும் தெரியப்படுத்தினேன். அதை அவர்கள் தமது கொள்கைக்குமாறுபட்ட கருத்தினைத் தெரிவிப்பதாக எண்ணி புறந்தள்ளிவிட்டனர். ஆனால்
தற்போது பல தொலைக்காட்சித் தளங்கள் இலவசமாக இயங்குகின்றமையால் தமது நிலை அப்பாவித்தனமாக போனதன் காரணத்தால் தாமும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இத்தாலியில் முதன்முதலாக நாவல் ஒன்றை வெளியிட்ட ஒரு எழுத்தாளன். அதனை விமர்சிப்பதற்கு அப்போது சிறப்பு விருந்தினராக அவ்வெழுத்தாளனால் புலிகள் அமைப்பின் சார்பில் ஒருவரை கௌரவித்து அழைக்கப்பட்டது. 172 பக்கமுடைய ஒரு நூலை உருவாக்க தனிநபர் ஒருவருக்கு எத்தகைய நிதிச்சிக்கல் இருக்கும,; எத்தனை சிரமங்கள் வேலைப்பழு இருந்திருக்கும் அவற்றையுந் தாண்டி அதனை, அவர்களின் அல்லது வேறு அமைப்பின் அனுசரணை இல்லாது வெளியிடுவதென்றால் சாதாரண விடயமல்ல. எனினும் அது வெளியிடப்பட்டது. அதற்கு அவர்கள்சார்பில் விமர்சனமும் செய்யப்பட்டது. அதில் விமர்சித்தவர், இந்த எழுத்தாளன் தம்மைப்பற்றி என்ன எழுதியுள்ளான் என்று பார்த்துவாருங்கள் என்று அனுப்பப்பட்டதாகவும், நூலில் தேசவிடுதலைக்கா மரணித்தவர்களை பாராட்டி எழுதியிருந்ததை அறிந்தும் இன்றுவரை அந்த எழுத்தாளனை சிறப்பித்ததாக இல்லை. இந்த வெளியீடு 2003ல் இடம்பெற்றது . அதன்பின்னர் அந்த எழுத்தாளன் இத்தாலியில் இருந்து இன்றுவரை அதாவது 2009ல் பல நூல்களை வெளியிட்டிருந்தும் அந்த எழுத்தாளனையோ அவரின் நூல்களையோ, தமிழீழ அரசை அமைக்க போராடிய அமைப்பு கண்டுகொள்ளாதது, தமிழர்களின் சொத்தினையும் மற்றும் வரலாற்றினையும் புதைக்கின்ற, அழிக்கின்ற செயல் என்பது கற்றோருக்கு நன்கு தெரிந்தவிடயம்.
அந்த எழுத்தாளனுடைய நாவல் ஒன்று இத்தாலிமொழியில் மாற்றப்பட்டதும் அதற்கு இத்தாலி அரசின்சார்பில் பாராட்டுகிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த எழுத்தாளன் வேறு யாருமல்ல வெந்த அனுபவங்களுடன் இதை எழுதிக்கொண்டிருக்கும் நானேதான்.
“நல்லதோர் வீணைசெய்து அதை நலங்கெட புழதியில் எறிவதுண்டோ???”
இத்தாலியில் வாழ்பவர்களுக்குத்தெரியும், எனது பொதுச் சேவைகள்பற்றி. கடந்த பத்துவருடத்திற்கும்மேல் எனது சேவை மூலம் ஏராளம் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றுநாட்டவரும் பலனடைந்துள்ளனர். இதற்கு என்னுடன் பலத்த அரணாக நின்று இன்றுவரை ஊக்கம் கொடுத்துவரும் எனது மனைவியை மதித்துப்பாராட்டாமல் இருக்க முடியாது. நண்பர்கள் பலர் வந்துபோனர், ஆனால் தொடர்ச்சியாக எனது வெற்றிகளிலும் எனக்கேற்பட்ட எதிர்ப்புகளிலும் எனக்குக்கை கொடுத்த அவர்களுக்குத் தமிழர்கள் சார்பில் தலைவணங்குகின்றேன். எனக்கு ஏற்பட்ட அறிவுப்பசிக்கும் பொதுச்சேவைத் துடிப்பிற்கும் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியதோடு அதனைமுறியடிக்க அவமானங்களையும் வதந்திகளையும் அமைப்பாகச் செயற்பட்டோர் மேற்கொண்டதன் விளைவே இன்று “புதிய தலைமுறை ஒன்றியம்” என்ற அலுவலகம் இத்தாலியின் பலபாகங்களிலும் செயற்படக்காரணம். எனவே எம்மை உதார்சீனப்படுத்திய அமைப்பிற்கும், ஊடகங்களுக்கும் எமக்கு எதிர்ப்பினைத்தூண்டிவிட்ட தமிழர்களுக்கும், வஞ்சகவலை வீசிய நண்பர்களுக்கும் எமது ஒன்றியத்தின் மூலமும் எனது மூலமும் நன்மையினைப் பெற்றநூற்றுக்கணக்கானவர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனை இங்கு தெரிவிப்பதற்குக் காரணம் உண்டு, எமக்கு வேண்டியது விடுதலை என்றால், அது எமது எதிரியால் கிடைத்தாலும் அதனை மக்கள் பலரின் நன்மை கருதி பெற்றுக் கொண்டே ஆகவேண்டும். இங்கு தற்பெருமைக்கு இடமில்லை. அதேபோன்று திறனும், அறிவும், முயற்சியும், விவேகமும், ஆழுமையும் உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் அவர்களைப்பாராட்டி கௌரவித்தே ஆகவேண்டும். அப்படியென்றால் எமது உறவுகளுக்கு…?! எமது எதிரி என்பதற்காக அவனுடைய திறமையினை குறைத்து மதிப்பிடுதலோ ஏழனஞ்செய்தலோ தகாதது.
கருணாவின் சாதனைகள் விடுதலைப்புலிகளுடன் இருக்கும்போது பாராட்டிற்குரியதும் பெருமைக்குரியதும் என்றால், அதில் இருந்து பிரிந்ததன்பின்னர் அப்பாராட்டுக்கள் மறக்கப்படக்கூடியதல்ல மறுக்கப்படக்கூடியதுமல்ல. பாரட்டுக்கள் எப்போதும் பாராட்டுக்களே!!! …. தொடரும் …
தமிழ் மக்களின் பணதில் தனது வாழ்க்கையினைச் செலுத்தியோர் எத்தனையோ பேர் திகைப்பில் இன்று காணப்படுகின்றனர். அத்தோடு புலிகளின் பெயரைச் சொல்லித்தம்மைத் திடப்படுத்தியவர்கள் இனி தமது நடை உடை பாவனைகளை மாற்றியாகவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு, மக்களின் உரிமை என்பது வேறு, மக்களுக்காய் தம்மை அர்ப்பணித்து தமது உயிரை இழந்த ஆயிரக்கணக்கானோரை பலிகொடுத்த செயல் சுயநலப்போக்குடையதாக மாற்றமடைந்துள்ளது. கே.பி. யின் செயலால் மேலும் தமிழர்களின் மிஞ்சியிருந்த நம்பிக்கையும் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.
கேபி பிடிபடக்காரணம் அவருடைய கவனக்குறைச்சலா அல்லது இலங்கை புலநாய்வுத்துறையின் முயற்சியா அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் கேபியை தலைவராக்கவிரும்பாதவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா? இதற்கான பதில் அடுத்து வெளிவரவிருக்கிறது தொடர்ந்தும் எமது இணையத்தைப்பாருங்கள்.
பிரபாபின் இறுதிக்கட்ட அறிக்கைகள் எங்கே??? பிபாவின் மரணத்தில் சதி இடம்பெஙற்றமைக்குக் காரணம் கேபியா??? 81ம் ஆண்டுக்குமுன்னர் பிரபாவுடன் மிகநெருக்கமாக இருந்தவர்களில் கருணாவும் கேபியுமாவார்கள் அன்றாடம் இறப்பினைக்கண்டு கொண்டமக்கள் இப்போது நிம்மதியான ஒளியினை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அது கருணா என்ற தனிமனிதனால்தான்.
இத்தாலியில் புலிகளுக்கு ஆதரவானவர்களைப் புலநாய்வுத்துறையினர் கைதுசெய்தபோது, தமிழ் தேசவிடுதலைக்காக நமது பங்களிப்பு என்ற ரீதியில் பிடிபட்டவர்கள் தமது தலைமைத்துவங்களைக் காட்டிக்கொடுப்பில் அவர்கள் ஈடுபடவில்லை.
ஆனால் தலைமைக்கு ஆசைப்படுவோர் தமது மக்களை ஆதரவற்றுக் கைவிட்டநிலையில், காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டடிருப்பது தமிழினத்தின் கேவலத்தைக்காட்டுகின்றது. இலங்கை அரசிற்கு ஒரு அறிவித்தலை விட விரும்புகின்றேன். தமிழர்களின் அபிவிருத்திக்கு புலிகளின் ஆதரவில் திரட்டப்பட்ட நிதி அனைத்தையும் சேர்த்தாலே பாதி துன்பத்தை துடைக்கமுடியும். கேபி யிடம் இருக்கும் தொகைப்பணத்தின் விபரத்தினையும், மேலும் உலகம்முழுதும் பரவிக்கிடக்கும் பெருந்தொகையான பணத்தையும் திரட்டினாலே மக்களின் பாதிப்பினை ஈடுசெய்யும் பெரும் பாரம் குறைந்துவிடும்.
சாதாரண அமைப்புக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கலைநிகழ்ச்சிகள், அறிவுரீதியிலான செயற்பாடுகளால் தமக்கு வேண்டிய நிதிகளைத்திரட்ட முயன்றாலும் அது போதாமல் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் தொழில் அற்றநிலையிலும் புலிகளால் வாழமுடிகின்றது என்றால்???
புலிகள் தொடர்பாக தத்துவ எழுத்தாளர் என்று (UNGA) “புதிய தலைமுறை ஒன்றியத்தால்” பெருமைப்படுத்தப்பட்ட அருகனின் அவர்களின் 2006ல் “மலருமா தமிழீழம்” என்ற நாவலில் இதுதொடர்பான பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் பகுதி பின்வருகின்றது …
“இலங்கையின் போராட்ட காலத்தையும் அதன் இழப்புக்களையும் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழீழப் போராட்டத்திற்காக இருபக்கத்திலும் இழப்பு அளவுக்கு மீறியதாகவே காணப்படுகிறது. பொருட்சேதங்களை விட்டுவிடுவோம், உயிர்ச்சேதங்களைத் தொட்டுப்பாருங்கள். எமக்குள்ளே கருத்து வேறுபாட்டில் இழக்கப்பட்ட உயிர்கள், அதிலும் இழக்கப்பட்ட புத்தி ஜீவிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்…!
“சந்தர்ப்பங்களும் சாமர்த்தியங்களும் சாய்ந்து கொடுக்காத போது, உண்மையும், அறிவும் பலன் குன்றிப் போகிறது.”
ஒரு சென்ரி மீற்றர் கோடு ஒன்றைப் போட்டு விட்டு அதனைத் தீண்டாமல் அக்கோட்டினைப் பெரிதாக்கு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் அரைசென்ரிமீற்றர் கோடு போட்டாராம். மற்றைய கோடு போடுமட்டும் முன்னைய கோடு சிறிதாகத்தான் இருந்தது; இன்னொன்றோடு ஒப்பிடும் போதுதான் அதன் தன்மை புலப்படுகிறது. அது போலத்தான் உலகத்தில் ஏராளம் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு கவிதைகள் பல வெளிவரக்கண்டேன்; அவற்றிற்குப் பாராட்டும் கொடுத்துப் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால், அக்காலத்தில் இருந்தே எனது கவிதைகளில் வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் சந்ததிதான் ஈழத்திற்கு மிஞ்சப்போகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்தே எமது வரலாற்றைச் சித்தரியுங்கள் என பல்வேறு கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன்; அப்போது அது மதிக்கப்படவில்லை. (இருவது வருடத்திற்கும் முன்னர்)
இப்போது நிலமை எப்படிப்போகிறது…
வெளிநாடுகளில் இருந்து குவிகின்ற பணம் தான் போராட்டபின்னணிக்கான வியாபாரத்தைத் தோற்றுவித்துள்ளது.
பல்வேறு இயக்க அமைப்புக்கள் தோன்றுவதை அக்காலத்தில் இருந்தே பலம் பொருந்திய இயக்க அமைப்புக்கள் எதிர்த்து வந்தன. ஆனால், பல்வேறு தொடர்புச் சாதன இலாப அமைப்புக்கள் தோன்றிவருவதையும், அவை மக்களுக்கு வழங்கிவரும் தொடர்புச் செய்திகள் அதிக செலவில் அமைந்த போதிலும், அவற்றைக் கண்டிக்கவோ அல்லது ஒண்றிணைத்து நல்ல சேவையாகத் தொகுத்து வழங்கவோ ஏன் இவ்வமைப்புக்கள் முன்வரவில்லை.
“சிறு சிக்கலற்ற விடையத்திலே ஒத்துப் போகாதவர்,
எப்படி பெருஞ்சிக்கலான விடையத்தில் ஒத்துப்போவார்”
எவ்வளவோ கஸ்டப்பட்டு அசாதாரணமாக, நாட்டுச் சூழல் காரணமாகவோ, குடும்பச் சிக்கல் காரணமாகவோ ஒருவன் வெளிநாட்டுக்குள் புகுந்து, அவன் சிறையில் அன்னியன் கையில் அகப்பட்டுக் கிடக்கிறான். இதனைக் காரணமாக வைத்து அமைப்புக்களின் சார்பில் உள்ளவர்கள் அவர்களை வெளியில் எடுத்து விடுவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள். அகப்பட்டுக் கிடப்பவர்களை பயமுறுத்தி அவர்களை, புரியாத மொழிக்குள் இருக்கும் காரணத்தால், திண்டாட வைக்கிறார்கள். சாதாரணமாக அந்நபரை வெளியில் விட்டதும் இவர் வெளியில் வந்ததற்குத் தான்தான் காரணம் என்று சொல்லி 1000€ கறந்து விடுகிறார்கள். இது அமைப்பின் கணக்க்குள் போய்ச் சேருவதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அமைப்பும் இது போன்ற பல தவறுகளைக் கண்டு கொள்வதில்லை. காரணம், அவரைப்போன்று செயற்படுவதற்கு இன்னொருவர் கிடைக்கவல்லவா வேண்டும்.
சரி, ஒரு முக்கிய விடையத்திற்கு வருவோம் தமிழீழம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இல்லை தமிழீழத் தனிப் பிரகண்டணம் செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உலகரீதியில் அதற்கு ஏற்படும் மாற்றங்களையும் உலகரீதியில் அவை அமைப்பதற்குள்ள சட்டங்களையும் பார்க்கும் முன் ….
வீதாசாரத்தில் உலக ரீதியில் தமிழர்களைப் பார்க்கும் போது, இலங்கையில் உள்ள தமிழர்களிலும்பார்க்க அதிகமாக வருங்காலங்களில் புலத்தில் அமைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவிற்குப் போகிறவேளையில், தமிழர்களுக்கான அதாவது, ஈழத்ததூதராலயம் என்ற ரீதியில், திழீழவிடுதலைப்புலிகள் ஏற்படுத்தப் போகவிருக்கும் அலுவலகங்களைப் பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? எமது தேவைகளுக்கு இலங்கை அரசிடம் நாடி நின்றது போல் இனி எங்கு போவது? கடவுச் சீட்டுக்கள், விசாக்கள், மற்றும் ஆவணங்கள்… இவற்றிற்கு நாம் கட்டவேண்டிய கொடுப்பனவுகள் இலங்கை அரசிற்குக் கொடுத்ததை விடக் குறைவாகவா கொடுக்கப் போகிறோம்?... இதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை வேற்றுநாட்டவரிடம் இருந்தா கடன் கேட்கப்போகிறார்கள்?...
இலங்கை அரசிடம் இருந்து மீட்டு, நம்மை நாமே கேவலப்படுத்தப் போகிறோமா? அல்லது, இலங்கை அரசு வழங்கிவந்த சேவைகளிலும் பார்க்க பன்மடங்கு புனரமைக்கப்பட்டு கிடைக்கப்போகிறதா? இதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நையாண்டிச் சாட்டுச் சொல்லும் மக்கள்மத்தியில் எதைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கொஞ்சநெஞ்ச கஷ்டங்களாபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் யார் தீர்ப்பது? தமிழர்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் போராட்டத்தில் முன்னணியில் நின்று, இப்போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பைக் கேட்டு கொள்ளும் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் தாம் கேட்கவேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதி, உலக ரீதியில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதியா?
“உயிர், என்னதான் செய்தாலும் மனிதநேயத்தின் முன் ஒன்றுதானே!”
ஆரம்பத்தில் பல இடங்களில் தமிழர்களின் வளர்ச்சியினைப் பாராட்டியிருக்கிறேன். எனினும், நாம் வளர்கிறோம் என்றும், எமக்கு மக்கள் பலம் அதிகம் என்ற வைராக்கியத்திலும், நாம் வேறுநாட்டுச் சட்ட திட்டங்களுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிநாட்டில் இருப்போர் மறந்து விடக்கூடாது. அதன் கவனக்குறைச்சல் மேலும் தமிழர்களின் வாழ்விற்குப்பங்கம் விளைத்தாலும் விளைக்கலாம்.
ஒரு முறை இத்தாலியில் இருக்கும் ஒரு சேவை அமைப்புடன், தமிழீழத்திற்காகப் போராடும் அமைப்புச் சார்ந்த முக்கிய பிரமுகர் சிலரும் ஒன்று கூடலில் இருந்த போது, தமிழர்களுக்கென தமிழர்களிடம் இருந்து பணம் திரட்டுவது தொடர்பாக பேசப்பட்டபோது அந்த இடத்தில் எழுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
“தமிழீழத்தில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்களுக்காக நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டக் கூடியது. எனினும், இங்கிருக்கும் ஒருசிலர் (இத்தாலியில்) அவர்களைப் போல் சிரமப்படுகின்றனரே அவர்களுக்கு…?” என்று இத்தாலியில் உள்ள சேவை அமைப்புக் கேட்டபோது;
“அது அவர்களின் தலையெழுத்து- அவரவர் தேடிக்கொண்டது, நாங்கள் அங்கிருப்பவர்களைத்தான் பார்ப்போம்” என்று பிரமுகர் சார்பில் வந்தவர் அருவெறுப்புடன் பதில் சொன்னார்.
“இங்கிருப்பவர்கள் நல்லா இருந்தால் தானே அவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கு உதவமுடியும்” என்று மீண்டும் கேட்டபோது…
“அது எங்கட வேலையில்லை” என்று சம்மந்தமில்லாது எதையோ பேசத்தொடங்கினார் அவர்.
இவர்களை நம்பி எப்படி தமிழீழத்தை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி ஆவணங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அதிகாரங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அலுவலகங்களை ஒப்படைப்பது?...
இவர்களா வருங்காலத்தில் து}தராலயங்களில் அமரப் போகின்றனர்?
இவர்களா ஆவணங்களில் ஒப்பமிடப் போகின்றனர்?
இவர்களை நம்பியா 30 வருத்திற்கும் மேற்பட்ட போராட்டம் இடம் பெற்றது?
இவர்களை நம்பியா எமது உறவுகளைப் பறிகொடுத்தோம்?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென்று தமிழீழத்தில் தனி கௌரவம் கொடுக்கப்படும் போது இவ்வாறானவர்களினால், அந்த கௌரவத்தில் கறை விழுந்து விடாதா?
இத்தாலியில் உள்ள ஒரு சில கேவலமான எம்மவரின் வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…
(இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் சின்னங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனைக் கருத்திற் கொள்க.)”
என்று அந்த நாவல் செல்கின்றது. எனவே இந்த நாவல் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த புலிகளின் புலத்து ஆதரவாளர்களுக்கு தலைவலியாக இருந்தது. எனவே இந்நாவலை புறந்தள்ளினர். இந்நாவலின் பகுதிகளை ஏற்றிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் அவர்கள்கையில் என்பது திண்ணம். – தொடரும்.
|
|