Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
|
August 16 Tantissime persone a casa mia - F.J.JenniferTantissime persone a casa mia
Embassy a casa mia
Il giorno 25-07-2009 alle ore 08:00 c’erano tante persone davanti a casa mia, per fare tante cose come per esempio: richieste di passaporti, registrazioni La mattina presto, dopo aver finito di vestirmi, ho guardato in giro per la casa e ho pensato :-Ma ancora non è venuto nessuno? Per quale motivo? - A poco a poco ho capito tutto, che tutta la gente aspettava il proprio turno fuori. Io pur avendo 11 anni, volevo aiutare i ragazzi della UNGA, ma non sapevo in che modo potevo essere utile. Ma aspettando un po’ ho capito cosa fare; infatti, ho cominciato a dare una mano al signore che era addetto a fare le fotocopie, ho risposto a tutte le chiamate telefoniche di mio zio MAXIMIN (ARUGAN) che è anche il responsabile della UNGA, e così via ad aiutare fino alle 14:00 perché poi noi abbiamo fatto una piccola pausa pranzo e abbiamo ricominciato verso le ore 16:00 e così fino alle ore 21:00 di sera, ma anche dopo che noi avevamo finito di mangiare c’erano due famiglie, una aveva chiesto se poteva collaborare con l’Unione il giorno dopo, invece l’altra per riempire soltanto un foglio.
Embassy vicino alla mia chiesa
Il giorno 26-07-2009 alle ore 10:30 vicino alla chiesa S. Chiara c’erano tantissimi poliziotti e carabinieri di sicurezza e persone per fare i passaporti, soggiorni ecc… in questo grande evento, ho partecipato pure io, aiutando sempre a fare le fotocopie di Abbiamo fatto la pausa alle 14:00 e subito dopo abbiamo ricominciato. E così via fino alle ore 18:00 perché i funzionari dell’ambasciata dovevano rientrare a Roma. Qui tengo a precisare che quel giorno anche io ho fatto domanda del mio primo passaporto e per far ciò ho aspettato pazientemente il mio turno, pur avendo lavorato per UNGA. Grazie ad UNGA mio padre ha risparmiato le spese di trasporto per Roma, la giornata di lavoro, ecc… Secondo me, quella giornata è stata bellissima, e vorrei ringraziare la UNGA e tutti quelli che mi hanno reso partecipe.
Da: Florence Jails Jennifer July 07 திருமதி ஷானா அவர்களே இத்தகுதிக்குரித்துடையவர்உலகத்தின் பாரிய திட்டங்களில் ஈழத் தமிழர்கள் நடமாடுகின்றமை, தமிழுக்கு மட்டும் பெருமையல்ல ஈழத்தமிழர்களுக்கே பெருமை. இத்தாலி மிகப்பெரிய தொழிற்சங்கத்தில் கடந்த 4வருடங்களாகப்பணியாற்றும் ஈழத்துத்தமிழ்ப்பெண்மணி, இத்தாலியின் சட்டமாற்றங்கள்தொடர்பாக இத்தாலிய ஊடகத்தில் செவ்விவழங்கியபோது... இவர் பலமொழிகளைச் சரளமாகப்பேசக்கூடிய திறன்வாய்ந்தவர் என்பதும், தமிழர்களுக்கும் பொதுத்தொண்டிலும் அதிக கவனம் உடையவர் என்பதும் அவருடைய சேவைகளில் இருந்து தெரியவருகின்றது. அத்துடன் பல மேடைகளில் நடனங்களை ஏற்றியவரும் பல கலைஞர்களை மேடையேற்றியவரும் என்ற பெருமையும் ஒருபுறம் உண்டு. அதுமட்டுமல்லாது, பல அரச கருத்தரங்கில் இவர் உரையாற்றியிருக்கின்றார். இவர் தொடர்பாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முன்பே வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தமிழர்களுக்கு இத்தாலி சட்டமாற்றங்களை அறிவித்து அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்கூட்டியே ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் அவர்.... திருமதி ஷானா அவர்களே இத்தகுதிக்குரித்துடையவர்.
தற்போது மிகப்பிரபல்யமாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தாலிழய சட்டமாற்றம் தொடர்பாக அவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியை இங்கே காணலாம். தகவல் ஒன்றிய வெளியீட்டு சிறப்புப்பிரிவு June 26 மைக்கேல் ஜாக்சன் காலமானார்!!????ஜாக்சனின் மரணம்பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார் !!
March 13 தொழில் அற்றோர்களுக்கு புதிய உதவித்தொகைஇத்தாலியில் தொழில் அற்றோர்களுக்கு புதிய உதவித்தொகையினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இதுதொடர்பாக மேலதிகத் தொடர்பு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம். January 08 தவிர்க்கமுடியாத காரணத்தால்தவிர்க்கமுடியாத காரணத்தால் சில நாட்களாக எமது இணையம் வெளியீடுகள் எதையும் மேற்கொள்ளாததையிட்டு வருந்துகின்றோம். கடந்த காலத்தில் இத்தாலி அரசினால் வெளியிடப்பட்ட சட்டத்தின் செயற்பாடுகள் எமது வேலையினை அதிகரித்ததன் காரணம் எம்மை இச்செயற்பாட்டில் பின்னடையச் செய்தது. எனினும் விடுபட்ட பின்னடைவுகளை மீண்டும் தொடருவோம்.
இவ்வருடத்தில் அனைவருக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கின்றோம். November 17 தமிழர்களின் அழிவில் வேடிக்கைகள்…தமிழர்களின் அழிவில் வேடிக்கைகள்…
விளம்பரபோராட்டம் தமிழீழ போராட்டத்தை இத்தனை காலமும் அரசியல் வாதிகளே பயன்படுத்தினர் தற்போது தனிநபர், நடிகர்கள், வியாபாரிகள், திருடர்கள், அமைப்புக்கள் என்று ஆளாளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். துமிழகத்தில் நடக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் பார்க்க ஈழத்தமிழர்களின் நலன்கருதி தமிழகத்துத்தமிழர்கள்
Romeஇன் இலங்கைத்தூதராலய பின்னடைவு
கடந்த 20-07-2008ல் இலங்கை அரசுடனான சேவையினை நாம் மேற்கொண்டொம். அது நல்லவிதமாக அமைய எமது பலத்த செயவையும், வியர்வையினைச் சிந்தினோம். எனினும் இன்றுவரை ஆவணங்கள் பூர்த்தியாக்கப்படாமல் 4மாதங்கள் ஆகின்றன எம்மிடம் வந்து சேர்ந்த 300க்குட்பட்ட ஆவணங்களில் 4 மட்டுமே பதில் தரப்பட்டன அதுகூட வெறும் கொன்சுலர் கடிதமும், மொழிபெயர்ப்பும் இன்னும் ஏராளம் ஆவணங்கள் நிலுவையில் நிற்கின்றன இதற்கு முடிவுதான் என்ன?
தமிழ் அதிகாரிகள் கைபொம்மைகள்…
இவ்வாறு தமிழர்களுக்கு வழங்கும் சேவையினை முறைப்படி வழங்காது காலதாமதம் செய்வதும் தமிழர்களைத் தகாத முறையில் நடாத்துவதையும் எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தீர்த்துவைக்கப்போகின்றனர். றோமில் தமிழ் ஊழியராகக்கடமையாற்றும் அதிகாரிகூட பொம்மையாகிவிட்டார் காரணம் ஏன்???
எப்படித் தொடர்புகொள்வது?
அரச அமைப்புக்களுடன் அல்லது அதிகாரிகளுடன் எப்படித் தொடர்பு கொள்வது? அனுப்பப்படும் ஆவணங்கள் கிடைக்கின்றனவா இல்லையா என்று கூடத்தெரியவில்லை. கட்டணங்கள் கட்டியதற்கான பற்றுச் சுpட்டு இருக்கிறது ஆவணங்கள் பூர்த்தியாகவில்லையே!!! November 15 இத்தாலி தமிழர்களே பொருட்களை வாங்கும் போது...இத்தாலி தமிழர்களே பொருட்களை வாங்கும் போது...
கடைகளில் பொருட்களை வாங்கும் போது நன்கு கவனித்து வாங்குங்கள். கடந்த காலங்களில் பல கடைகளுக்குச் சென்று இது பற்றி அலசினோம் அதில் பல்வேறு தவறுகள் கவனக்குறச்சல்கள் இடம்பெறுவதை அவதானித்தோம். அதில் எஜ்சலுரங்க என்னும் கடையில் இறுதியாக நடந்த சம்பவம். எம்மை இதுபற்றித் தெரிவிக்கத்தூண்டியது.
பொருட்களின் அண்மையில் குறிக்கப்பட்டிருக்கும் விலைக்கும் காசாளர் கணனியினால் பதிக்கப்படும் விலைக்கும் பாரிய மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம் மட்டுமல்லாது வெளிநாட்டவர்கள்தானே இத்தnலி மொழிதெரியாது என்ற கணிப்பிலே உங்கள் கருத்தினை சரியாக இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள் எனவே கவனித்துக் கொள்ளுங்கள்.
பற்றுச்சீட்டில் ஒருவிலையும் பட்டியலில் பிறிதொரு விலையும் இருக்கக்கண்டோம். பல பொருட்கள் வாங்கும் போது இத்தவறுகள் ஏற்பட வாய்ப்பதிகம் அவ்வாறான தவற்றினால் 5 யூறோக்களுக்கு மேல் இழக்க னேரிட்டது எமது கவனிப்பால் அது மீழப் பெறப்பட்டது.
November 05 இலங்கைத் தமிழ் அதிகாரிகளே பதவியில் இருக்கும் போதே உதவுங்கள்தற்கால இலங்கை அரச அதிகாரிகளான திரு. பிள்ளையான் மற்றும் திரு கருணா அவர்கள் ஆடும் அரசியல் சதுரங்கள்கள் பாராட்டக்கூடியன. இதில் அவரவர் தம்மைப் பிரபல்யப்படுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு தமது பதவியால் சாதிக்க வேண்டிய சிறு நேரத்தையும் விரையம் செய்கின்றனர். கண்களை மூடித்திறப்பாதற்குள் அதிகாரங்கள் கைநழுவிவிடும் என்பதனை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றேன். விடுதலைப்புலிகளில் குற்றத்தைக்கண்டு பிடித்தவர்கள் தமக்குள்ளே பிளவினைக்காட்டும் செயலால் அவர்கள் சாட்டிய குற்றங்கள் தகாததென்பதனை அவர்களே அடியெடுத்துக் காட்டுகின்றனர். கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களையாவது நிம்மதியாக சம உரிமையுடன் வாழ்வதற்கான பாதைகளைத் திறப்பதற்கு வழிசமைப்பதை விடுத்து இத்தகைய கேடுகெட்ட அரசியல் படுகொலைகள் குற்றச்சாட்டுக்கள் தேவைதானா? பதவிக்காலம் முடிவதற்குள் தங்களால் ஆன சாதனைகளை சாதியுங்கள் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் தமிழர்கள் பெருமையுடன் வாழ வழிசெய்யுங்கள் – ஏங்கும் தமிழர்கள் சார்பில் அருகன் BARACK OBAMA 44° PRESIDENTE DEGLI STATI UNITI
வெள்ளை இனத்தவர்களுக்குமத்தியில் ஒரு கறுப்பின வெற்றி அமேரிக்காவின் 44வது அதிபராக கறுப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பல மாறுதல்களைச் செய்வார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேரிக்காவுக்கு மட்டுமல்ல பல ஐரோப்பிய நாட்டிற்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். வெளிநாட்டவர் வெளிநாட்டவர் என்று ஒதுக்கும் இடத்தில் இது மாறுதல் இல்லையா?... எமது தமிழர்கள் கூட ஒற்றுமையினைக்கடைப்பிடித்தால் திழீழம் ஒருபுறம், பிறநாட்டிலும் அதிகாரியாகலாம். என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. October 22 குறைகள் கூறினாலும் அவைகள் எமக்குப் பாராட்டுக்களே!இத்தளம் மேலும் உங்கள் கருத்தினை வரவேற்கிறது. இன்றுவரை பலர் இதன்மூலம் பலனடைந்துள்ளார்கள். எனினும் இதனைப் பிறருக்கும் அறிமுகப்படுத்துவதன்மூலமே எம்மை மென்மேலும் ஊக்கமடையச் செய்கிறீர்கள் என்பதனை கவனத்திற் கொள்க. அனுப்பப்படும் உங்கள் கருத்துக்கள் வீண்போகாது வரலாற்றில் அவைகளும் இடம்பிடிக்க வாய்ப்புண்டு... குறை நிறை அனைத்தும் தயக்கமின்றி வரவேற்கப்படுகின்றன... ஆதரவுகளுக்கு நன்றிகள். அன்பன் அருகன். October 08 இத்தளத்தினை மற்றையதமிழர்களுக்கும் அறிமுகஞ்செய்யவும்.இத்தளத்தினை மற்றையதமிழர்களுக்கும் அறிமுகஞ்செய்யவும். இத்தளம் இத்தாலித் தமிழர்களுக்க மட்டுமன்றி ஈழத்தில் வாழ்கின்ற மற்றும் உலகத்தின் அனைத்துப்பகுதியினருக்கும் கைகொடுக்கும். எனவே இதனை பாரபட்சமின்றி அறிமுகப்படுத்தவும் தங்கள் கருத்தினையும் தெரிவிக்கவும். தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் arugan@libero.it
October 01 Discussione su Arugan (Ithil ulla vluththukkal "Rashigapiriya, Rasiharia..." vdivil eluthappatdullathu )
Arugan (Ithil ulla vluththukkal "Rashigapiriya, Rasiharia..." vdivil eluthappatdullathu ) September 30 வரலாற்றுத்தகவல்கள்
யூலியஸ் சீசர் பி.தி:-12யுலை யூலியஸ் சீசரின் மருமகன் -அகஸ்டஸ் அகஸ்டஸின் மகன் டைபீரியஸ் டைபீரியசின் மகன் ஆசளத்தகுதியற்ற ஒரு கிறுக்கனாக இருந்ததால் தன் உறவுக்காரனானகாலிகூலாவை ஆட்சியில் அமர்த்தினர். இவனும் கிறுக்குத்தனமான செய்கைகளால் ஒருசர்வாதிகாரத்தைச்செய்தவன் ஏப்பிறல் 30. 1945.இரவு9.00மணியளவில் இத்தாலியில் முசொலினியும் அவரது மனைவியும் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிட்லர்.1889இல் ஏப்பிரல் 20தில் ஓஸ்ரியாவில் உள்ள பிறானவ் என்ற இடத்தில் பிறந்தான் 1903ல் தந்தை இறந்தார்.1907இல் தாய் இறந்தாள் (கிளாரா போல்ஸ்). தகவல் வீரகேசரி 04.03.2001 ஞாயிறுஇ 2000.ஜனவரி26ல் குஜராத் நிலநடுக்கம் ராஜீவ் காந்தி அகாலமரணம்:-20.08.1944-21.05.1991 • வணபிதா தனிநாயகம் அடிகள் (உலக தமிழ் ஆராய்ச்சிக் கழக ஆரம்ப கர்த்தாவும் தமிழ்ப் பேரறிஞ்சரும். 02.08.1913-01.09.1980 September 24 சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்தளத்திலிருந்துஆக்கர்:சுவாமி விவேகானந்தரின்
1. வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893 அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்: எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? - செப்டம்பர் 15, 1893
'நீ எங்கிருந்து வருகிறாய்?' 'கடலிலிருந்து' 'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது. 'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
September 22 17-18/09/2008 தொழிலாளர் சங்கத்தின் சார்பில்கடந்த நாட்களில் "ஐரோப்பிய ஒன்றியத்தின்" வெளிநாட்டுப்பிரதி நிதிகளுடனான ஒன்று கூடலில் இத்தாலிய "தொழிலாளர் சங்கத்தின் சார்பில் " தலைமைத்துவம் சந்தித்து தமது நிலவரங்களையும் வெளிநாட்டுமக்களின் நிலவரங்களையும் இத்தாலிய அரசின் சட்டதிட்டங்களையும் எடுத்துரைத்தனர். இதில் தமிழர்கள் பிரதிநிதிகளாக Mr.Maximin மற்றும் Mrs.Shana அவர்களும் பங்குபற்றி சிறப்பித்ததோடு, Mrs.Shana அவர்கள் அதற்கான விளக்கங்களை பன்மொழியில் எடுத்துரைத்ததையும் பின்வரும் படங்களில் காணலாம்.
September 20 அருகனின் புதிய வெளியீடு
அருகனின் புதிய வெளியீடு - "மலரும் மா தமிழீழம்!?." தமிழர்களுடைய பண்டைய ஈழ வரலாறு, யாழ்ப்பாண அரசர்கள், இன்றையதமிழர்களின் நிலை, எதிர்காலமாற்றங்கள் போன்ற தகவல்கள் உள்ளடங்கியது. இதன் வெளியீட்டுக்கு ஐரோப்பிய தொடர்புகள் வேண்டப்படுகிறது. வெளியீட்டுப்பிரிவு September 10 Sportello Unico per l'Immigrazione Verifica Avanzamento Domande OnlinePuthiya thakaval inaikkappadukirathu... |
|
|