|
|
November 23 நிலத்தில் விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை!!! என்று சிங்களவர் கேலி செய்யாரோ? யாரையோ கேவலப்படுத்துவதாக நினைத்து தமிழர்களுக்காக இன்றுவரை தம்முயிரைக் ஈந்த புலிகளின் அதி தூய மதிப்பை இலங்கை அரசு கறைப்படுத்த எத்தணிக்கும் போது அதை மென்மேலும் தமிழர்களே ஆதரவாக செயற்படுவது தமிழர்களின் அறிவின்மையைக்காட்டுகின்றது. இது புலிகளைப் பெருமைப்படுத்துமா அல்லது, இலங்கை அரசை சிறுமைப்படுத்துமா… தமிழர்கள் மத்தியில் தற்பெருமை கொள்ளலாம் ஆனால் சட்டம் உண்மை சர்வதேசம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. தமிழர்களின் மூலை முடுக்கிலிருக்கும் அனைதஇது இணையமும் இலங்கை அரசின் கண்காணிப்பில் செல்லாது என்பது தங்கள் எண்ணம் போலும். வீரம் என்பது வேறு விவேகம் என்பது வேறு… இந்த செயல் வீரமா வீவேகமா??? சர்வதேச அரசியலை தமிழ்ச் சிறுவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் மதிப்பிற்குரிய நாளினை எவ்வாறு நாம் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே அவசியம். எமக்கு விடுதலையும், சுபீட்ஷமும், எம்மை நாம் ஆழக்கூடிய அதிகாரமுமே எமக்கு வேண்டியது… சிங்களவனை அடிமைப்படுத்துவதோ அல்லது கேவலப்படுத்துவதோ அவசியமற்றது. குhரணம் தமிழீழம் அமையுமாயின் சிறீலங்க எமது விரோதியோ நண்பனோ எதுவாக இருந்தாலும் அது அயல்நாடு. சர்வதேச விஸ்தரிப்பிற்கு அது அவசியம் என்ற அடிப்படை நியமணங்களை இப்போதிருந்தே தமிழர்களின் சிறு பிள்ளைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்  பின்னுள்ள இந்த பகுதி தமிழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது... இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம் 21 November, 2009 by admin தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார். November 20 புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!! மேலும் வாசிக்க »
புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எப்போது பார்த்தாலும் கிழக்கின் பக்கமே தனது ஒழியை வீசுகின்றாரே வடக்கின் பக்கமோ அல்லது ஏனைய பக்கமோ அவரின் பார்வை குருடாக இருக்கின்றதோ!!! தேசிய நல்லிணக்க அமைச்சராக இருந்து, கிழக்கின் நல்லிணக்க அமைச்சராகப்பணியாற்றுகின்றாரோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சின் பதவியைவிட விசேடமாக எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெரும் சந்தர்ப்பம் அவருக்குக்கிடைத்துள்ளது. புலிகள் அமைப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு, இலங்கை அரசியல் கட்சியிலும் மிகப்பெரிய பொறுப்பு… பழைய புலி பதுங்குவது… மீண்டும் பாய்வதற்கோ? அல்லது, தன்னைப் பக்குவப்படுத்துவதற்கோ!!! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதே வேளையில் மகிந்தவின் அசைவுகளும் சும்மாயில்லை… ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அடிகளை எடுத்துவைப்பதற்குள் அடுத்த தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது, கானல் நீராகும் என்றிருந்த தேர்தலே கண்ணுக்கெட்டியது என்றால், நிலையில்லாத பதவி எத்தனைதூரம் நிலைக்கப்போகின்றது என்ற வினாவும் எழாமலில்லை… புலத்தில் புலிகளின் அசைவுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருனாவை உதார்சீனப்படுத்துவதாகவும் அவரைப் பெருமைப்படுத்துவதில் இருந்தும் விலகியே வந்தவர்கள் தற்போது, என்ன செய்வதென்று அறியாது திண்டாடுகின்றார்கள். நோர்வே தேர்தல் அவ்வளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதனைக்கூட மூடி மறைக்கப்பார்க்கின்றனர். அதாவது, வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்த வாக்குகள் தற்போது நடைபெற்ற தேர்தலில் வந்து விளவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், நோர்வே தனது போக்கை ஒருபுறம் செலுத்துவதாகவும் உருத்திர குமார் சார்ந்தோர் இன்னொருபுறம் நகர்த்துவதுபோன்றும் காணப்படுகின்றது. எது எப்படியாயினும். கருணாவின் போக்கில் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் தாமும் கால்பதிக்க முனைகின்றமை தாம் தமிழர்கள் பிரதிநிதியாகாவிட்டாலும், கருணாவை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெரிகின்றது. ஆரம்பத்தில் இலங்கை அதிபரைக்கேவலப்படுத்தியவர்கள் தற்போது கட்டிப்பிடித்துத்துதி பாடி சமரசம் செய்கின்றார்கள். சிங்கள அதிகாரிகனளை வளைத்துபோட எத்தணிப்பவர்கள் தமிழ் அதிகாரிகளை கால் கழுவப்பார்க்கின்ற தமிழ் ஆhவலர்கள் தமக்கென இட்ட பெயர் தமிழ் தேசியவாதிகள். இலங்கையில் சிறுபான்மை என்றொரு இனமே இல்லை என்பது அமைச்சர் கருணாவின் வெளிவார்த்தையாக இருக்கின்றது. இது உண்மையாக இருந்தாலும் சிங்கள கழுகுகள் நம்புவதற்கில்லை. பிரபாவால் திட்டமிடப்பட்ட அரசியல் திட்டம் என்னவென்பது கருணாவிற்கும், பிரபாவிற்கும், தமிழ் செல்வனுக்கும், அன்ரன் பாலசிங்கத்திற்கும் தான் வெளிச்சம் அதில் கருணாவைத்தவிர மற்றைய மூவரும் இப்போது சாட்சி செல்லப்போவதில்லை. இது எமக்கு எட்டிய அரசியலில்லை இலங்கை புலனாய்விற்கும் எட்டியிருக்கும் அதனால் எடுத்த எடுப்பிலேயே கருனா எதையும் தமிழர்களுக்குக்காட்டி விட முடியாது. அவ்வாறு கருணாவால் காட்டப்படுகின்ற விடயங்களும் புலத்தில் ஒழுங்காக வந்து சேர்வதில் புலிகளின் ஆதரவாளர்கள் தடுத்துசுவர்கட்டியிருக்கின்றார்கள்.
பல வருடங்களாக தலைக்கணமின்றி தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதனை அடித்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காககத்தான் போனது. எனினும் இப்போது, செவிடாக இருந்தாலும் பராவாயில்லை குருடர்கள் போல் பேச்சுக்களை நடத்திப்பார்ப்போம் என்று கங்கணம் கட்டுகின்றனர்.
அப்போதே தந்தை செல்வா சென்ன வார்த்தை இன்றும் நிலைத்து நிற்கின்றது. தமிழர்களை இனி கடவுளாலும் காக்க முடியாது… கட்சிகள் அதிகரிக்கின்றனவேயொழிய, தமிழர்களின் வன்மை அதிகரிக்கவில்லை. யார் தலைமையினை ஏற்பது என்ற வினாவிற்கு பலர் விண்ணப்பிக்கின்றனர்… யார் தலைவராவதற்குத் தகுதியுண்டென்றால் அனைவரும் பின்நிற்கின்றனர் … நல்ல வேடிக்கை. இதோ புதியதொரு தசாப்தம் உதயமாகின்றது… புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!! | அருகனின் திட்ட அறிக்கை அவருடைய இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் 15-04-2009 ல் இது இணையத்தின் மூலம் பெறக்கூடிய அனைத்து முக்கிய அமைப்புக்களின் மின்அஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது... வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!! பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து “புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA செயற்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர்.
இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும். எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை… • முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
• அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.
• அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.
• உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.
• உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!
• உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.
• இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.
• நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.
• எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?
• வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …
• ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???
• தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?
• எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???
• நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். • … இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.
எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன…. அன்பன் அருகன். இத்தாலியில் இருந்து. 2007ன் "மலரும் மா தமிழீழம்!,?" என்ற நாவலின் பகுதிகளின் அடிப்படையில் arugan@hotmail.it நிலையான மின்னஞ்சல்
| நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் புதன்கிழமை 17 யூன் 2009 இரா.பார்த்தீபன் இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய - தமிழர் ஓர் தேசிய இனம் - வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் - ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது. 2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல். 3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல். 4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும். 5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல். 6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல். 7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல். 8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல். 9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல். இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும். தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக ” புதிய இளைய தலைமுறையினருடன்” (?) இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும். இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா) பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா) திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம். இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org நிலையற்ற மின்னஞ்சல்
| அருகனின் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”??? "மலரும் மா தமிழீழம்!,?" சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 - நாவலில் இருந்து) “அடிதடி 13” ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது. இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன். எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது. 1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும், ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை. அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை. எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை. ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள். பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே. ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து வேதனைப்பட்டும், மரணத்தறுவாயில் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும் பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள். வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர். 1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர். அதாவது, 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.” இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம். தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. “தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல். அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு... எமது தமிழ் அமைப்புக்கள் முட்டைக்குள் கோட்டைகட்டிப்பழகியவர்கள். இன்று ஒரு குடும்ப வாழ்க்கையே நாடு விட்டு உலகு என்று மாறும் போது நம்மவர்கள் மட்டும் கிணற்றுத்தவளைபோல் திட்டமிட்டால் தகாது. எம்மைச் சுற்றியே போராட்டம், எம்மைச்சுற்றியே விமர்சனமும் விளக்மும், எம்மைச்சுற்றியே சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும், எம்மைச்சுற்றியே பாராட்டுக்கள். என்ன திட்டம் இது? முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா? “அடிதடி 14”
நாம் என்ன செய்ய வேண்டும் இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி. இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம். இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா? ஈழத்தின் பாதை திறக்கிறது… 17 ம் திகதி இரண்டாம் மாதம் 2008ம் ஆண்டு நல்லதொரு பாடத்தினை விடுதலைப்பொராட்டத்திற்குக் காட்டியுள்ளது. அதாவது, Kosovo தனது தனிநாட்டுப் பிரகண்டனத்தை பலம் பொருந்திய நாடுகளின் பின்னணைவுடன் வெளிக்காட்டியது. இதில் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அலங்கை அரசிற்க்கும் நல்ல தொரு பட்டப்படிப்பை கொடுக்கத்தவறவில்லை. எனினும் நாம் ஒன்றைக்கவனத்தில் கொள்ளவேண்டும், அவ்வமைப்புக்கள் உலகரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குள் இடம்பெறவில்லை. மேலும் அங்கு உலகப்படையின் ஈடுபாடு இருந்து வந்தது என்பது குறிப்பரிடத்தக்கது, இது தொடர்பாக மேலும் தொடரசந்தர்ப்பம் கிடைக்கும்… எமது தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது விடுதலைப்போராட்டமா அல்லது தீவிரவாதமா என்ற கோள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். இந்த விடையம்பற்றி எனது ஒவ்வொரு ஆக்கத்திலும் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன்.
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும்.
பயங்கரவாதம் என்றால் எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான். புதியதொரு நாட்டுப் பிரகண்டனத்தை ஐ.ந ஏற்றுக்கொள்ளுமாயின் ஈழநாட்டுப்பிரகண்டனத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஆனால் எப்போது?, எப்போது அங்கிகாரம் உலகநாடுகளிடம் இருந்து “விடுதலைப் புலிகளுக்குக்” கிடைக்கிறதோ அதன்பின்னர் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு மாற்றப்படுகிறது என்னதனைப்பொறுத்த நிர்ணயிக்கப்படும்.
எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது. மேலும், உலகளவில் இருப்போர் தேவைப்படும் நேரங்களில் ஸ்தம்பித்து நிற்பதும், எமது ஈழவிடுதலைக்கு தடைக்கற்களாக அமைகிறது. பொதுவாக எமது மக்களின் பழக்கம் எதுவென்றால், தமது பெருமைகளையும் சிறப்பென்று அவர்கள் கருதுவதையும் தமக்குள்ளே பெருமைப்படுத்திக்கொண்டே இருப்பது. வெளியுலகிற்கோ அல்லது பிற மொழியினத்தவருக்கோ தெரிவிப்பதில் பின்னடைவது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், இத்தாலி தேசத்தை எடுத்துக்காட்டுகிறேன். இங்கு “மொறோக்கோ” நாட்டவர் தமது மொழியினையும் தமது தேசத்தவரையும் உலகளவில் உயர்த்துவதில் பின்தங்கியதில்லை. இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப் படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப் படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது.
இந்த முயற்சியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.
த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும்.
இதோ ஒரு சிறு கதை ஒரு தேசத்திற்காக அம்மக்கள் கூட்டம் சேர்ந்து போராட்டத்திற்கு என்று அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பும் அந்நாட்டை ஆளும் கொடியவருக்கு எதிராகத் தம்மை இழந்து போராடினர். பலவருடங்களாகப் போராடினர்… உடமைகளை இழந்து போராடினர்… உறவுகளை இழந்து போராடினர்… உயிரினையும் இழந்து போராடினர்… முடிவு வருவதாய்த் தெரியவில்லை, அவ்வமைப்பும் பலம்பொருந்திய அரசுடன் போராடக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது, உலகில் ஆங்காங்கே அமைப்புகளை உருவாக்கி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஊடுருவிச் சென்றது… விடிவு வரவில்லை…
ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்…
பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர் அத் தீவினை ஒரு சிற்றரசாக்கினர் அதனை தமது ஆட்சிப்பரப்பாகப் பிரகண்டனப் படுத்தினர் தம்முடைய புதிய தேசத்திற்காக அவ்வமைப்பின் தலைமைப்பீடம் தன்னுடைய சந்ததிக்காக ஒரு பிரகண்டனத்தையே ஏற்படுத்தியத.
இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர்.
முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம்.
ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்” மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் ஊனமாகிவிட்டார்களே!!! இம்மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் தம்முடைய புதிய தேசத்திற்கு வருமானமகியது, இம்மக்களுக்கு தண்டணை வழங்குவதாகச் சொல்லி புதிய நாட்டின் புனரமைப்பிற்கு பணயக்கைதிகளாயினர். உலகநாடுகளில் புலம் பெயர்ந்த தம்முடைய அப்பாவி மக்களிடம் இருந்து தண்டப்பணம், அப்பணத்தின்மூலம் ஆங்காங்கே பல்வேறு தொழிலகங்கள், சேவை அமைப்புக்கள் என்ற பேரில் நிதிமையங்கள், ஆயுதத்தால் மக்களின் வாய்களுக்குப் பூட்டு, … இவ்வாறு அவ்வமைப்பு விழுது விட்ட ஆலமரமாகியது அழிக்கமுடியாத ஆணிவேராகியது.
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு…)
இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது… அடிமைத் தனத்திலிருக்கும் மக்களின் விடுதலைக்காக தனது உயிரைப் பணயம்வைத்து “கூபா” தேசத்தின் காரணகர்த்தாவாகியது…
அதன் விம்பம் இன்றுவரை “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்…
இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன். தமிழர்களுடைய போhரட்டத்தின் வெளிப்பாடு தெரிவதிலும் பார்க்க, உலகிற்கு தமிழர்களுடைய உரிமைப்பின்னடைவு தெரிய வேண்டும் அதற்காகத்தான் இது போன்ற ஆக்கங்கள் … இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே! இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… மேலும் "மலருமா தமிழீழம்" நாவலின் மற்றைய “அடிதடி”கள் இதன்மூலம் வெளிப்படும். காத்திருங்கள் - இந்த ஆக்கம் போர் அதிகரிக்கும் முன்னே இதனைச்சார்ந்த அமைப்புக்களுக்கு அரசியல் விமர்சக நாவலாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இப்போதும் தான்தோன்றித் தனமாக எனது எழுத்துக்களின் விம்பங்களை செயற்படுத்த எத்தணிக்கின்றார்கள் ஆனால் தாமாக மேற்கொண்டதாக செயற்பட முயற்சிக்கின்றார்கள் இதன் அடுத்த கட்டம் என்ன வென்று அவர்களுக்குத் தெரியுமா???-(26/06/2009),(19/11/2009) UNGAன் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”??? "மலரும் மா தமிழீழம்!,?" சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 - நாவலில் இருந்து) “அடிதடி 13” ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது. இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன். எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது. 1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும், ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை. அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை. எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை. ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள். பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே. ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து வேதனைப்பட்டும், மரணத்தறுவாயில் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும் பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள். வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர். 1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர். அதாவது, 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.” இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம். தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. “தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல். அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு... எமது தமிழ் அமைப்புக்கள் முட்டைக்குள் கோட்டைகட்டிப்பழகியவர்கள். இன்று ஒரு குடும்ப வாழ்க்கையே நாடு விட்டு உலகு என்று மாறும் போது நம்மவர்கள் மட்டும் கிணற்றுத்தவளைபோல் திட்டமிட்டால் தகாது. எம்மைச் சுற்றியே போராட்டம், எம்மைச்சுற்றியே விமர்சனமும் விளக்மும், எம்மைச்சுற்றியே சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும், எம்மைச்சுற்றியே பாராட்டுக்கள். என்ன திட்டம் இது? முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா? “அடிதடி 14”
நாம் என்ன செய்ய வேண்டும் இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி. இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம். இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா? ஈழத்தின் பாதை திறக்கிறது… 17 ம் திகதி இரண்டாம் மாதம் 2008ம் ஆண்டு நல்லதொரு பாடத்தினை விடுதலைப்பொராட்டத்திற்குக் காட்டியுள்ளது. அதாவது, Kosovo தனது தனிநாட்டுப் பிரகண்டனத்தை பலம் பொருந்திய நாடுகளின் பின்னணைவுடன் வெளிக்காட்டியது. இதில் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அலங்கை அரசிற்க்கும் நல்ல தொரு பட்டப்படிப்பை கொடுக்கத்தவறவில்லை. எனினும் நாம் ஒன்றைக்கவனத்தில் கொள்ளவேண்டும், அவ்வமைப்புக்கள் உலகரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குள் இடம்பெறவில்லை. மேலும் அங்கு உலகப்படையின் ஈடுபாடு இருந்து வந்தது என்பது குறிப்பரிடத்தக்கது, இது தொடர்பாக மேலும் தொடரசந்தர்ப்பம் கிடைக்கும்… எமது தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது விடுதலைப்போராட்டமா அல்லது தீவிரவாதமா என்ற கோள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். இந்த விடையம்பற்றி எனது ஒவ்வொரு ஆக்கத்திலும் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன்.
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும்.
பயங்கரவாதம் என்றால் எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான். புதியதொரு நாட்டுப் பிரகண்டனத்தை ஐ.ந ஏற்றுக்கொள்ளுமாயின் ஈழநாட்டுப்பிரகண்டனத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஆனால் எப்போது?, எப்போது அங்கிகாரம் உலகநாடுகளிடம் இருந்து “விடுதலைப் புலிகளுக்குக்” கிடைக்கிறதோ அதன்பின்னர் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு மாற்றப்படுகிறது என்னதனைப்பொறுத்த நிர்ணயிக்கப்படும்.
எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது. மேலும், உலகளவில் இருப்போர் தேவைப்படும் நேரங்களில் ஸ்தம்பித்து நிற்பதும், எமது ஈழவிடுதலைக்கு தடைக்கற்களாக அமைகிறது. பொதுவாக எமது மக்களின் பழக்கம் எதுவென்றால், தமது பெருமைகளையும் சிறப்பென்று அவர்கள் கருதுவதையும் தமக்குள்ளே பெருமைப்படுத்திக்கொண்டே இருப்பது. வெளியுலகிற்கோ அல்லது பிற மொழியினத்தவருக்கோ தெரிவிப்பதில் பின்னடைவது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், இத்தாலி தேசத்தை எடுத்துக்காட்டுகிறேன். இங்கு “மொறோக்கோ” நாட்டவர் தமது மொழியினையும் தமது தேசத்தவரையும் உலகளவில் உயர்த்துவதில் பின்தங்கியதில்லை. இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப் படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப் படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது.
இந்த முயற்சியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.
த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும்.
இதோ ஒரு சிறு கதை ஒரு தேசத்திற்காக அம்மக்கள் கூட்டம் சேர்ந்து போராட்டத்திற்கு என்று அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பும் அந்நாட்டை ஆளும் கொடியவருக்கு எதிராகத் தம்மை இழந்து போராடினர். பலவருடங்களாகப் போராடினர்… உடமைகளை இழந்து போராடினர்… உறவுகளை இழந்து போராடினர்… உயிரினையும் இழந்து போராடினர்… முடிவு வருவதாய்த் தெரியவில்லை, அவ்வமைப்பும் பலம்பொருந்திய அரசுடன் போராடக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது, உலகில் ஆங்காங்கே அமைப்புகளை உருவாக்கி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஊடுருவிச் சென்றது… விடிவு வரவில்லை…
ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்…
பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர் அத் தீவினை ஒரு சிற்றரசாக்கினர் அதனை தமது ஆட்சிப்பரப்பாகப் பிரகண்டனப் படுத்தினர் தம்முடைய புதிய தேசத்திற்காக அவ்வமைப்பின் தலைமைப்பீடம் தன்னுடைய சந்ததிக்காக ஒரு பிரகண்டனத்தையே ஏற்படுத்தியத.
இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர்.
முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம்.
ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்” மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் ஊனமாகிவிட்டார்களே!!! இம்மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் தம்முடைய புதிய தேசத்திற்கு வருமானமகியது, இம்மக்களுக்கு தண்டணை வழங்குவதாகச் சொல்லி புதிய நாட்டின் புனரமைப்பிற்கு பணயக்கைதிகளாயினர். உலகநாடுகளில் புலம் பெயர்ந்த தம்முடைய அப்பாவி மக்களிடம் இருந்து தண்டப்பணம், அப்பணத்தின்மூலம் ஆங்காங்கே பல்வேறு தொழிலகங்கள், சேவை அமைப்புக்கள் என்ற பேரில் நிதிமையங்கள், ஆயுதத்தால் மக்களின் வாய்களுக்குப் பூட்டு, … இவ்வாறு அவ்வமைப்பு விழுது விட்ட ஆலமரமாகியது அழிக்கமுடியாத ஆணிவேராகியது.
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு…)
இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது… அடிமைத் தனத்திலிருக்கும் மக்களின் விடுதலைக்காக தனது உயிரைப் பணயம்வைத்து “கூபா” தேசத்தின் காரணகர்த்தாவாகியது…
அதன் விம்பம் இன்றுவரை “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்…
இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன். தமிழர்களுடைய போhரட்டத்தின் வெளிப்பாடு தெரிவதிலும் பார்க்க, உலகிற்கு தமிழர்களுடைய உரிமைப்பின்னடைவு தெரிய வேண்டும் அதற்காகத்தான் இது போன்ற ஆக்கங்கள் … இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே! இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… மேலும் "மலருமா தமிழீழம்" நாவலின் மற்றைய “அடிதடி”கள் இதன்மூலம் வெளிப்படும். காத்திருங்கள் - இந்த ஆக்கம் போர் அதிகரிக்கும் முன்னே இதனைச்சார்ந்த அமைப்புக்களுக்கு அரசியல் விமர்சக நாவலாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இப்போதும் தான்தோன்றித் தனமாக எனது எழுத்துக்களின் விம்பங்களை செயற்படுத்த எத்தணிக்கின்றார்கள் ஆனால் தாமாக மேற்கொண்டதாக செயற்பட முயற்சிக்கின்றார்கள் இதன் அடுத்த கட்டம் என்ன வென்று அவர்களுக்குத் தெரியுமா???-(26/06/2009),(19/11/2009) ஈழத்தமிழர்களின் துரோகி என்ற பெயர் யாருக்குப் பொருந்தும்…
முன்னாள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போக்கிற்கு எதிராக இருந்த அனைவரையும் துரோகிகள் என்று வசைபாடிய புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் உறுப்பினர்களும் இன்று எவ்வாறு தமது பாதைகளை திருப்பியுள்ளார்கள் என்பதகை கண்காணிக்கவேண்டும்.
தமிழ் மக்கள் நலன்கருதி தமிழர் ஆதரவாளர்களால் எடுக்கப்பட்ட அனைத்தையும் கண்டித்தும், தண்டித்தும், மக்கள் மத்தியில் எதிர்ப்பையும்தூண்டிவந்த பிரபாவின் ஆதரவாளர்கள் இப்போது, இருதலைக்கொள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இருந்தால், பத்மனாபனும் துரோகியாக்கப்பட்டு உயிரை மாய்திருப்பார், நெடியவனும் துரோகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பார், உருத்திரகுமாரும் துரோகியாக்கப்பட்டிருப்பார்… இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகின்றது? இதனை ஏற்கும் முன் நாம் காலத்தைப்பின்நோக்க வேண்டும்…
தேசத்தின்குரல்சிலகாலம் சிறைக்குள்சிக்கிய குரலாக இருந்தது ஏன்???
ஒபெராய்தேவன் தேகத்தைவிட்டு உயிர்பிரிந்ததுஏன்???
மாத்தையாஉறவினராக இருந்தும் தலைகவுண்டது ஏன்???
கருணாவின் பிரிவின்போது புலிகளின் ஆதரவாளர்களால் அவர் துரோகியாகக்கருதப்பட்டதன் காரணம்ஏன்???
புலிகள் தவிர்ந்த மற்றைய அமைப்புக்களை மக்களிடம் மாற்றுக்கருத்துள்ளவர்கள் என்று பிணக்குகளை உருவாக்கியது ஏன்??? யோகியின் பேச்சுத்திறன் பேசாமல்போனதேன்???
எத்தனையோ திறனுள்ள போராளிகள் இருந்தும் அவர்களின் பெயர் புலிகள் அமைப்பில் வெளிவராததற்குக்காரணம் ஏன்??? இப்படி பலதைகேட்டுக்கொண்டே போகலாம்…
இப்போது மேற்கேட்ட கேள்வியைக்கேட்டுப்பார்ப்போம் … இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகின்றது? பிரபாகரனுக்கு அடுத்தாற்போல் யாரும் இன்றுவரை பிரபாகரனால் நிர்ணயிக்கப்படவில்லை. அது தனது பிள்ளையுட்பட…
அண்மையில் ஒரு புகைப்படத்தை வைத்துப் பூச்சாண்டி காட்டி வருகின்றனர் சிலர். இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் ஊடகங்கள் தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் உண்மைகள் துணிச்சலாக வெளிவரும்.
இன்றுவரை இலங்கை அரசால் சொல்லில் அடங்காத முன்னெடுப்புகள் தமிழர்களுக்கு நிகழ்ந்த போதிலும் புலிகளுக்கு ஆதரவான தளங்கள் அவற்றை வெளியிடாமல், மக்கள் மத்தியில் கிழற்சியைத்தூண்டும் தகவல்களையே வெளியிடுகின்றன. உதாரணமாக, இலங்கைஇராணுவத்தால் நடாத்தப்பட்ட இறுதிக்கட்டப்போரில் இலங்கைஇராணுவம் கணரக ஆயுதங்களைப்பாவித்தது என்றால் புலிகள் என்ன புல்லாபுடுங்கிக்கொண்டிருந்தார்கள். இதற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவான தளங்களில் புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் இலங்கை அரசிடமே இல்லை என்று மார்தட்டி வெளியிட்ட செய்திகளுக்கும் இப்போது இறுதிப்போரின்போது வாளவிருப்பதற்கும் மாறுபட்ட கருத்துக்காணப்படுகின்றதே!!!
இப்போர் ஆரம்பிக்கும் முன்னரே புலிகளிடம் இருந்து பிரிந்த கருனா அவர்கள் புலிகளிடம் நச்சுவாயுஆயுதங்கள் இருந்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் புலத்தில் இருந்து பார்க்கும் போது இலங்கை இராணுவம் தமிழர்களைத்தாகஇகியது அடித்தது வெட்டியது, கொத்தியது, என்று தொடர்ந்து செல்கின்ற போதிலும் விடுதலைப்புலிகளின் போக்குகள் பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்தே மறைத்துவந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தமிழர்களால் தமிழர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவும் உதவியும் செய்துவந்த புலிகளைச்சாராத அங்கத்தவர்களின் செயற்பாட்டையும் மறைத்தேவந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, புலத்தில் இருந்து கூச்சல்போடும் புலிகளின் ஆதரவாளர்கள் எப்போதுமே இலங்கை அரசை குறைசொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இந்த வேளையில் கருணா துரோகத்திற்குத்துணைபோனானு ஏனென்றால் இலங்கை அரசுடன் சேர்ந்துவிட்டார் என்று கதைகட்டி மக்கள்மனத்தைக் குழப்பப்பார்த்தவர்கள்… இன்று இலங்கை அரசு சரணடைந்த புலிகளை அரச உத்தியோகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இணைத்து அரசாங்கத்தை நடாத்தி வருவதோடு, அதனை மேலும் அதிகரிக்கவும் திட்டம் போட்டுள்ளதே அதனால் புலிகள் துரோகியாகவில்லையா? இலங்கை அரசிடம் பிடிபட்ட கே.பி யும் மேலும் பிடிபட்ட பல புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் ஒழித்துவைத்திருந்த முக்கிய தடத்தின் இடத்தை புலநாய்வுத்துறைக்குத்தெரியப்படுத்தியது துரோகமில்லையா? பிரபாகரன் இலங்கை அரசுடன்பேச்சு நடாத்தும் போது அது நல்லிணக்கம் கருணா மக்களுக்காக நல்லிணக்க அமைச்சரானால் அது துரோகம்!!! இது என்ன நியாயம்… தமிழ்ச்செல்வன் இலங்கையின் விசேட கடவுச்சீட்டில் உலகத்தை வலம்வரலாம் அது அரசியல் கருணா அசராங்கத்தில் நேரடியாக தலையிட்டால் அது தேசத்துரோகமாம். இப்போது இனப்பிரச்சனையை தீர்க்க உலகத்தில் போராடிய மக்களுடன் கூச்சல்போட்ட தமிழ் எம்பிமார்கள் அரசிற்கு ஆதரவளித்தால் அது அரசியலாம் அதையே கருணா செய்தால் அது துரோகமாம். அமைச்சர் கருணாவின் திட்டம் மக்களுக்கு விடுதலை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… நிதி இருப்பவரின்நிலையினை அதிகரிக்காமல் மதியிருப்பவரின் குரலை அதிகரியுங்கள். அப்போது தமிழீழம் தானாகக்கிடைக்கும்.
துமிழ் மக்களை ஏமாத்த தமிழ்க்கட்சிகள் திட்டம்போட்டுவருகின்றார்கள். அதாவது, தமிழர்களை அழித்த கட்சிக்கு ஆதரவு வழங்க எத்தணிக்கினம் தமிழனான அமைச்சர் கருணாவிற்கு ஆதரவு வழங்கமாட்டினமாம். அது அவர்களுடைய தன்மானப்பிரச்சனையாம். ஆனால் அக்கட்சியின் உபதலைவர் என்ற ரீதியிலஇ அவருடைய கட்டளைகளைக்கேட்டே ஆகவேண்டும் என்பதனை கொஞ்சங்கூட வெளியில சொல்லமாட்டோம்… என்று சிவருக்குள்ளே இருட்டில் சித்திரம் கீறப்பார்க்கின்றார்கள். கருணாவின் 5வருடத்தின் முற்போக்குச்சிந்தனைக்கு தற்போது பிற்பாட்டுப்பாடும் தமிழ்க்கட்சிகளை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.
முன்பே புலிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஆதனை மக்கள் நன்றாய் உற்று நோக்க வேண்டும். ஆதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புலிகள் இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலப்போக்கில் தனிஅரசாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கூட கனிய இருந்ததனை எதற்காக புலிகள் தாமே அழித்தனர் என்பதனை மக்கள் கேள்வியாகக்கேட்கவேண்டும். ஆதற்கு சாக்குப்போக்குச் சொல்வதானால் எதற்காக தற்போது தேவையற்ற எம்பி பதவிக்காக பெரும் கட்சிகளை வால்பிடிக்க திட்டம்போட வேண்டும்.
இதோ அந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத்திட்டம் …அதனையும் அலசி ஆராய்ந்து கொண்டே போவோம் வாருங்கள்… இப்படியாவது எமது அடிமட்ட அரசியலையும் சமுக போக்கினையும் அறிந்து சுயசிந்தைக்குச்செல்வோம்.
… சம்பந்தப்பட்ட தரப்புக்களான தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கீழ்வரும் ஏற்பாடுகளுக்கு இத்தால் இணங்குகின்றன.
1. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பேச்சு மூலமான இறுதித்தீர்வு எட்டப்பட்டு அமுல்படுத்தப்படும் வரை, வடக்குக் கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (Interim Self- Goberning Authority ISGA) நிறுவப்படும். ISGA இல் முஸ்லிம் சமூகத்தினது பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்வதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. 2. ISGA இன் அங்கத்துவ அமைப்பு 2.1 இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்படுகின்ற தரப்புக் களால் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை ISGA கொண்டிருக்கும். 2.2 ISGA இன் அங்கத்துவ அமைப்பு கீழ்வருமாறு அமையும். 2.2.a தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள். ?- (மற்றைய தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக…???) 2.2.b இலங்கை அரசால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள், மற்றும் 2.2.c வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள். ?-(ஏன் முஸ்லீம் சமுகம் என்டா… ?) 2.3 கீழ்வருவனவற்றை உறுதி செய்யக்கூடிய விதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். 2.3.a ISGA இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமனதாரிகளே அறுதிப் பெரும்பான்மையினராக இருப்பர். (இது ஜனநாயகத்திற்குச்சாத்தியமா? இத்திட்டத்திற்கும் இலங்கை அரசின் யாப்பிற்கும் எத்தகைய வேறுபாடுகள்…???) 2.3.b மேலுள்ள உபவிதி (ய) இற்கு பங்கம் ஏற்படாத வகையில் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் ISGA இல் பிரதி நிதித்துவத்தைக் கொண்டிருக்கும். 2.4 தலைவர் (Chairperson) ISGA இலுள்ள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு ISGAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரியாகச் செயற்படுவார். 2.5 வடக்குக் கிழக்கிற்கான பிரதான செயலாட்சியரையும் அவரது கடமைகளை ஆற்றுவதில் உதவுவதற்கு தேவைப்படக்கூடிய ஏனைய அதிகாரிகளையும் தலைவர் நியமிப்பார். இந்த நியமனம் ஏதேனையும் இடை நிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டு வரு வதற்கான அதிகாரங்களையும் தலைவர் கொண்டிருப்பார். 3. தேர்தல்கள் சரத்துக்கள் 2.2 மற்றும் 2.3 இன் ஏற்பாடுகள், ISGA இற்கான தேர்தல்கள் நடத்தப்படும் வரை தொடரும், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டின் முடிவில் இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படாமலும் அமுல்படுத்தப்படாமலும் விட்டால் இந்த ஐந்தாண்டு காலப்பகுதி முடிவடைகையில் தேர்தல்கள் நடத்தப்படும். ஐளுபுயு ஆல் நியமிக்கப்படும் ஒரு சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு, சுதந்திரமானதும் நேரடியானதுமான தேர்தல்களை சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் சர்வதேச ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக நடத்தும். 4. மனித உரிமைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளவாறு அனைத்து உரிமைகளும் வடக்குக் கிழக்கிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும். ISGA இயற்றும் சட்டம், ஒழுங்கு முறை, தீர்ப்பு, கட்டளை, தீர்மானம் எல்லாம் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். ISGA ஆல் நியமிக்கப்படும் ஒரு சுயாதீனமான ஆணைக்குழு இந்த மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் எல்லாம் பேணப்படுவதை உறுதி செய்யும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு காத்திரமான ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கு இந்த ஆணைக்குழு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உதவியை நாடும். இந்த ஆணைக்குழு எந்தவொரு தனிநபரிடமிருந்தும் முறைப்பாடுகளை ஏற்று விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் வழங்க வேண்டிய நட்டஈட்டைப் பரிந்துரைத்து, அந்த நபரின் உரிமைகள் மீளநிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும். 5. மதச்சார்பின்மை வடக்குக் கிழக்கில் எந்தவொரு மதத்திற்கும் விசேட இடம் வழங்கப்படமாட்டாது. 6. பாகுபாட்டிற்கெதிரான தடை வடக்குக் கிழக்கில் மதம், இனம், சாதி, தேசியம் அல்லது பிராந்தியம், வயது அல்லது ஆண், பெண் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாதிருப்பதை ISGA உறுதிசெய்யும். 7. இலஞ்ச ஊழலைத் தடுத்தல் ISGA தனது நிர்வாகத்தில் அல்லது தனது நிர்வாகத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் எதுவும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யும். 8. அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பு கலாசாரம் அல்லது மதம் தொடர்பாக, ஒரு சமூகத்திற்கு வழங்காத தனிச்சலுகைகளை அல்லது அவர்கள் மீது திணிக்காத அசௌகரியங்களை இன்னொரு சமூகத்திற்கு வழங்கும் அல்லது திணிக்கும் சட்டம், ஒழுங்குமுறை, விதி, கட்டளை அல்லது தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது. 9. ISGA இன் நியாயாதிக்கம் 9.1. மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தற்போதுள்ள சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்தி உயர்த்துதல் உள்ளடங்கலான அபிவிருத்தி (இதன் பின்னால் சுசுசுனு எனக் குறிப்பிடப்படுகின்றது), வரி விதித்தல் உள்ளடங்கலான வருவாய் ஈட்டல், வருமானம், தீர்வையும் சுங்கவரியும், சட்;டமும் ஒழுங்கும் மற்றும் காணி தொடர்பான அதிகாரங்கள் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கை ஆளுகை செய்வதற்கு வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும். இந்த அதிகாரங்களுக்குள், வடக்குக் கிழக்கிலும் வடக்குக் கிழக்கிற்காகவும் பிராந்திய நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசால் செயற்படுத்தப்படும் அனைத்து அதிகாரங்களும் செயற்பாடுகளும் உள்ளடங்கும். 9.2. இவ்வாறான அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கும் செயற்பாடுகளைச் செயற்படுத்துவதற்குமான விரிவான வழிமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் மேலும் பேசி முடிவெடுக்கப்படும். 10. அதிகாரங்களை வகைபிரித்தல் வடக்குக் கிழக்கில் நீதியை நிர்வகிப்பதற்கான தனியான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புகளுக்கு நீதி அதிகாரங்கள் உரித்தாக்கப்படும். நீதிபதிகளது சுயாதீனத்தை உறுதி செய்வதற்கு ISGA பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த ஒப்பந்தத்தின் சரத்து 4 (மனித உரிமைகள்) மற்றும் 22 இற்கு (பிணக்குத் தீர்த்தல்) பங்கம் ஏற்படாதவாறு, இந்த சரத்தின் கீழ் உருவாக்கப்படும் அமைப்புக்களே, இந்த உடன் படிக்கையை அர்த்தப்படுத்தி அமுல்படுத்துவதில் எழும் அனைத்துப் பிணக்குகளையும், இந்த உடன்படிக்கையில் அல்லது இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் ஏதேனும் ஏற்பாட்டில் எழும் ஏதேனும் பிணக்குகளையும் தீர்ப்பதற்கு தனியானதும் தனித்துவமானதுமான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும். 11. நிதி ISGA ஒரு வருடாந்த வரவு - செலவு அறிக்கையைத் தயாரிக்கும். ISGA ஆல் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிதி ஆணைக்குழு அமைக்கப்படும். இந்த அங்கத்தவர்கள் நிதி, நிர்வாகம் அல்லது வாணிபம் போன்ற துறைகளில் உயர்பதவி வகித்தவர்களாகவோ அல்லது இத்துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் என இனங்காணப் பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். இலங்கை அரசின் ஒன்று திரட்டிய நிதியத்திலிருந்து (ஊழளெழடனையவநன கரனெ) வடக்குக் கிழக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை இந்த ஆணைக் குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு தனது நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு உரிய கவனம் செலுத்தி, ISGA தன்வசமுள்ள நிதிகளை எப்படிப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கும். ஐளுபுயு வசமுள்ள நிதிகளுள் வடக்குக் கிழக்குப் பொதுநிதியம், வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம், விசேட நிதியம் ஆகியன உள்ளடங்கியிருக்கும். வடக்குக் கிழக்கில் அல்லது வடக்குக் கிழக்கிற்காக இலங்கை அரசு செய்யும் அனைத்துச் செலவுகளும் ஐளுபுயு இன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது. 11.1. வடக்குக் கிழக்குப் பொதுநிதியம் வடக்கு - கிழக்கு பொதுநிதியம் ஐளுபுயு இன் கட்டுப் பாட்டின் கீழ் இருப்பதோடு பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும். 11.1.ய. இலங்கை அரசு ஏதேனும் குறித்த நோக்கங்களுக்காக வழங்கும் அனைத்து உதவிகளிலிருந்தும் கடன்களிலிருந்தும் கிடைக்கும் பணம் மற்றும் ISGA இற்கு வழங்கப்படும் ஏனைய பிறகடன்கள் மூலம் பெறப்படும் பணம். 11.1.டி. அரசுகளுடனோ, நிறுவனங்களுடனோ, ஏனைய அமைப்புக்களுடனோ ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வடக்குக் கிழக்கிற்கென சிறிலங்கா அரசினால் குறித்தொதுக்கப்படும் நிதிகள். 11.1.உ. கீழே குறிப்பிடப்படும் நிதியங்கள் தவிர்ந்த, ISGAஇற்கு கிடைக்கும் ஏனைய வரவுகள். 11.2. வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம். Nநுசுகு அமைப்பு, கட்டுப்பாடு ஐளுபுயு இற்கு மாற்றப் படுவது தவிர, ஏனைய அம்சங்களில் அதன் தற்போதைய வடிவத்திலேயே தொடர்ந்தும் இருக்கும். வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானத்திற்காகக் கொடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் Nநுசுகு இற் கூடாகப் பெறப்படும். Nநுசுகு நிதியத்திலிருந்து பெறப்படும் வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ISGA நேரடியாக முடிவுகளை எடுத்துக் கண்காணிக்கும். 11.3. விசேட நிதியம் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கென்றேவரும் கடன்களும் கொடுப்பனவுகளும், Nநுசுகு நிதியத்தினூடாக உள்வரமுடியாதவிடத்து, இந்த விசேட நிதியத்திற்குள் உள்வாங்கப்படும். ஏனைய நிதியங்களைப் போலவே இந்த விசேட நிதியமும் ISGA இன் கட்டுப்பாட்டில் இருக்கும். 12. கடன் பெறுவதற்கும் உதவிபெறுவதற்கும் வர்த்தகத் திற்குமான அதிகாரங்கள் உள்@ரிலும் வெளிய+ரிலும் கடன்பெறுதல், உத்தரவாதங் களையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளைப் பெறுதல், உள்ளுர் மற்றும் வெளியூர் வர்த்தகத்தில் ஈடுபடுதல் அல்லது அதனை ஒழுங்கமைத்தல் போன்றனவற்றிற்கான அதிகாரங்களை ISGA கொண்டிருக்கும். 13. நிதிக் கணக்கீடும் கணக்காய்வும் 13.1. ISGA ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும். 13.2. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிதியங்களும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்களுக்கு அமைவாகச் செயற்படுத்தப்பட்டு, பேணப்பட்டு, கணக்கீடு செய்யப்படும். இந்தக் கணக்குகள் கணக்காய் வாளர் நாயகத்தால் ஆய்வு செய்யப்படும். சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்படும் அனைத்து நிதிகளது கணக்காய்வும், ISGA ஆல் நியமிக்கப்படும் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். 14. மாவட்டக் குழுக்கள் 14.1. தனது சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங் களைக் காத்திரமாகச் செயற்படுத்துகையில், மாவட் டங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்வதற்காக ISGA, மாவட்டக்குழுக்களை உருவாக்கி, இந்தக் குழுக்களுக்கு தான் தீர்மானிக்கின்ற அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம். ஐளுபுயு இற்கும் குழுக் களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாளராகச் சேவையாற்றக்கூடியவாறு ISGA இன் உறுப்பினர்கள் மத்தியிலிருந்து ISGA ஆல் இந்தக் குழுக்களது தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். 14.2. குழுவின் ஏனைய உறுப்பினர்களும் ISGA ஆல் நியமிக்கப்படுவதோடு இந்த நியமனங்கள் எதனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும். இந்த உறுப்பினர்களை நியமிக்கையில், அனைத்து சமூகங்களதும் பிரதிநிதித்து வத்தை உறுதி செய்வதற்கு உரிய கவனம் செலுத்தப்படும். 14.3. இந்தக் குழுக்கள் ISGA இன் கீழ் நேரடியாகச் செயற்படும். 14.4. ISGA இன் பிரதான செயலாட்சியாளர் மாவட்டங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகளை நியமிப்பதோடு, இந்தப் பிரதான நிறைவேற்று அதிகாரிகள், குழுக்களுக்குச் செயலாளர்களாகவும் செயற்படுவார்கள். இந்த நியமனங்கள் எதனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களைப் பிரதான செயலாட்சியாளர் கொண்டிருப்பார். 14.5. குழுக்களது அனைத்து நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அந்தந்தக் குழுக்களது செயலாளர்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படும். 14.6. நிர்வாகத்திற்கு உதவியாக இருப்பதற்காக உபகுழுக்களும் நியமிக்கப்படலாம். 15. நிர்வாகம் தனது நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் சரத்து 9 இல் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களுடன் தொடர்புபட்ட வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்து நிர்வாக அமைப்புக்களும் ஆளணியும் ஐளுபுயு இன் கட்டுப்பாட்டிலும் நெறிப்படுத்தலின் கீழும் அமையும். ISGA தற்றுணிவுடன், தேவையான துறைகளில் நிபுணர்களது ஆலோசனைக் குழுக்களை உருவாக்கலாம். இந்த ஆலோசனைக் குழுக்கள் பொருளாதார விவகாரங்கள், நிதி விவகாரங்கள், நீதி விவகாரங்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள், அடிப்படை கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகியனவற்றிற்கும் இவற்றிற்கென மட்டுப்படுத்தப்படாமல் இன்னும் தேவையான துறைகளுக்கும் அமைக்கப்படலாம். 16. காணி நிர்வாகம் சரத்து 9 இல் (ஐளுபுயு இன் நியாயாதிக்கம்) குறிப்பிடப்பட் டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்குக் காணி முக்கியம் என்பதால், வடக்குக் கிழக்கிலுள்ள தனியாருக்குச் சொந்தமானவை தவிர்ந்த எல்லாக்காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் பொருத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தீர்மானிப்பதற்குமான அதிகாரத்தை ISGA கொண்டிருக்கும். காணிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்களது காணிகளின் உரிமை, அத்துமீறிக் குடியேறியோர் வசிக்கும் காணிகளின் உரிமை போன்றவற்றை காலம் எவ்வளவு கடந்திருந்தாலும் கூட விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென காணி நிர்வாகம் தொடர்பான ஒரு விசேட ஆணைக்குழுவை ISGA நியமிக்கும். விசேட ஆணைக்குழு செயற்படுகின்ற கால வரையறையை ISGA தீர்மானிக்கும். 17. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வு இலங்கை அரசின் ஆயுதப் படைகளால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் இத்தகைய காணிகளுக்கு உரித்துடைய பொதுமக்கள் தங்குதடையின்றிச் செல்வதற்கான உரிமையை மறுப்பதும் சர்வதேச சட்ட நியமங்களை மீறும் செயலாகும். இந்தக் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமை முன்னைய உரித்தாளர்களுக்கு மீளளிக் கப்படவேண்டும். சொந்தக்காரர்களிடம் இருந்து அவர்களது காணிகளைக் கடந்த காலங்களில் பறித்துவைத்திருந்தமைக்காக, இலங்கை அரசு அவர்களுக்குக் கட்டாயம் நட்டஈடு செலுத்தவேண்டும். இந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களையும் அகதி களையும் மீளக்குடியமர்த்திப் புனர்வாழ்வு அளிப்பதற்கு ISGA பொறுப்பாக இருக்கும். 18. கடல் மற்றும் கரையோர வளங்கள் வடக்குக் கிழக்கு நிலப் பிரதேசத்தை அண்டிய கடல் மற்றும் கரையோர வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதோடு இந்த வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தேவைப்படும் கட்டுப்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கான அதிகாரங் களையும் கொண்டிருக்கும். 19. இயற்கை வளங்கள் வடக்குக் கிழக்கிலுள்ள இயற்கை வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அத்தகைய இயற்கை வளங்கள் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒப்பந்தங்களின் கீழ் வரவேண்டிய பணம் அனைத்தும் ஐளுபுயு இற்கு செலுத்தப்படு வதை இலங்கை அரசு உறுதிசெய்யும். நடைமுறையிலிருக்கும் அத்தகைய ஒப்பந்தங்களில் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் யாவும் ஐளுபுயு இன் சம்மதத்துடனேயே செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவற்றிற்கான ஒப்பந்தங்கள் ISGA உடன் செய்யப்படவேண்டும். 20. நீர்ப்பயன்பாடு ஆறுகளின் கீழ்ப்பகுதியில் நீர்பெறுவோருக்கு நீPதியாகவும் நியாயமாகவும் சம அளவிலும் நீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு ஆறுகளின் தோற்றுவாய்ப்பகுதிகளில் நீர் பெறுவோருக்கு உண்டு. இலங்கை அரசும் ISGA உம் நீர்வளப் பாவனையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். 21. ஒப்பந்தங்களும் குத்தகைகளும் ISGA இன் நியாயாதிக்கத்தின் கீழ்வரும் விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எய்தப்படும் ஒப்பந்தங்கள் அனைத் தும் ISGA உடன் மேற்கொள்ளப்படவேண்டும். நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தங்கள் அப்படியே தொடரும். ஆனால், இந்த ஒப்பந்தங்களின் கீழ் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் ISGA இற்கு கொடுக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்களில் ஏதேனும் மாற்றம் செய்வதாயின் ISGA இன் சம்மதத்துடனேயே மேற்கொள்ளப்படவேண்டும். 22. பிணக்குத் தீர்த்தல் இந்த ஒப்பந்த சரத்துகளுக்கு அர்த்தம் கற்பிப்பதிலோ, நடை முறைப்படுத்துவதிலோ இருதரப்பினரிடையேயும் பிணக்கு ஏதேனும் ஏற்பட்டு அப்பிணக்கு நோர்வே அரசின் நல்லிணக்கம் உட்பட இருதரப்பினருக்கும் ஏற்புடைத்தான வேறு ஏதாவது வழியில் தீர்க்கப்படமுடியாவிட்டால் மூன்று அங்கத்தவர்கள் - இதில் இருவர், தரப்பிற்கு ஒருவர் என்ற ரீதியில் இரு தரப்பினராலும் நியமிக்கப்படுவர் - கொண்ட ஓர் இணக்கமன்றின் முன் விசாரிக்கப்படும். இரு தரப்பினராலும் கூட்டாக நியமிக்கப்படும் மூன்றாவது அங்கத்தவர் மன்றின் தலைவராகச் செயற்படுவார். தலைவர் நியமனத்தில் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்படுமிடத்து, மன்றின் தலைவரை நியமிக்குமாறு சர்வதேச நீதிமன்றின் தலைவரை (Pசநளனைநவெ ழக வாந ஐவெநசயெவழையெட ஊழரசவ ழக துரளவiஉந) இரு தரப்பினரும் கோருவர். எந்தவொரு தகராறு பற்றியும் தீர்மானமெடுக்கையில், பிணக்குத் தீர்ப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசினதும் சமத்துவமான நிலையை உறுதிசெய்வதோடு இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மாத்திரமே உசாத்துணையாகக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பர். பிணக்குத் தீர்ப்பவர்களது தீர்மானம் இறுதியானதாகவும் முடிவானதாகவும் இருப்பதோடு பிணக்கில் சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கட்டுப்படுத்தும். 23. செயற்படும் காலம் பேச்சு மூலமான நிரந்தரத் தீர்வொன்றின் விளைவாக வடக்குக் கிழக்கிற்கென ஒரு புதிய அரசு நிறுவப்படும் வரை இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒரு தீர்வை எவ்வளவு விரைவாக அடைய முடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதற்கு இருதரப்பும் நல்லெண்ணத்துடன் பேச்சில் ஈடுபடும். இருப்பினும் கூட இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே நான்கு வருடங்களின் முடிவில் இறுதி உடன் படிக்கை எதுவும் எட்டப்படாவிட்டால் ஒப்பந்தத்தின் வீதிகளை மேலும் அதிகரித்து தெளிவுபடுத்தி வலுப்படுத்தும் நோக்கத்தில் இரு தரப்பும் நல்லெண்ணத்தோடு பேச்சுக்களில் ஈடுபடும்.” இதில் அதாவது இந்த ஒப்பந்தத்தில் ஏராளம் விடயம் விவாதிக்கப்பட வேண்டியன… இருந்தும் அரசு ஒப்புதல் அளிக்கத்தயாராக இருந்த போது அது தொடர்ந்து நடைமுறைக்கு வரததற்குத் தமிழர்களே காரணமானது என்பது வேதனைக்குரியது. தொடரும்... 50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும்… மிக்க மகிழ்ச்சி நோர்வே நாடுகடந்த அரசவை. காரணம் 2006ம் ஆண்டு என்னால் பரிந்துரை செய்யப்பட்ட திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு. எனினும் இதில் ஒரு சில திட்டங்கள் பழுவுடையதாகக்காணப்படுகின்றது. அதனையும் திருத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அதன் பகுதிகளுக்கான சில வரிகள் தரப்படுகின்றது.உலகத்தமிழர்களின் பின்னோக்கிய பாதையில் முன்னோக்கிச்செல்லும் தங்கள் போக்கிற்கு எனது பாராட்டுக்கள். எனினும் தமிழர்களின் ஆதரவில் தாங்கள் சொல்லும் 50வீத அனுமதி என்ற பொருள்தான் எனக்கு விழங்கவில்லை, தமிழர்கள் நோர்வேயில் எத்தனைபேர் வாழ்கின்றார்கள் என்ற தங்கள் கணக்கில் தவறுள்ளது, 5000என்ற அளவில் 50வீதத்தைக்கணிக்கின்றீர்கள் அது தவறான கணிப்பு என்பது தங்களுக்கே தெரியும். எனினும் தங்கள் 50 வீதத்தில் ஏன் மற்றவர்களின் கணிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நாம் ஒரே இனம், தாங்கள் ஒரே அமைப்பு அப்படியிருந்தே தங்களுக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கும் போது, இலங்கை முழுதும் பார்க்கும்போது, எம்முடைய பலம் எமக்குள்ளே இல்லாது இருப்பதை தாங்கள் உணரவில்லையா??? எனவே தங்களின் செயற்பாட்டில் தமிழர்கள் முதலில் திருப்தியடையும் வரையில் தங்கள் சேவை அமோகமாக இருக்கவேண்டும். அதன்மூலம் 50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும். அடிப்படைக்குறிக்கோளின் (2) “ஆ” -பகுதியில் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் சார் அனைத்துலக விவகாரங்கள்: சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளப்படவேண்டிய ஈழத்தமிழர் விவகாரங்களை மற்றைய நாடுகளிலுள்ள ஈழத்தமிழரோடு இந்த அவை ஒருங்கிணைத்துச் செயலாற்றும். இதற்கு பல வருடங்களாக அரச பதிவிற்குட்படுத்தப்பட்டு, தமிழர்களின் விடுதலைக்காக பல மாற்றுத்திட்டங்களை மேற்கொண்டு வெற்றியீட்டிய எமது அமைப்பான “புதிய தலைமுறை ஒன்றியம்” தங்களால் கைவிடப்பட்டதேன்??? “3) துணைக் குறிக்கோள்களும் வழிகாட்டல் கோட்பாடுகளும் இன் பெரும்பகுதியின் துணைப்பகுதியில், உ) நோர்வேயிலுள்ள இதர ஈழத்தமிழ் அமைப்புக்களுடன் சுமுகமான கருத்தாடலைப் பேணுதல்.” என்பதற்கிணங்க இத்தாலியின் தமிழர் பேரவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தியும், அவர்கள் எமது பதியப்பட்ட அமைப்புடன் தொடர்பு கொள்வதை ஒதுக்கியே செயற்பட எத்தணிக்கின்றனர். பொதுவாகவே எமது தமிழ் அமைப்புக்கள் இத்தாலி புலனாய்வினரால் தவறான கண்ணோட்டத்தில் உற்றுநோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் எமது அமைப்பு பத்துவருடங்களுக்கு மேல் தமிழர்களுக்கும் பிற வெளிநாட்டவர்களுக்கும் பல்வேறு அதாவது தாங்கள் இப்போது செயற்படத்துடிக்கும் செயற்பாடுகளை பலவருடங்களாக மேற்கொண்டு வெற்றிகண்டுள்ளது என்பதும். இது இத்தாலி சட்டத்திற்கமைய சர்வதேச ரீதியில் பதியப்பட்டு சட்டத்திற்குட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் போது, அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது என்பது எனது வினாவை தோற்றுவிக்கின்றது. “ஒ) 1) சமயசார்பற்ற தன்மை, 2) தாராள ஐனநாயக பண்புடைமை, 3) வெகுசனப் பஙகேற்புடனான அரசியல், 4) ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தன்மை, 5) முறையான சட்டவாட்சியை நிலைநிறுத்தல், 6) பரந்த ஐனநாயகப் பண்புகளைக் கொண்டிருத்தல், 7) ஏனைய நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்தல் ஆகிய தன்மைகள் பொருந்திய தமிழீழத்தை உருவாக்குவதற்காக ஈழத்தமிழ்த் தேசியம் பாடுபடவேண்டும் என்பதை அங்கீகரித்துச் செயற்படல்.”
இவ்வாறான ஒரு செயற்பாட்டை “தேசியம்” என்ற அலுவலகத்தூடாக இன்றுவரை மேற்கொண்டு வருகின்றோம் என்பதும் http://arugan.spaces.live.com என்ற இணையத்தின் மூலமும் http://www.thesiyam.org என்ற இணையத்தின்மூலமும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மடல் கிடைத்ததும் எமது அலுவலகத்திற்கு தங்களுடைய தொடர்பினை ஏற்படுத்துவீர்கள் என நம்புகின்றோம். தமிழர்களின் ஒன்றினைந்த நிரந்தரவிடுதலைக்காக… ஃ) ஸ்ரீலங்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள மனிதவிரோத சட்டங்களை ஆதரிக்கின்ற அல்லது தமிழர்களை இராணுவத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்குவதை ஆதரிக்கின்ற குழுக்கள் கட்சிகள் போன்றவற்றிலிருந்து விலகிநிற்றல்.
இந்த விடயத்தை பார்க்கும்போது, சற்று நிதானிக்கத்தோன்றுகின்றது. அரசியலில் ஏற்படுகின்ற பல சிக்கலை தங்களால் தீர்க்கமுடியுமா என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம், எப்போதும் பெரும்பாண்மையினை எதிர்க்கமுடியாது போகின்றபோது, தந்திரத்தை பாவிப்பது என்பது அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட களவு என்பது தங்களுக்குத்தெரியாததல்ல. தாங்களே இவ்வாறு ஜனநாயகத்திற்கு எதிராக யாப்பினை தொகுத்தால் எப்படி சிங்கள அரசு எமக்கான சாதகத்தைத்தர முன்வரும். இதனை எப்படிப்பார்க்கின்றீர்கள்????
க் ) தமிழீழத்தை அமைப்பதற்கான சகலவிதமான ஐனநாயக, வன்முறையற்ற வழிமுறைகளையும் கையாளுதல். இதில் சகல ஐனநாயக முறை என்று இருப்பது, (ஃ) பகுதியைக் கறைப்படுத்துவதாக காணப்படுகின்றதே!
“6. வாக்காளர்களின் தகைமையை நிரூபித்தல் : இலங்கையில் பிறந்ததை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள் (உ.ம்:- கடவுச்சீட்டு) வாக்களிப்பு வேளையில் சமர்ப்பிக்க வேண்டும். நோர்வேயில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்கள் பிறந்த நாட்டினை உறுதிப்படுத்தும் ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி ஆவணங்களை தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு தமிழ் மொழி அறிவுள்ள உதவியாளர் ஃ மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நிரூபித்தல்.”
இதற்காக, அருகனால் வெளியிடப்பட்ட திட்டத்தில் விசேட குறிப்புக்காணப்படுகின்றதனை அவதானிக்கவும். ஏற்கனவே 2006ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் பகுதி தங்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றது.
ஓன்றியத்தின் சார்பில், அருகனின் திட்ட அறிக்கை அவருடைய இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் 15-04-2009 ல் இதனோடு பின்னாளில் திரு உருத்திர குமாரால் வெளியிடப்பட்ட அறிக்கையும் அத்தோடு ஒப்பிட்டு வெளியிடப்படுகின்றது. இதிலிருந்தே பலவிடயம் மக்களுக்குப்புரிய வாய்ப்புண்டு அத்தோடு, அமைப்பாளர்களும் தம்மை திடப்படுத்த வாய்ப்புண்டு… | அருகனின் திட்ட அறிக்கை அவருடைய இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் 15-04-2009 ல் இது இணையத்தின் மூலம் பெறக்கூடிய அனைத்து முக்கிய அமைப்புக்களின் மின்அஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!! பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து “புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA செயற்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர்.
இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும். எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை… • முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
• அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.
• அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.
• உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.
• உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!
• உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.
• இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.
• நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.
• எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?
• வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …
• ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???
• தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?
• எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???
• நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். • … இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.
எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன…. அன்பன் அருகன். இத்தாலியில் இருந்து. 2007ன் "மலரும் மா தமிழீழம்!,?" என்ற நாவலின் பகுதிகளின் அடிப்படையில் arugan@hotmail.it நிலையான மின்னஞ்சல்
| நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் புதன்கிழமை 17 யூன் 2009 இரா.பார்த்தீபன் இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய - தமிழர் ஓர் தேசிய இனம் - வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் - ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது. 2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல். 3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல். 4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும். 5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல். 6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல். 7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல். 8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல். 9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல். இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும். தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக ” புதிய இளைய தலைமுறையினருடன்” (? - எமது ஒன்றியத்தின் பெயரோடு ஒப்பிடக்கூடிய பெயர் என்பதனைக்கவனிக்கவும் UNGA “புதிய தலைமுறை ஒன்றியம் ”- ) இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும். இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா) பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா) திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம். இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org நிலையற்ற மின்னஞ்சல்
| இது இணையத்தின் மூலம் பெறக்கூடிய அனைத்து முக்கிய அமைப்புக்களின் மின்அஞ்சல்களுக்கு 19/11/2009 மீழவும் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
கண்ணீரோடு காலங்காலமாக வணக்கம்செலுத்த கரைபுரண்டோடும் வீரசாகசம் படைத்தோர் எம்மாவீரர்கள்… எம்நெஞ்சில் நீங்காது சிலையாகி பதிந்தோரை எப்படியெல்லாம் துதிக்கமுடியுமோ அப்படியெல்லாம் துதிக்க புதுவழி தேடும் எம்புலத்து உறவுகள்… http://www.eelamoli.com/ புதிய போக்கில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் புத்தம்புதிய இணைய வானொலிக்கு எங்கள் வாழ்த்துக்கள். தமிழர்களின் தார்மீக உரிமையினை வென்றெடுக்க தம்மை திரியாக்கி எரிந்தோரைத்துதிபாட எத்தணிக்கும் இணையம் மேலோங்கி உரிமைக்குரல் கொடுக்க வாழ்த்துக்கள். November 19
முன்னாள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போக்கிற்கு எதிராக இருந்த அனைவரையும் துரோகிகள் என்று வசைபாடிய புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் உறுப்பினர்களும் இன்று எவ்வாறு தமது பாதைகளை திருப்பியுள்ளார்கள் என்பதகை கண்காணிக்கவேண்டும்.
தமிழ் மக்கள் நலன்கருதி தமிழர் ஆதரவாளர்களால் எடுக்கப்பட்ட அனைத்தையும் கண்டித்தும், தண்டித்தும், மக்கள் மத்தியில் எதிர்ப்பையும்தூண்டிவந்த பிரபாவின் ஆதரவாளர்கள் இப்போது, இருதலைக்கொள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இருந்தால், பத்மனாபனும் துரோகியாக்கப்பட்டு உயிரை மாய்திருப்பார், நெடியவனும் துரோகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பார், உருத்திரகுமாரும் துரோகியாக்கப்பட்டிருப்பார்… இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகின்றது? இதனை ஏற்கும் முன் நாம் காலத்தைப்பின்நோக்க வேண்டும்… மேலும் வாசிக்க »
Posted on நவம்பர் 19, 2009 by தேசியம்
UNGAன் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???
“மலரும் மா தமிழீழம்!,?”
சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 – நாவலில் இருந்து)
“அடிதடி 13”
ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும்
இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.
கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது.
இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். மேலும் வாசிக்க »

50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும்…
மிக்க மகிழ்ச்சி நோர்வே நாடுகடந்த அரசவை. காரணம் 2006ம் ஆண்டு என்னால் பரிந்துரை செய்யப்பட்ட திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு. எனினும் இதில் ஒரு சில திட்டங்கள் பழுவுடையதாகக்காணப்படுகின்றது. அதனையும் திருத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அதன் பகுதிகளுக்கான சில வரிகள் தரப்படுகின்றது.உலகத்தமிழர்களின் பின்னோக்கிய பாதையில் முன்னோக்கிச்செல்லும் தங்கள் போக்கிற்கு எனது பாராட்டுக்கள். எனினும் தமிழர்களின் ஆதரவில் தாங்கள் சொல்லும் 50வீத அனுமதி என்ற பொருள்தான் எனக்கு விழங்கவில்லை, தமிழர்கள் நோர்வேயில் எத்தனைபேர் வாழ்கின்றார்கள் என்ற தங்கள் கணக்கில் தவறுள்ளது, 5000என்ற அளவில் 50வீதத்தைக்கணிக்கின்றீர்கள் அது தவறான கணிப்பு என்பது தங்களுக்கே தெரியும். எனினும் தங்கள் 50 வீதத்தில் ஏன் மற்றவர்களின் கணிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நாம் ஒரே இனம், தாங்கள் ஒரே அமைப்பு அப்படியிருந்தே தங்களுக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கும் போது, இலங்கை முழுதும் பார்க்கும்போது, எம்முடைய பலம் எமக்குள்ளே இல்லாது இருப்பதை தாங்கள் உணரவில்லையா??? எனவே தங்களின் செயற்பாட்டில் தமிழர்கள் முதலில் திருப்தியடையும் வரையில் தங்கள் சேவை அமோகமாக இருக்கவேண்டும். அதன்மூலம் 50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் வாசிக்க » November 18 கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் ,வன்னியில் கொல்லப்பட்ட 25,000 மக்களைப் பற்றி எதுவும் கூறாது, அங்கு நடந்த மனிதப்பேரவலைத்தை, விவரிக்காது மற்றும் புதை குளிகளைப் பற்றிப் பேசாது, விடுதலைப் புலிகள் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இலங்கை இராணுவம் தாம் முல்லைத்தீவு பொது வைத்தியசலையை சரமாரியாகத் தாக்கியதாகவும் ஒப்புக்கொள்கிறது, இருப்பினும் அங்கு விடுதலைப் புலிகள் இருந்ததால் தாக்கினோம் என நியாப்படுத்த முயல்கின்றனர்.
இறுதிக்கட்டப் போரின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சிறிலங்கா அரசின் செல்வீச்சால் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வந்த போதும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. பி.பி.சி, சி.என்.என் மற்றும் அல்ஜசிரா போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு, தாம் அப்பகுதியில் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என இலங்கை அரசு அப்பட்டமான பொய் கூறியது. அதற்க்கு ஒருபடி மேல்போய் விடுதலைப் புலிகளே மருத்துவமனைகளை தாக்குகின்றனர் என்றார் கோத்தபாய.
அந்தப் பிராந்தியத்தில் வைத்தியசாலைகளே இல்லை என்றும் அது கூறியிருந்தது. புலம் பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களும் அதனைப் புலிகளின் பிரச்சாரம் என்றே கூறி வந்தனர். எனினும் இந்த வீடியோவில் அது முழுமையாகச் செல்வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
புலிகள் இப்பகுதியிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாலேயே சிறிலங்கா அரசாங்கமும் வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தியதாக தமக்குச் சொல்லப்பட்டது என்கிறார் இந்த ஊடகவியலாளர். அவர் இராணுவ உயரதிகாரியை மேற்கோள் காட்டி குரிப்பிட்டுள்ளார் - Nanri http://www.manithan.com
November 17 2006ல் எழுதப்பட்ட "மலரும் மா தமிழீழம்" என்னும் அருகனின் நாவலில் இருந்து “அடிதடி 7” புலம்பெயர் தமிழ் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒரு சில எம்மவரின் கேவலமான வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…
ஒரு பெண், அவள் ஒரு பையனை விரும்புகிறான் என்று பெற்றோர் அவசரம் அவசரமாக இலங்கைக்குக் கூட்டிக்கொண்டு போய் வேறு ஒரு பையனை திடீரென மணம் முடித்துவைத்தனர். அந்தப்பெண்ணும் எமது பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கம் என்பவற்றை மதிப்பவள் போல் தன்னால் முடிந்தவரை அடித்துப் பிடித்து கணவனை தன்னுடன் அழைத்துவிட்டாள். “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பது போல் அவர்கள் காணப்பட்டார்கள். மகிழ்ச்சி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது! கணவன் வந்ததும் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் ஆவலுடன் செய்தாள் அவள். நிமிடங்கள் நகர்ந்து, நாட்களாயின நாட்கள் கடந்து மாதங்கள் ஆயின… நான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து வைத்திய சாலைக்கு அவசரமாக என்னை மொழி பெயர்ப்பிற்காக அழைப்பு வந்தது. அங்கு சென்றேன், என்கண்களை என்னால் நம்ப முடியவில்லை, நான் குறிப்பிடும் அந்தப்பெண் காயங்கள் தெரிய நின்றிருந்தாள், அவளிடம் நடந்த சம்பவத்தை தெளிவு படுத்தக் கேட்டேன்; அப்போது, அவள் எல்லாவற்றையும் சொல்ல மறுத்ததும், நடந்திருக்கக்கூடிய சம்பவம் எனக்குப் புரிந்தது. அங்கிருந்து சென்றதும் மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது; அப்போது, அவள் தனது கணவனைப் பிரியும் அளவிற்கு வந்து விட்டாள் என்று சொன்னாள். என்னால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. இதற்கிடையில் அவள் கர்ப்பமாக இருந்தாள் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தப் பெண்ணை, அவள் கணவன் அடித்துத் துன்பப்படுத்துவதாகவும் கர்ப்பிணி என்று பார்க்காமல் அவளைச் சித்திரவதை செய்வதாகவும் அவள் தெரியப்படுத்தினாள். காலம் சென்றது குழந்தையும் பிறந்தது… இத்தனை கேவலமான தமிழ் இளைஞர்களும் இருக்கிறார்களா? என்று என்மனம் வேதனைப்பட்டது. வீட்டிலே உரிமைகள் மறுக்கப்பட்டால் நாட்டில்?... ஆனாலும், அவர்கள் சச்சரவுகள் தீரவில்லை, அவன் அவளை விட்டு வெளியேறினான். அவள் பிஞ்சுப்பாலனுடன் தனிமையாக்கப்பட்டாள். நல்லவேளை அவள் வேலைசெய்தபடியால் அரசிடம் இருந்து வரவேண்டிய உதவித்தொகை மாதாமாதம் வந்து கொண்டிருந்தது. தனது காலத்தை அவள் அவனைப் பிரிந்தும் ஒருவாறாக ஓட்டிக்கொண்டிருக்கிறாள். இதே வேளையில் அந்தப் பையன் என்னவானான்? அவனுக்குத் தெரியாத பூங்காக்களேயில்லை, அவனுக்குத் தெரியாத மதுபானங்களேயில்லை, அவனுக்குத் தெரியாத, அளவுக்குமீறிய குடிகார நண்பர்களேயில்லை. இந்தக் குடும்பத்தின் உண்மைநிலை எமக்குத் தெரியாவிட்டாலும், எமது கலாசாரம், பாரம்பரியம் சீரழிகின்றது என்பதே உண்மை. இவற்றை யார்தான் தீர்த்து வைப்பது? அவளுக்கு ஏற்படும் கஷ்டகாலத்தில் எந்த அமைப்பு கைகொடுக்கப் போகிறது. தனிமையாய் இருக்கும் பெண்கள் மத்தியில் ஆண்கள் ஒருசிலரின் பார்வையே வேறு என்பதனை ஏற்கனவே “அர்ச்சனை இதழ்கள்” என்னும் நூலில் எழுதியுள்ளேன். இன்னொரு குடும்பம், திருமணவயதில் பிள்ளைகள் இருக்கும் போது, மனைவி தனது பிடிவாதம் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ விலகும் சந்தர்ப்பத்தில், கணவன் மறு மணம் செய்து விட்டுத் தலைநிமிர்ந்து நடக்கின்றார். இதில் எத்தனை பேருடைய இதயங்கள் தாக்கப்டுகின்றன… எனக்கென்ன!? அது, அவனுடைய பிரச்சனை என்று ஒதுக்க முடியாதே! ஏனென்றால் அச்சம்பவம் எமது பண்பாட்டுக்குட்பட்ட நபர்களாலேயல்லவா மேற்கொள்ளப்படுகிறது… இவ்வாறான மன ஒற்றுமையற்ற சந்தர்ப்பத்திலும் சேர்ந்து வாளச்சொல்லி முட்டாள்தனமாகச் சொல்லவில்லை. அதற்கு செய்யவேண்டிய முறைகளைச் செய்து விட்டு பின்னர் தனது முடிவை எடுக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மறுமணம் முடித்த பெண்ணைப் பற்றி சற்று திரும்பிப்பார்த்தால், குடும்ப வாழ்விற்காக இந்தப்பெண்ணைச் சட்டப்படி வெளிநாட்டுக்கு இலகுவில் கொண்டுவரமுடியாது. அப்படிக் கொண்டு வந்தாலும், பல்வேறு சட்ட பிரச்சனைக்குள் அவள் சிக்குப்பட வேண்டியிருக்கும். இவ்வேளையில் அவளுடைய மனம் படும் பாட்டிற்கு யார் விடுதலை தருவார்கள்? மனம் ஒத்துப்போகாத சந்தர்ப்பத்தில் விலகுவதே இருபாலருக்கும் நல்லது. ஆனால், விலகுமுன் அதற்கு வேண்டிய அனைத்து முறைகளையும் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் மேற்கொண்ட பின்னரே, அடுத்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் மக்களிடம் இருந்து பலனைப் பெற்ற எந்த அமைப்பும் தீர்வை கொண்டுவரப் போகிறது. எனவே, தமிழீழம் கிடைப்பதற்கு முன்னரே, மக்கள் மத்தியில் ஒரு மதிக்கப்படக்கூடிய அலுவலகத்தை, மக்களின் சமுகப்பிரச்சனைக்காக நீதிதரக்கூடிய அதிகாரிகள் உள்ளடங்கிய மேலும், இப்போதிருந்தே எதிர்காலத்தில் ஆவணங்களை மேற்கொள்ளக்கூடிய நிர்வாகிகளை புலம் பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியாக வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலயங்களுக்கு அப்பாற்பட்டு, தொடர்பற்று “ஈழ” அரசு என்ற ரீதியில் அமைக்கப்பட வேண்டும். (இது தொடர்பாக இத்தாலியில், சட்டத்திற்கிணங்க தேவை ஏற்படின் உதவுவதற்கு மக்கள் ஒன்றியமான UNGA “arugan@hotmail.it” வை தொடர்பு கொள்ளலாம்.) இது 2006ம் ஆண்டுல் எழுதப்பட்டது இதன்அடிப்படையில் நாடுகடந்த அரசு என்ற ஒன்றை புலிகளின் ஆதரவாளர்கள் 2009ல் மேற்கொள்கின்றபோதிலும் இந்நாவலையோ அதன் எழுத்தாளனையோ புறக்கணிக்க எத்தணிக்கின்றனர். இதுதான் தமிழர்களின் நிலை!!! November 12 தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள்- பகுதி -2 ஏற்கனவே எழுதிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் தள்ளப்படுகின்றேன். அதாவது, “மண்மைகழுவப்பட்ட மக்கள்மத்தியில் தொண்டைகிழியக்கத்தினாலும் தேசம் கிடைக்கப் போவதில்லை” பலர் மக்கள் தொகையினைவைத்து தமிழீழத்தின் கோரிக்கையினை புறந்தள்ளப்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் பெரும் அம்சமாகக்கருதப்படுவது மக்களேயாயினும், மக்கள்தொகையினைவைத்து அரசினை எடைபோடமுடியாது. அதேபோன்று நிலப்பரப்பும் அரசுசார்ந்த மிகமுக்கிய கூறில் ஒன்றாயினும், அதுவே அரசை நிர்ணயிக்கமுடியாது என்பதனை அடிமட்டமக்களும் அரசியல்வாதிகளும் சிங்களப்பேரின வாதிகளும் புரிந்தாகவேண்டும். எமது தமிழர்களின் போரிக்கை அழுத்தமானதும் தார்ப்பரியமானதும் திடமானதும்… எனினும் அதன்அணுகுமுறைகளில் தவறுகள் இல்லாமல் இல்லை… அவை திருத்தப்படும்போது, பலம்பொருந்திய தேசிய கட்டமைப்பொன்று நிச்சயம் உலகநாடுகளை நோக்கவைக்கும் என்பது திண்ணம். அது வெகுதொலைவிலில்லை. இப்போதும் தற்பெருமையும், தலக்கணமும் கூடியுள்ள எமது தலைமைத்துவங்கள் அறிவாளிகளின் கூட்டமைப்பை புறந்தள்ளியேவருகின்னமையும், தமக்கு ஏற்காத கருத்தை மாற்றுக்கருத்து என கேவலப்படுத்துவதுமே எமது பிளவுகளுக்கும், பின்னடைவுகளுக்கும் இழப்புக்களுக்கும் காரணம்.
இனி மேற்கூறிய விடயத்திற்கு வருவோம்.
உலகின் மிகச்சிறிய நாடாகிய வத்திக்கன் தற்போதைய அரசுகளில் மிகத்துல்லியமாக உணரக்கூடியதாக இருக்கின்றது. 0.44 கிமீ² (232வது) 0.17 சது. மை இதே வேளையில் இது 232 நாடுகளில் இதுவே கடைசி இடத்தை பிடித்துள்ளது. குறைந்த நிலப்பரப்பையுடைய தனிதேசமாகவும் தனி அரசாகவும் இடம்பிடித்துள்ளது. இதில் விவாதிக்கவேண்டிய நிலை உள்ளன என என்னிடத்தில் கல்விகற்ற மாணவர்களுக்கு நன்கு தெரியும். (Arugan - பார்க்க அருகன் நாவல்கள் மற்றும் ஆக்கங்கள்) இருந்தும் விவாதமற்ற முறையில் இதுவே மிகச்சிறிய நிலப்பரப்பைக்கொண்ட தேசமாகும். மேலும் மக்கள் தெகையினைக்காணும்போது, 2009 இன் மதிப்பீட்டின்படி 826 பேராகக்காணப்படுவதோடு, உலகநாடுகளுடன் ஒப்பிடும்போது, 229வது இடத்தைப்பிடிக்கின்றது என்றால் இச்சிறிய தொகையிலும் பார்க்க மேலும் குறைந்த மக்கள் தொகையுடைய நாடும் உள்ளது தெரியவருகின்றது. “பிட்கெய்ர்ன் தீவுகள்” என்னும் தேசம் 2007ன் கணிப்பின்படி 48 பேரும் 2009ன் கணிப்பின்படி 46 பேருமாகக்காணப்படுகின்றமையில் இருந்து மக்கள் தொகையும் நிலப்பரப்பின் அளவும் ஒருதேச உருவாக்கத்திற்கு முக்கிய காரணியல்ல, வரையறுக்கப்பட்டநிலப்பரப்பும், குறிப்பிட்ட தேசத்தில் உரித்துடைய மக்களும் அவசியமேயொழிய அரசு அமைவது அதன் அளவைப் பொறுத்ததல்ல. தற்போது பிரபல்யமாகப்பேசப்பட்டுவரும் கிறிஸ்மஸ் தீவு நிலப்பரப்பில் அதிகமாக உள்ள போதிலும் மக்கள் தொகை மிகக்குறைவே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்படும் சிலநாடுகள் இன்னமும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாகாது இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தமிழர்களுக்கென ஒரு தேசம் அமைவதில், தமிழர்களின் தொகையோ அல்லது, தேசத்தின் அளவோ காரணத்தடையாக இருக்கமுடியாது என்பது மிகத்தெளிவாகத்தெரிகின்றது. எனவே தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள் -தொடரும். 01-11-2009 தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம். தனிநாடாக அமைய என்ன வழிகள்- பகுதி –2
எனது பலஆக்கங்களில் அரசு தொடர்பாக எழுதியிருந்தாலும் தற்போதைய தேவை இன்றியமையாததாக இருக்கின்றது. எனது முற்பட்ட ஆக்கங்கள் இதுதொடர்பாக மிகத்தெளிவாகத் துல்லியமாக விரிவுபடுத்தியிருக்கின்றமையினை எமது இணையத்தளம் நிரூபிக்கின்றபோதிலும் தற்போதைய தேவை அசாதாரணமாக மக்கள்மத்தியில் செலுத்தப்படவேண்டிய கடப்பாடுஉளவென்பதை ஆரம்பத்திலேயே எடுத்துரைத்தேன். அந்த வகையில், ஒரு அரசின் அடிப்படைக்கூறுகளாக, (1)குறிப்பிட்ட தேசிய மக்கள், (2)வரையறுக்கப்பட்ட ஆட்சிப்பரப்பு, (3)அவ்வரசை ஆட்சிசெய்யக்கூடிய அரசாங்கம், (4)அவ்வரசிற்கென தனி இறைமை, (5) இவையனைத்தோடும் சர்வதேச அங்கிகாரம் போன்றன அமையும்போது அது குறிக்கப்பட்ட அரசாக அமைகின்றது. இவ்வாறான நிலை 1945க்குமுற்பட்டகாலத்தில் ஒப்பிடக்கூடியனவல்ல, ஆனால் 1945ற்குப்பிட்பட்ட காலத்தில் அதாவது, தற்காலத்தில் ஒருநாடு உருவாகின்றமை என்பதோ அல்லது அழிக்கப்படுகின்றமை என்பதோ அத்திபூத்தமாதிரியாக இருக்கின்றது. அதையுந்தாண்டி ஒருநாடு தன்னைத்தோற்றுவிக்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ ஒரு நிலை ஏற்படுமாயின் அது அதன் ஆட்சிக்குட்பட்ட அரச ய hப்பினூடாகவே அதாவது அந்த அரசால்மட்டுமே அழுத்தப்படுகின்ற ஒரு தாக்கமாகக்காணப்படுகின்றது. இதில் பிறநாட்டு தலையீட்டிலும்பார்க்க, அல்லது சர்வதேசத்தின் தலையீட்டிலும்பார்க்க அந்த, சொந்த நாட்டின் இறைமையால் பகுக்கப்பட்டவையாகக்காணப்படுகின்றன. குடந்த காத்தில் செக்கோசெலாவாக்கிய என்ற தேசம் இருநாடுகளாகப்பிரிக்கப்பட்டதற்கு போராட்டத்தையோ அல்லது, சர்வதேசத்தலையீட்டையோ காரணங்காட்டமுடியாது. துற்போது அவை இருநாடுகளாக தம்மை பிரித்துக்கொண்டன. சோவியத்யூனியனின் பிளவிற்கு மறைமுகக்காரணங்கள் வேறாக இருந்தபோதிலும் அதன் பிரிவு அந்த சோவியத்யூனியனாலேயே ஏற்பட்டதனைக்கவனத்திற்கொள்க… இப்படியே பார்க்கின்றபோதில் ஒரு அரசின் முக்கிய பகுதியில் ஒன்றாகக்காணப்படுவதும் அரசாங்கத்தை நெறிப்படுத்துகின்றதுமான அரசியல்யாப்பின் அமைவிற்கேற்:ப எதைவேண்டுமானாலும் செய்யலாம்என்பதே ஜனநாயகஆட்சிமுறை. எனவே அரசில் ஒருமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தந்திர உபாயமே அவசியமன்றி விரமோ, விரக்தியோ அவசியமற்கது என்பதனை நாம்புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எமது போராட்டத்தின் பின்ளணியை உற்று நோக்கும்போது, 13ம் திருத்தச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று சிறுபிள்ளையைப்போல் அடம்பிடிப்பது தும்பிமிட்டாய்வாங்கிகொடுப்பதற்குச்சமமாகும். ஆதற்காக தமிழீழத்தை அப்படியே தா… என்று கேட்பது கையாளாகாத சிங்கள அரசியல்வாதிகள் கூட்டம் கூட்டமாக காவடி எடுத்தாடுவது போல் போய்விடும். ஆப்படியென்றால் என்னதானய்யா செய்வது என்று அலுத்துக்கொள்ளவேண்டாம். எதுக்கெடுத்தாலும் பிடிவாதம், அவசரம், ஆயுதம், அடிதடி… அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர்களுகஇகு அதிகாரம் இல்லை என்பது நன்கு தெரிந்து விட்டது. அதுபோலவே, போராட்டத்தின்மூலமும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோம்என்பதும் உண்மையே அப்படியென்றால் ??? அடிமையாகியே சாவாதா
“அடங்காக தமிழன் இன்று அடிபணிந்து சாவதா அகதிவாழ்வை எண்ணி எண்ணி அடிமையாகி வாழ்வதா!!!” வணங்காமண்ணை ஒருமுறை எண்ணிப்பார்க்கச்செல்கின்றேன். அதில் தமிழனுடைய கர்வம் இருந்ததே ஒழிய தந்திரம் இல்லை. அது எம்முடைய குற்றம் என்பதனை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் இன்னமும் எமக்குவரவில்லை என்பதும் உண்மையே! ஆயுதப் போராட்டத்திற்கு ஆவேசமும் தந்திரமும் முன்னோக்குச் சிந்தையுடைய பின்னோக்குப்பார்வையும் எவ்வளவு அவசியமோ, அதுபோலவே அரசியலுக்கு அந்தரங்கமும், நத்திரமும், பின்னோக்குப்பார்வையுடைய முன்னோக்குச்சிந்தனையும் அவசியம்.
ஆரம்ப காலங்களில் சோவியத்யூனியனும், சீனக்குடியரசும் சர்வதேச அங்கிகாரமின்றியே அரசை நடத்திவந்த னஎன்பதை நினைவுபடுத்த வீம்புகின்றேன். எனினும் அது முற்பட்டகாலம். துற்போதைய காலத்தில் புதிய நாடு ஒன்று போராட்டத்தினாலே அல்லது மக்கள் புரட்சியினாலோ உருவாவதகை எந்த நாடும் விரும்பவில்லை என்பதே உண்மை. இன்று உலகளாவிய தொழில் சிக்கலுக்கும் நிதி நெருக்கடிக்கும் காரணம் இவ்வாறான போராட்டங்களும் அதற்காக நகர்த்தப்படும் பணத்தொகையும் முடக்கப்படும் நிதிச் சதிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற முடிவே இறுதியில் ஆரட்சியில் தெரிய வரும்போது, அதில் தமிழர்களின் போராட்டமும் இணையும்போது, வல்லரசுகளாலும் பல்லரசுகளாலும் ஒதுக்கப்படும் நிலையிலே எமது, தார்மீக உரிமைகள் மிதிக்கப்பட்டுவிடும் என்பதனை எமது தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எமது தமிழீழப்போராட்டத்தின் யாப்பு இன்னமும் வெளிப்படையாக வரையறுக்கப்படாமை எமது போராட்டத்தில் சர்வதேசரீதியில் பின்னடைவினை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. அப்போது ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கும் அரச அங்கிகாரமில்லை இப்போது ஆரம்பிக்கப்படும் நாடுகடந்த அரசிற்கும் அங்கிகாரமில்லை. எமது தமிழ் அரசியல்வாதிகளாக தம்மை அமைத்துக்கொண்டிருக்கும் முன்னாள் போராட்ட குழுக்களை ஒருமித்து குரல்கொடுங்கள் என்றால் அது பகல்கனவுதான். இன்று இணைவார்கள் நாளை பதவிக்காக பிரிவார்கள் கேட்டால் மக்களுக்காகப்பிரிந்தோம் என்பார்கள்.
யாரும் யாருடனும் சேரத்தேவையில்லை, யாரும் யாருக்காகவும் பிரியவும் தேவையில்லை, என்னபாடுபட்டேயாயினும் இலங்கை அரசில் பலமுள்ள அதிகாரமுள்ள அமைச்சராக முதலில் கால்பதிக்கட்டும், பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழன் தோல்வியைத்தழுவேன் என்று தெரிந்தும் போட்டிபோடட்டும். சிங்கள பிரதேசத்திலும் தமிழர்கள் வாக்குக்கேட்கட்டும் சிங்களவர்களிடத்தில் தமிழர்களுக்கும் அரசியல்தெரியும் என்பதனைக்காட்டட்டும். தமிழீழப்போராட்டம் தெரியாத எத்தனையோ சிங்களவர்கள் இன்றும் இலங்கையில் இருக்கத்தான் செய்கின்றார்கள். தமிழர்கள் செய்யும் சிறப்பான செய்கைகள் தெரியாத எத்தனையோ தமிழர்களே இருக்கும் போது, சிங்களவர்கள் இருக்கமாட்டார்களா? - தொடரும் November 11 தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள்- பகுதி -1 ஏற்கனவே எழுதிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் தள்ளப்படுகின்றேன். அதாவது, “மண்மைகழுவப்பட்ட மக்கள்மத்தியில் தொண்டைகிழியக்கத்தினாலும் தேசம் கிடைக்கப் போவதில்லை” பலர் மக்கள் தொகையினைவைத்து தமிழீழத்தின் கோரிக்கையினை புறந்தள்ளப்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் பெரும் அம்சமாகக்கருதப்படுவது மக்களேயாயினும், மக்கள்தொகையினைவைத்து அரசினை எடைபோடமுடியாது. அதேபோன்று நிலப்பரப்பும் அரசுசார்ந்த மிகமுக்கிய கூறில் ஒன்றாயினும், அதுவே அரசை நிர்ணயிக்கமுடியாது என்பதனை அடிமட்டமக்களும் அரசியல்வாதிகளும் சிங்களப்பேரின வாதிகளும் புரிந்தாகவேண்டும். எமது தமிழர்களின் போரிக்கை அழுத்தமானதும் தார்ப்பரியமானதும் திடமானதும்… எனினும் அதன்அணுகுமுறைகளில் தவறுகள் இல்லாமல் இல்லை… அவை திருத்தப்படும்போது, பலம்பொருந்திய தேசிய கட்டமைப்பொன்று நிச்சயம் உலகநாடுகளை நோக்கவைக்கும் என்பது திண்ணம். அது வெகுதொலைவிலில்லை. இப்போதும் தற்பெருமையும், தலக்கணமும் கூடியுள்ள எமது தலைமைத்துவங்கள் அறிவாளிகளின் கூட்டமைப்பை புறந்தள்ளியேவருகின்னமையும், தமக்கு ஏற்காத கருத்தை மாற்றுக்கருத்து என கேவலப்படுத்துவதுமே எமது பிளவுகளுக்கும், பின்னடைவுகளுக்கும் இழப்புக்களுக்கும் காரணம்.
இனி மேற்கூறிய விடயத்திற்கு வருவோம்.
உலகின் மிகச்சிறிய நாடாகிய வத்திக்கன் தற்போதைய அரசுகளில் மிகத்துல்லியமாக உணரக்கூடியதாக இருக்கின்றது. 0.44 கிமீ² (232வது) 0.17 சது. மை இதே வேளையில் இது 232 நாடுகளில் இதுவே கடைசி இடத்தை பிடித்துள்ளது. குறைந்த நிலப்பரப்பையுடைய தனிதேசமாகவும் தனி அரசாகவும் இடம்பிடித்துள்ளது. இதில் விவாதிக்கவேண்டிய நிலை உள்ளன என என்னிடத்தில் கல்விகற்ற மாணவர்களுக்கு நன்கு தெரியும். (Arugan - பார்க்க அருகன் நாவல்கள் மற்றும் ஆக்கங்கள்) இருந்தும் விவாதமற்ற முறையில் இதுவே மிகச்சிறிய நிலப்பரப்பைக்கொண்ட தேசமாகும். மேலும் மக்கள் தெகையினைக்காணும்போது, 2009 இன் மதிப்பீட்டின்படி 826 பேராகக்காணப்படுவதோடு, உலகநாடுகளுடன் ஒப்பிடும்போது, 229வது இடத்தைப்பிடிக்கின்றது என்றால் இச்சிறிய தொகையிலும் பார்க்க மேலும் குறைந்த மக்கள் தொகையுடைய நாடும் உள்ளது தெரியவருகின்றது. “பிட்கெய்ர்ன் தீவுகள்” என்னும் தேசம் 2007ன் கணிப்பின்படி 48 பேரும் 2009ன் கணிப்பின்படி 46 பேருமாகக்காணப்படுகின்றமையில் இருந்து மக்கள் தொகையும் நிலப்பரப்பின் அளவும் ஒருதேச உருவாக்கத்திற்கு முக்கிய காரணியல்ல, வரையறுக்கப்பட்டநிலப்பரப்பும், குறிப்பிட்ட தேசத்தில் உரித்துடைய மக்களும் அவசியமேயொழிய அரசு அமைவது அதன் அளவைப் பொறுத்ததல்ல. தற்போது பிரபல்யமாகப்பேசப்பட்டுவரும் கிறிஸ்மஸ் தீவு நிலப்பரப்பில் அதிகமாக உள்ள போதிலும் மக்கள் தொகை மிகக்குறைவே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்படும் சிலநாடுகள் இன்னமும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாகாது இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தமிழர்களுக்கென ஒரு தேசம் அமைவதில், தமிழர்களின் தொகையோ அல்லது, தேசத்தின் அளவோ காரணத்தடையாக இருக்கமுடியாது என்பது மிகத்தெளிவாகத்தெரிகின்றது. எனவே தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள் -தொடரும். 01-11-2009 November 09 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09–11–2009 ஊடக அறிக்கை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும். காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது. இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும். அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது. அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும். மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' Nanri thmil udakam November 05 இத்தாலி வாழ்தமிழர்களே, தாங்கள் விண்ணப்பித்த விசாக்களை தனிநபர்களின் ஆலோசனையின்பெயரிலும் சட்டத்தரணிகள் ஊடாகவும் மேலதிக பணத்தைச் செலவளிப்பதுடன் நேரத்தையும் விரயம் செய்கின்றீர்கள். எனவே தகுந்த ஆலோசனை தரக்கூடியவர்களிடமும், சேவையினை சீராக மேற்கொள்கின்ற அலுவலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். விசாதொடர்பாக முதலாவது தடவை அழைக்கப்பட்டோர்கள் பின்வரும் பகுதியை அழுத்தி அங்கு உங்கள் பற்றுச்சீட்டில் 0607... என்று தொடங்கும் இலக்கங்களை மட்டும் அழுத்திப்பார்த்து விசா ஆயத்தமா என்று பார்த்தபின்னர், அதனை மீட்பதற்கு எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை பின்வரும் பகுதிக்குச்சௌன்று பார்வையிடலாம். இதற்கு யாருக்கும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. மேலதிக விபரங்கள் தேவைப்படின் 3204031624 என்ற இலக்கங்களுடன் அல்லது தகுந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும். - அருகன்.
1) விசா ஆயத்தமா என்று பார்க்க - ******
2) விசாவை மீட்பதற்கான நாளை அறிவதற்கு- ******
4ம் திகதி எமது வெளியீட்டு வினாக்களுக்கு திரு உருததிரகுமார் இணையத்தின்மூலம் பதில் வழங்கியுள்ளார். எமது வினாக்களும் பின்னர் அவருடைய அறிக்கையும் இங்கு தரப்படுகின்றது. “இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. “ http://www.thesiyam.org Posted on நவம்பர் 2, 2009 by தேசியம் கடந்த பத்துவருடங்களாக, தமிழர்களுக்கு மட்டுமன்றி பல்வேறுபட்ட மக்களுக்கும் உதவும் வகையில் ஐரோப்பா ரீதியில் செயற்பட்டுவந்த தமிழ் ஒன்றியமான “புதிய தலைமுறை ஒன்றியம்” தற்போது தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு, அதன்மூலம் உலகத்தமிழர்களுக்கு ஆதரவாகச்செயற்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் அனைத்து உலக ரீதியிலான அரச நிறுவனங்களுக்கும் ஒத்தாசையும் முழு ஆதரவும் வழங்கும் … என்ற எமது போக்கிற்கும் பதில் இதுவாக எடுத்துக்கொள்ளலாமா????” நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது 04 November, 2009 by admin  புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் உருவாகும் புதிய கட்டமைப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசு வரவேற்கிறது.. இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத்தமிழ் சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் பெற்றுவருகின்றோம். மேலும், கடந்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் வாரங்களில் தமிழ்மக்கள் பெருந்தொகையாக வாழும் மற்றைய நாடுகளுக்கான இணைப்பாளர்களும், செயற்பாட்டுக்குழுக்களும் அறிவிக்கப்படவுள்ளன.ஏப்பிரல் 2010ல் தேர்தல்களை நடத்துவதறகுரிய வகையில் பணிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. எதிர்வரும் இரண்டு மாத காலங்களுக்கு புலத்துத்தமிழ் சமூகத்துடன் எமது இதுவரையிலான முன்மொழிவு மற்றும் குறிப்பிடப்பட்ட சில கேள்விகள் தொடர்பாகப் பரவலான ஆலோசனைகள் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.இந்தச்சந்தர்ப்பத்தில் அண்மைக்காலமாக எழுப்பபட்டுவரும் சில கேள்விகள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடுகடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத்தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும். புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும். இதனால் நேரிடையாக தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த பிறர் எவரும் நாடுகடந்த அரசுவின் அங்கமாக முடியாது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுவானது தனது முதல் விடயமாக அரசியலமைப்பு நிர்ணயசபையாகச் செயற்படும். மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினது ஆட்சிசார் செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் செயற்படும் அல்லது உருவாக்கப்படும் கட்டமைப்புக்களுடன் எத்தகைய உறவினைப் பேணுவது என்பதை இவ்வாறு நேரிடையாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்.
சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறுசெய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும். எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி:info@govtamileelam.org விசுவநாதன் உருத்திரகுமாரன் இணைப்பாளர்.
 4ம் திகதிக்குன் திகதி எமது வெளியீட்டு கடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது. “வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!! பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து UNGA “புதிய தலைமுறை ஒன்றியம்” செயற்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர். இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும். எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை… • முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும். • அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.
• அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.
• உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.
• உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!
• உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.
• இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.
• நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.
• எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?
• வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …
• ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???
• தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?
• எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???
• நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். • …
இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.
எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன….
அன்பன் அருகன். இத்தாலியில் இருந்து. தொடர்புகளுக்கு arugan@hotmail.it “ இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. முடிவாக எமது கருத்து, எமது திட்டங்களும் போக்குகளும் தமிழீழத்தை உருவாக்க வழிவகுக்குமாக இருந்தால், எதற்காக எமது பக்கம் தங்கள் அமைப்பின்பார்வை செல்லுவதற்குக்குத் தாமதமாகின்றது??? வேகமும் விவேகமும் தனிய கல்வியறிவில் மட்டும் நிலைத்திருக்கமுடியாது என்பதனை எமது தலைவர்அவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாமே!!! எம்முடன் தொடர்பு கொள்ள - arugan@hotmail.it or thesiyam@hotmail.it or info@thesiyam@.org www.thesiyam.org November 04 கடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது. “வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!! பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து UNGA “புதிய தலைமுறை ஒன்றியம்” செயற்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர். இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும். எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை… • முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும். • அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.
• அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.
• உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.
• உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!
• உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.
• இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.
• நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.
• எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?
• வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …
• ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???
• தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?
• எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???
• நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். • …
இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.
எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன….
அன்பன் அருகன். இத்தாலியில் இருந்து. தொடர்புகளுக்கு arugan@hotmail.it “ இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. புதிய தமிழ் ஈழம் வணக்கம் அன்பு உறவுகளே! எமக்கிருக்கும் பிடிவாதம் ஒரு குடையின் கீழும், அறிவுடையோரின் ஆணையின் கீழும் அமையுமாயின் விடிவு கிடைத்து, பல வருடங்கள் ஆகியிருக்கும். நாம்தான் யாரின் சொல்லையும் கேட்கமாட்டோமே!!!. அரசியல் என்றால் என்னவென்று தெரியாதோர் மத்தியில் அரசியல் பேசுகின்றோம்! அரசியல் அறிவுடையோரை அவமதிக்கின்றோம். மனித நேயமில்லாதோருடன் கூடி மனித நேயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு, பொதுநலத்தொண்டு செய்வோரை உதார்சீனப்படுத்துகின்றோம். அநுபூதித்தனமான கருத்துக்களைச் செல்வோரை அவமதித்து எதிரியாக்கி வஞ்சகம் செய்கின்றோம். எம்முயிர் அழிவுகளைக்கண்டும், போலிச்சாட்டுத்தேடுகின்றோம். எமது எதிரியின் திறனையும் பாராட்டும் மனப்பக்குவம் எப் போது எமக்கு வருகின்றதோ, அப்போது நாம் மனித நேயத்தை மதிக்கின்றோம் என்று பொருள். அப்போது உண்மையின் வழி செல்ல முயற்சிக்கின்றோம் என்று பொருள். எமது உறவின் திறனையும் அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க முயற்றிக்க வேண்டும். அவர் எந்த அமைப்பு? அவர் எமக்கு ஆதரவானவரா எதிரானவரா? அவனை விட்டால் எமது தன்மானத்திற்கு இழிவு என்றெல்லாம் பேசியே எமது கையிலிருந்த பழத்தை நழுவி பாலில் விழுவதற்குப்பதிலாக சேற்றில் போட்டுவிட்டோம். அன்றே அருகனின் எழுத்துக்கள் (Malarum ma thamileelam) எடுத்துக்காட்டின… எமக்கு மேல் கருமேகம் சூழப்போகின்றது, எமது பாதைகளை மாற்ற வேண்டும் என்று பல தலைமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் வேற்று நாட்டவர்களின் அறிவிற்குக் கொடுக்கும் முன்னுரிமையினை எமது இனத்தவருக்குக்கொடுக்க மறுத்துவிட்டோம். இதில் ஊடகச் சாதனங்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். லண்டனில் தேர்தலில் நிற்கும் தமிழ்ப் பெண்ணிற்கு சர்வதேச ரீதியில் விளம்பரம், சர்வதேவ செயற்பாட்டில் ஈடுபடும் தமக்குச் சார்பற்ற அல்லது பிற தமிழ் அமைப்பிற்கு எதிர்ப்பிரச்சாரம் அல்லது மௌனம். இது எந்த வகையில் நியாயம். இவ்வாறான செயற்பாடுகள் அறிவுபூர்வமானவை என்பதனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டமையே இன்று எமது பின்னடைவும் அழிவும் என்றால் அது தவறில்லை. பல தமிழர்கள் இப்போதும் கூட்டுக்குள் இருந்து வெளிவர முயலவில்லை. எமக்குச்சாதகம், எமதுபக்கம் மட்டும் நியாயம் என்று பார்த்து, சட்டங்களையும் அரசுகளையும் குற்றம் சுமத்தினோம். திரு சொல்கைம்மை கொச்சைப்படுத்தினோம். சர்வதேசத்தை ஏழனஞ்செய்தோம். இன்னமும் இலங்கையிடம் அடிமைப்பட்டு அவர்களின் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டே, அத்தலைமையினை கேவலமாக எள்ளி நகையாடினோம். கடவுச்சீட்டினைத்தூக்கி எறிந்துவிட்டு, எமது பிறப்பு அத்தாட்சியைத் தொலைத்துவிட்டு, இலங்கைப்பதிவினை ஒதுக்கிவிட்டு அத்தலைமையைக்குறை செல்லவேண்டும். எமது கோரிக்கை நியாயமானது எமது போராட்டம் நியாயமானது. அதற்காக எதிரியாகக்கருதப்படுவோரை தாழ்வாகவோ, கோளையாகவோ, ஏழனமாகவோ பார்ப்பதும் பழிப்பதும் நீதியானதோ! தலைமைப்பதவிகள் மாற்றத்திற்குரியன. அப்படியிருக்க முன்பிருந்து எமக்கு அநியாயஞ்செய்தோரை ஏன்சும்மா இப்போது விட்டோம். சிங்களவன் என்ற பதத்தைப்பயன்படுத்துகின்றோமே! சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? தமிழர்களுடைய சிக்கல் தெரியாத ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இன்னமும் இருக்கின்றார்களே! சிங்கள அரசியல்வாதிகள் தமிழுக்கான உரிமையைக்கொடுக்கவில்லை. அதை தமிழ் அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய இயலாமைக்கு சிங்களவர் என்ற பதம் சரியானதா? இன்று தமிழர்களான நாம் தமிழுக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கின்றோமா? ஆங்கிலத்தில் பேசுவோர் மட்டுமே அறிவாளிகள் என்று நம்பும் முட்டாள்களாக நாம் இருக்கின்றோம். எந்த ஈழத்தமிழ் அறிவாளிகளின் படைப்பை பிற மொழிகளில் மொழிபெயர்க்க எமக்கொரு அமைப்பு இருக்கிறது. எதையும் நீதியாகச்சொன்னால் உண்மையாகச் சொன்னால், அவர்களுக்கெதிராக கூட்டத்தைச் சேர்க்கின்றோம். மாறாக, அவர்செல்வது என்னவென்று நின்று கேட்க செவிகொடுக்க மறுக்கின்றோம். நல்ல இனம் எம்மினம். தற்போதைய அமைச்சரான திரு கருணாவைப்பற்றி முழுத்தகவலும் தெரியாமலே பலர் அவரைப்பற்றி ஊடகங்களில்கூட, தேசத்துரோகி என்றும் கேவலமான வார்த்தைகளாலும் எள்ளி நகையாடினர். அவருக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்தது என்ன??? பல விடயங்களை மறைத்துப்பேசுகின்றோம். எமது சிறப்புகளை புளுகித்தள்ளுகின்றோம். எமது அறிவினை வளர்ப்பதற்குப்பதிலாக மங்கச்செய்கின்றோம். இன்று உலகரீதியில் மேற்கொள்ளும் விடயங்கள் அருகனால் பல வருடங்களுக்கு முன்னால் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அவரை பலர் நச்சரித்துத்தள்ளினர். இப்போதும் அவருக்கெதிராக சில அமைப்புக்கள் வகைதேடுகின்றனர். தமிழர்களுக்காக உலக ரீதியில் பாடுபடும் அவரின் சேவையினைக் கொச்சைப்படுத்துகின்றனர். பத்துவருடத்திற்கும் மேலான துணைவியாருடன் இணைந்த அவருடைய சேவையினை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? எந்த ஊடகம் அவர்களை உற்று நோக்கியது?… தமிழர்களுக்காக அவர்கள் பட்ட பாடுகளை பதிவுகள் தெளிவுபடுத்தும். இப்படி இருக்க எத்தனை தமிழ் உறவினை இன்றுவரை பலிகொடுத்துள்ளோம்??? புலத்திலும் சரி நிலத்திலுஞ்சரி இழந்த உயிர்களின் விலை என்ன??? எப்போதுமே தத்துவங்களும் தத்துவவாதிகளும் அநர்த்தகாலத்தில் மதிக்கப்பட்டதாகவோ, கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே சரித்திரம் காட்டவில்லையே!!! உண்மைகளையும் நீதிகளையும் எடுத்துக்காட்டும்போது, ஒருபக்கத்தாருக்கு பாதகமாகவே காணப்படும் என்பது உண்மையே!!! இந்தவகையிலேயே அருகனின் கருத்துக்களும் காணப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது... “இரத்தம்சிந்தாமல் சமாதானம்” என்பதே அருகனின் திட்டம் அதை யாரும் அப்போதும் ஏற்கவில்லை இப்போதும் கேட்கவில்லை ஆனால் அவரின் அடிகள் இன்றும் தமிழர்களுக்காய்த் தொடர்கின்றது. - ஒன்றியத்தின் சார்பில் -
|