“ஒரு தலைமுறையையே நாசமாக்கிய எமது போராட்டம்” – Arugan

 

ஒரு தலைமுறைக்கு மேலாக எமது கலைபெரும் வெள்ளத்தை அடித்துச்சென்ற கடந்த காலப்போராட்டத்தை என்னவென்பது?

ஆயிரம் ஆயிரம் இளையோரின் ஆதங்கங்கள், ஆசைகள், எண்ணக்கனவுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்ட துன்பச்சம்பவத்தை நினைக்காமல், எமது தவறான தலைமைகள் மூடிமறைத்துத் தாளம் போடும் வரலாறு கொஞ்ச நெஞ்சமா? இவையெல்லாம் தேசவிடுதலைக்கென்று விடிவற்ற போக்கிலேயே மீண்டும் மீண்டும் தள்ளுகின்றனர்.

காலகாலமாய் கண்ணீரோடு காலங்கள் கடத்தும் அளவிற்கு நடந்தேறிய துன்பச்சம்பவத்தை சும்மா ஒன்றும் நடக்காதது போல் பொதுக்கூட்டமாம் தேர்தலாம் … ம் ம் ம் "எல்லாம் அரசியல்" என்பது போல் சாதாரணமாகிவிட்டது…

ஒரு இனத்தின் அழிவையே நாம் உருவாக்கிவிட்டு பிறர் மீது பழியைப்போடுகின்றோம். எமது இனத்தின் அழிவிற்கு நாமே காரணமாக இருந்து விட்டு சிங்களவனை தூற்றுகின்றோம்.

வல்லமை உள்ளவனை சாணக்கியத்தாலே மட்டுமே வெல்லமுடியும் என்பதை இப்போதும் உணராது மக்கள் மத்தியில் சிதைவை ஏற்படுத்துகின்றனர் போலித்தலைவர்கள்… இதில் வெட்டிப்பேச்சுக்கள் வேறு… இலங்கையின் பலமிக்க ஒரு எதிர்க்கட்சியாகக்கூடிய பெரும் சந்தர்ப்பத்தையே தாயகத்தில் இழந்து விட்டது இன்னொரு பெரும் குறையாக யாருக்கும் தெரியவில்லை, முன்னைய தேர்தலில் 22 க்கும் மேலான தமிழ்ப்பாராளமன்ற உறுப்பினர்கள் இருந்தும் எதையும் சாதிக்காதவர்கள் அதைவிடக்குறைவான உறுப்பினர்களை இப்போது வைத்து எதை வெட்டி வீழ்த்தப்போகின்றார்கள்… புலத்தில் அரசமைப்போரென்று தம்மை அறிமுகப்படுத்தியோர் இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமே இல்லையாம் என்றது போல், கண்மூடி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தாயகத்தமிழர்களின் நலன்கருதியே இவ்வமைப்பை நடாத்துகின்றார்களாம். இதை அனைத்து மக்களும் நம்பியே ஆகவேண்டும். இதில் திறனும் சாணக்கியமும் உள்ளவர்களை ஒதுக்கியே இத்தேர்தல் மற்றும் அமைப்புக்கள் என்று சொல்லப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயற்பாடுகள் நடந்தேறுகின்றன… அருகன்.

Lascia un commento