Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help

அருகன்

புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy

Arugan Maximin

Occupation
Location
Interests
இத்தாலியின் தமிழ் எழுத்தாளர் - கவிதை, கட்டுரை, கதை, அரசியல், வரலாறு, விமர்சனம், செய்தி, தகவல், போன்ற ஏராளம் தகவல் உள்ளடங்கிய இணையத்தளம். தொடர்புகளுக்கு +39 3204031624

இணையத்தின்மூலம் கருத்துக்களைப்பரிமாற்றுவதற்கு Skype- arugan2008 படுத்தலாம் நன்றிகள்.

வெளிநாட்டவர்களுக்கான அலுவலகங்களில் சந்திப்பதற்கான இடமும் நேரங்களும்...

திங்கள் காலை றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
செவ்வாய் சாந்திலாறியோ (Sant'ilario )நகரசபை
புதன் ஸ்கந்தியானோ (Scandiano)நகரசபை
வியாளன் ஸ்கந்தியானோ (Scandiano) நகரசபை
வெள்ளி றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
சனி கனோஸ்ஷா (Canossa) நகரசபை

Video

அனுமதியுள்ளோருக்கு
Photo 1 of 50
Photo 1 of 3
More albums (1)
கல்வி
இத்தாலியில் இருந்து
No list items have been added yet.
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
November 23

நிலத்தில் விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை!!! என்று சிங்களவர் கேலி செய்யாரோ?

யாரையோ கேவலப்படுத்துவதாக நினைத்து தமிழர்களுக்காக இன்றுவரை தம்முயிரைக் ஈந்த புலிகளின் அதி தூய  மதிப்பை இலங்கை அரசு கறைப்படுத்த எத்தணிக்கும் போது அதை மென்மேலும் தமிழர்களே ஆதரவாக செயற்படுவது தமிழர்களின் அறிவின்மையைக்காட்டுகின்றது. இது புலிகளைப் பெருமைப்படுத்துமா அல்லது, இலங்கை அரசை சிறுமைப்படுத்துமா… தமிழர்கள் மத்தியில் தற்பெருமை கொள்ளலாம் ஆனால் சட்டம் உண்மை சர்வதேசம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. தமிழர்களின் மூலை முடுக்கிலிருக்கும் அனைதஇது இணையமும் இலங்கை அரசின் கண்காணிப்பில் செல்லாது என்பது தங்கள் எண்ணம் போலும். வீரம் என்பது வேறு விவேகம் என்பது வேறு… இந்த செயல் வீரமா வீவேகமா???

சர்வதேச அரசியலை தமிழ்ச் சிறுவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் மதிப்பிற்குரிய நாளினை எவ்வாறு நாம் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே அவசியம். எமக்கு விடுதலையும், சுபீட்ஷமும், எம்மை நாம் ஆழக்கூடிய அதிகாரமுமே எமக்கு வேண்டியது… சிங்களவனை அடிமைப்படுத்துவதோ அல்லது கேவலப்படுத்துவதோ அவசியமற்றது. குhரணம் தமிழீழம் அமையுமாயின் சிறீலங்க எமது விரோதியோ நண்பனோ எதுவாக இருந்தாலும் அது அயல்நாடு. சர்வதேச விஸ்தரிப்பிற்கு அது அவசியம் என்ற அடிப்படை நியமணங்களை   இப்போதிருந்தே தமிழர்களின் சிறு பிள்ளைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்

பின்னுள்ள இந்த பகுதி தமிழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது...

இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்

21 November, 2009 by admin

தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார்.

November 20

புதிய தலைமைக்கு… தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!

புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!   மேலும் வாசிக்க »

புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!

4100212202_2fbb395c68_m புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!     

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எப்போது பார்த்தாலும் கிழக்கின் பக்கமே தனது ஒழியை வீசுகின்றாரே வடக்கின் பக்கமோ அல்லது ஏனைய பக்கமோ அவரின் பார்வை குருடாக இருக்கின்றதோ!!!

தேசிய நல்லிணக்க அமைச்சராக இருந்து, கிழக்கின் நல்லிணக்க அமைச்சராகப்பணியாற்றுகின்றாரோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சின் பதவியைவிட விசேடமாக எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெரும் சந்தர்ப்பம் அவருக்குக்கிடைத்துள்ளது.

புலிகள் அமைப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு, இலங்கை அரசியல் கட்சியிலும் மிகப்பெரிய பொறுப்பு… பழைய புலி பதுங்குவது… மீண்டும் பாய்வதற்கோ? அல்லது,   தன்னைப் பக்குவப்படுத்துவதற்கோ!!! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதே வேளையில் மகிந்தவின் அசைவுகளும் சும்மாயில்லை… ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அடிகளை எடுத்துவைப்பதற்குள் அடுத்த தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது, கானல் நீராகும் என்றிருந்த தேர்தலே கண்ணுக்கெட்டியது என்றால், நிலையில்லாத பதவி எத்தனைதூரம் நிலைக்கப்போகின்றது என்ற வினாவும் எழாமலில்லை…

புலத்தில் புலிகளின் அசைவுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருனாவை உதார்சீனப்படுத்துவதாகவும் அவரைப் பெருமைப்படுத்துவதில் இருந்தும் விலகியே வந்தவர்கள் தற்போது, என்ன செய்வதென்று அறியாது திண்டாடுகின்றார்கள்.

நோர்வே தேர்தல் அவ்வளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதனைக்கூட மூடி மறைக்கப்பார்க்கின்றனர். அதாவது, வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்த வாக்குகள் தற்போது நடைபெற்ற தேர்தலில் வந்து விளவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், நோர்வே தனது போக்கை ஒருபுறம் செலுத்துவதாகவும் உருத்திர குமார் சார்ந்தோர் இன்னொருபுறம் நகர்த்துவதுபோன்றும் காணப்படுகின்றது.

எது எப்படியாயினும். கருணாவின் போக்கில் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் தாமும் கால்பதிக்க முனைகின்றமை தாம் தமிழர்கள் பிரதிநிதியாகாவிட்டாலும், கருணாவை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெரிகின்றது.
ஆரம்பத்தில் இலங்கை அதிபரைக்கேவலப்படுத்தியவர்கள் தற்போது கட்டிப்பிடித்துத்துதி பாடி சமரசம் செய்கின்றார்கள். சிங்கள அதிகாரிகனளை வளைத்துபோட எத்தணிப்பவர்கள் தமிழ் அதிகாரிகளை கால் கழுவப்பார்க்கின்ற தமிழ் ஆhவலர்கள் தமக்கென இட்ட பெயர் தமிழ் தேசியவாதிகள்.

இலங்கையில் சிறுபான்மை என்றொரு இனமே இல்லை என்பது அமைச்சர் கருணாவின் வெளிவார்த்தையாக இருக்கின்றது. இது உண்மையாக இருந்தாலும் சிங்கள கழுகுகள் நம்புவதற்கில்லை. பிரபாவால் திட்டமிடப்பட்ட அரசியல் திட்டம் என்னவென்பது கருணாவிற்கும், பிரபாவிற்கும், தமிழ் செல்வனுக்கும், அன்ரன் பாலசிங்கத்திற்கும் தான் வெளிச்சம் அதில் கருணாவைத்தவிர மற்றைய மூவரும் இப்போது சாட்சி செல்லப்போவதில்லை. இது எமக்கு எட்டிய அரசியலில்லை இலங்கை புலனாய்விற்கும் எட்டியிருக்கும் அதனால் எடுத்த எடுப்பிலேயே கருனா எதையும் தமிழர்களுக்குக்காட்டி விட முடியாது.

அவ்வாறு கருணாவால் காட்டப்படுகின்ற விடயங்களும் புலத்தில் ஒழுங்காக வந்து சேர்வதில் புலிகளின் ஆதரவாளர்கள் தடுத்துசுவர்கட்டியிருக்கின்றார்கள்.

பல வருடங்களாக தலைக்கணமின்றி தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதனை அடித்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காககத்தான் போனது. எனினும் இப்போது, செவிடாக இருந்தாலும் பராவாயில்லை குருடர்கள் போல் பேச்சுக்களை நடத்திப்பார்ப்போம் என்று கங்கணம் கட்டுகின்றனர். 

அப்போதே  தந்தை செல்வா சென்ன வார்த்தை இன்றும் நிலைத்து நிற்கின்றது. தமிழர்களை இனி கடவுளாலும் காக்க முடியாது…
கட்சிகள் அதிகரிக்கின்றனவேயொழிய, தமிழர்களின் வன்மை அதிகரிக்கவில்லை. யார் தலைமையினை ஏற்பது என்ற வினாவிற்கு பலர் விண்ணப்பிக்கின்றனர்… யார் தலைவராவதற்குத் தகுதியுண்டென்றால் அனைவரும் பின்நிற்கின்றனர் … நல்ல வேடிக்கை.
இதோ  புதியதொரு தசாப்தம் உதயமாகின்றது… புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!

மிக்க மகிழ்ச்சி நோர்வே நாடுகடந்த அரசவை…

அருகனின் திட்ட அறிக்கை அவருடைய இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் 15-04-2009 ல்

இது இணையத்தின் மூலம் பெறக்கூடிய அனைத்து முக்கிய அமைப்புக்களின் மின்அஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது...

வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!!

வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!!

பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து  புதிய தலைமுறை ஒன்றியம் UNGA செயற்பட்டு வருகின்றது.

இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம்.

இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர்.

இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர்.

வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும்.

மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றனஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது.

எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும்.

எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை

•    முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.

•    அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.

•    அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.

•    அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.

•    உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.

•    உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!

•    உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.

•    இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.

•    நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.

•    எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் மலரும் மா தமிழீழத்தில்எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?

•    வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம்

•    ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???

•    தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில்ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?

•    எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???

•    நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும்.
•    …

இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.

எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன

எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன….

அன்பன் அருகன்.
இத்தாலியில் இருந்து.

2007ன்  "மலரும் மா தமிழீழம்!,?" என்ற நாவலின் பகுதிகளின் அடிப்படையில்

arugan@hotmail.it 

நிலையான மின்னஞ்சல்

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்

புதன்கிழமை 17 யூன் 2009 இரா.பார்த்தீபன் 

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

- தமிழர் ஓர் தேசிய இனம்

- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.

2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக

 புதிய இளைய தலைமுறையினருடன்” (?) 

இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.

இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா)

பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.

இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.

மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

நிலையற்ற மின்னஞ்சல்

அருகனின் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???

"மலரும் மா தமிழீழம்!,?"

சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 - நாவலில் இருந்து)

“அடிதடி 13”

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும்

இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது.

இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக  பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும்.

கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. 

தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன்.

எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.

இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது.

1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும்,  ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை.

அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை.

எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை. ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள்.

பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே.
ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து வேதனைப்பட்டும், மரணத்தறுவாயில் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும் பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள்.
வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர்.
1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர்.
அதாவது, 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.”

இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. 

“தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல்.

அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம்.

முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

இதற்கு...
எமது தமிழ் அமைப்புக்கள் முட்டைக்குள் கோட்டைகட்டிப்பழகியவர்கள். இன்று ஒரு குடும்ப வாழ்க்கையே நாடு விட்டு உலகு என்று மாறும் போது நம்மவர்கள் மட்டும் கிணற்றுத்தவளைபோல் திட்டமிட்டால் தகாது. எம்மைச் சுற்றியே போராட்டம், எம்மைச்சுற்றியே விமர்சனமும் விளக்மும், எம்மைச்சுற்றியே சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும், எம்மைச்சுற்றியே பாராட்டுக்கள். என்ன திட்டம் இது?

முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா?

“அடிதடி 14”

நாம் என்ன செய்ய வேண்டும்

இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன்.

இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன.      

எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர்.

இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர்   தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி.

இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம்.

இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா?     

ஈழத்தின் பாதை திறக்கிறது…

17 ம் திகதி இரண்டாம் மாதம் 2008ம் ஆண்டு நல்லதொரு பாடத்தினை விடுதலைப்பொராட்டத்திற்குக் காட்டியுள்ளது. அதாவது, Kosovo  தனது தனிநாட்டுப் பிரகண்டனத்தை பலம் பொருந்திய நாடுகளின் பின்னணைவுடன்  வெளிக்காட்டியது. இதில் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அலங்கை அரசிற்க்கும் நல்ல தொரு பட்டப்படிப்பை  கொடுக்கத்தவறவில்லை.

எனினும் நாம் ஒன்றைக்கவனத்தில் கொள்ளவேண்டும், அவ்வமைப்புக்கள் உலகரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குள் இடம்பெறவில்லை. மேலும் அங்கு உலகப்படையின் ஈடுபாடு இருந்து வந்தது என்பது குறிப்பரிடத்தக்கது, இது தொடர்பாக மேலும் தொடரசந்தர்ப்பம் கிடைக்கும்…

எமது தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது விடுதலைப்போராட்டமா அல்லது  தீவிரவாதமா என்ற கோள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். இந்த விடையம்பற்றி எனது ஒவ்வொரு ஆக்கத்திலும் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன்.

விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும்.

பயங்கரவாதம் என்றால்  எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான்.
புதியதொரு நாட்டுப் பிரகண்டனத்தை ஐ.ந ஏற்றுக்கொள்ளுமாயின் ஈழநாட்டுப்பிரகண்டனத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஆனால் எப்போது?, எப்போது அங்கிகாரம் உலகநாடுகளிடம் இருந்து “விடுதலைப் புலிகளுக்குக்” கிடைக்கிறதோ அதன்பின்னர் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு மாற்றப்படுகிறது என்னதனைப்பொறுத்த நிர்ணயிக்கப்படும்.

எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது.

மேலும், உலகளவில் இருப்போர் தேவைப்படும் நேரங்களில் ஸ்தம்பித்து நிற்பதும், எமது ஈழவிடுதலைக்கு தடைக்கற்களாக அமைகிறது. பொதுவாக எமது மக்களின் பழக்கம் எதுவென்றால், தமது பெருமைகளையும் சிறப்பென்று அவர்கள் கருதுவதையும் தமக்குள்ளே பெருமைப்படுத்திக்கொண்டே இருப்பது. வெளியுலகிற்கோ அல்லது பிற மொழியினத்தவருக்கோ தெரிவிப்பதில் பின்னடைவது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், இத்தாலி தேசத்தை எடுத்துக்காட்டுகிறேன். இங்கு “மொறோக்கோ” நாட்டவர் தமது மொழியினையும் தமது தேசத்தவரையும் உலகளவில் உயர்த்துவதில் பின்தங்கியதில்லை.

இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப் படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப் படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது.

இந்த முயற்சியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.

த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும்.

இதோ ஒரு சிறு கதை
ஒரு தேசத்திற்காக அம்மக்கள் கூட்டம் சேர்ந்து போராட்டத்திற்கு என்று அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பும் அந்நாட்டை ஆளும் கொடியவருக்கு எதிராகத் தம்மை இழந்து போராடினர்.
பலவருடங்களாகப் போராடினர்…
உடமைகளை இழந்து போராடினர்…
உறவுகளை இழந்து போராடினர்…
உயிரினையும் இழந்து போராடினர்… முடிவு வருவதாய்த் தெரியவில்லை, அவ்வமைப்பும் பலம்பொருந்திய அரசுடன் போராடக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது, உலகில் ஆங்காங்கே அமைப்புகளை உருவாக்கி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஊடுருவிச் சென்றது…
விடிவு வரவில்லை…

ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர்,

அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது.

மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்…

பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர்
அத் தீவினை ஒரு சிற்றரசாக்கினர் அதனை தமது ஆட்சிப்பரப்பாகப் பிரகண்டனப் படுத்தினர் தம்முடைய புதிய தேசத்திற்காக அவ்வமைப்பின் தலைமைப்பீடம் தன்னுடைய சந்ததிக்காக ஒரு பிரகண்டனத்தையே ஏற்படுத்தியத.

இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர்.

முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம்.

ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்”

மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் ஊனமாகிவிட்டார்களே!!!
இம்மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் தம்முடைய புதிய தேசத்திற்கு வருமானமகியது, இம்மக்களுக்கு தண்டணை வழங்குவதாகச் சொல்லி புதிய நாட்டின் புனரமைப்பிற்கு பணயக்கைதிகளாயினர்.
உலகநாடுகளில் புலம் பெயர்ந்த தம்முடைய அப்பாவி மக்களிடம் இருந்து தண்டப்பணம், அப்பணத்தின்மூலம் ஆங்காங்கே பல்வேறு தொழிலகங்கள், சேவை அமைப்புக்கள் என்ற பேரில் நிதிமையங்கள், ஆயுதத்தால் மக்களின் வாய்களுக்குப் பூட்டு, …
இவ்வாறு அவ்வமைப்பு விழுது விட்ட ஆலமரமாகியது அழிக்கமுடியாத ஆணிவேராகியது.

தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு…)

இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது…
அடிமைத் தனத்திலிருக்கும் மக்களின் விடுதலைக்காக தனது உயிரைப் பணயம்வைத்து  “கூபா” தேசத்தின் காரணகர்த்தாவாகியது…

அதன் விம்பம் இன்றுவரை  “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்…

இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன்.
தமிழர்களுடைய போhரட்டத்தின்  வெளிப்பாடு தெரிவதிலும் பார்க்க, உலகிற்கு தமிழர்களுடைய உரிமைப்பின்னடைவு தெரிய வேண்டும்  அதற்காகத்தான் இது போன்ற ஆக்கங்கள் …

இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே!  இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… 

மேலும் "மலருமா தமிழீழம்" நாவலின் மற்றைய “அடிதடி”கள் இதன்மூலம் வெளிப்படும். காத்திருங்கள்

- இந்த ஆக்கம் போர் அதிகரிக்கும் முன்னே இதனைச்சார்ந்த அமைப்புக்களுக்கு அரசியல் விமர்சக நாவலாக  தெரிவிக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இப்போதும் தான்தோன்றித் தனமாக எனது எழுத்துக்களின் விம்பங்களை செயற்படுத்த எத்தணிக்கின்றார்கள் ஆனால் தாமாக மேற்கொண்டதாக செயற்பட முயற்சிக்கின்றார்கள் இதன் அடுத்த கட்டம் என்ன வென்று அவர்களுக்குத் தெரியுமா???-(26/06/2009),(19/11/2009)

“நாடு கடந்த தமிழீழ அரசு”??? - Arugan

UNGAன் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???

No content has been added yet.

Video

Video

Video